சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

பூச்சி மருந்து போடும் தேனீக்கள்!

Added : செப் 26, 2019 | கருத்துகள் (3)
Advertisement
பூச்சி மருந்து போடும் தேனீக்கள்!

தக்காளி, ஸ்ட்ராபெரி, புளூபெரி, சூரியகாந்தி போன்ற பணப் பயிர்களுக்கு, பூஞ்சைகள் ஒரு பெரிய சவால். பாட்ரைடிஸ் எனப்படும் பூஞ்சைகள் செடியில் வந்துவிட்டால், பழங்கள் மீது சாம்பல் நிறத்தில், ஒரு படலம் ஏற்பட்டுவிடும்.
இதை தவிர்க்க, தேனீக்கள் மூலம், சி.ஆர்-., 7 என்ற பூஞ்சைக்கொல்லியை செடிகளுக்கு செலுத்தலாம் என்று, 'பீ வெக்டாரிங் டெக்னாலஜீஸ்' பரிசோதனை செய்தது.
வர்த்தக ரீதியில் வளர்க்கப்படும் தேனீப் பெட்டிகளில், தேனீக்கள் கிளம்பும் பகுதியில் ஒரு தட்டை வைத்து, அதில், சி.ஆ-., 7 பொடியை துாவி விடுவது.
அதன் மீது தேனீக்களின் கால்கள் படும்போது, பொடி ஒட்டிக் கொள்ளும். பின், தேனீ செடிகளில் போய் அமரும்போது, பூஞ்சைக்கொல்லி பொடியும் உரிய இடங்களில் துாவப்படும்.
சோதனைகளின்போது சிலவகை பழங்களில், பூஞ்சை நோய் தடுக்கப்பட்டதோடு, அவை நல்ல விளைச்சலையும் தந்தன. சி.ஆர்-., 7 பொடிகள் இயற்கை முறையில் தயாரிக்கப்படுவதால், அவை தேனீக்களுக்கு கேடு விளைவிக்காது.
நச்சுள்ள வேதிப் பொருட்களைக் உடைய பூச்சிக்கொல்லி மருந்துகளால், தேனீக்கள் இனமே அழியும் நிலைக்கு வந்துவிட்டன.
இந்தத் தருணத்தில், தேனீக்களை கொண்டே பூஞ்சைக்கொல்லியை தயாரித்திருப்பதால், இதை பயன்படுத்த, அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை, உடனே அனுமதி அளித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ponniyin Selvan - Thanjavur,இந்தியா
01-அக்-201920:58:06 IST Report Abuse
Ponniyin Selvan இரண்டு மூன்று தினங்களாக தினமலர் வலைப்பக்கத்தை திறந்தவுடன் வீடியோ செய்திகள் தன்னிச்சையாக சத்தத்துடன் ஓடுவது எரிச்சலை ஏற்படுத்துகிறது. பழையபடி கிளிக் செய்தால் மட்டுமே வீடியோ செய்திகள் ஓடும்படி மாற்றினால் நலம்.
Rate this:
Share this comment
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
27-செப்-201905:45:48 IST Report Abuse
 nicolethomson அது என்ன CR7 எனப்படும் பொடி ? மேலும் கற்றுக்கொள்ள ஆவலாக இருக்கிறேன்
Rate this:
Share this comment
Cancel
Rajesh - Chennai,இந்தியா
27-செப்-201903:01:30 IST Report Abuse
Rajesh பாவிங்களா தேனீக்களை தொட்டால் மனித இனமே அழிந்துவிடும் ஜாக்கிரதை...........
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X