பொது செய்தி

இந்தியா

டெங்கு காய்ச்சலுக்கு விநோத மருந்து சொன்ன முதல்வர்

Updated : செப் 26, 2019 | Added : செப் 26, 2019 | கருத்துகள் (13)
Advertisement

டெராடூன் : உத்திரகாண்ட் மாநிலத்தில் 4800 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நோய் குணமாக அம்மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் சொன்ன மருந்து அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.





கொசுக்களால் பரவும் நோயான டெங்கு காய்ச்சலால் உத்திரகாண்ட மாநிலத்தில் இந்த ஆண்டு அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் டெராடூனில் டெங்கு காய்ச்சல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ராவத், டெங்கு தொற்று, உத்திரகாண்ட் மாநிலத்தில் அதிகமாக உள்ளது. டெங்கு பாதிப்பு ஏற்பட்டால் யாரும் பயப்பட வேண்டாம். வழக்கமாக காய்ச்சலுக்கு சாப்பிடும் 500 மில்லி கிராம் பாராசிடமால் மாத்திரைக்கு பதிலாக 650 மில்லி கிராம் அளவிலான பாராசிடமால் மாத்திரையை சாப்பிட்டு, சிறிது ஓய்வு எடுத்தால் நோய் சரியாகி விடும் என்றார்.




உத்திரகாண்டின் டேராடூனில் மட்டும் 3000 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. டெங்குவிற்கு இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஆனால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களில் இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை எனவும் முதல்வர் ராவத் தெரிவித்துள்ளார். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மிக சாதாரணமாக முதல்வர் பேசி உள்ளது பலரையும் அதிருப்தி அடைய வைத்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kannan - Bangalore,இந்தியா
26-செப்-201914:06:24 IST Report Abuse
kannan இங்கு சிலர் குறிப்பிட்டதுபோல, டெங்குக்கு நேரிடையாக மருந்துகள் இல்லை. நானும் இதை அனுபவித்தேன். நான் அலோபதியை நாடவில்லை. சித்தமருத்துவம் எடுத்துக்கொண்டேன். ஒரு வாரம் வீட்டிலிருந்து வேலை பார்த்தேன். நிறைய சாத்துக்குடி சாரும் தண்ணீரும் பருகினேன். மூன்றாம் நாளிலிருந்து platelets அதிகரித்தது. சித்தமருத்துவ மொத்த செலவு ரூ 300 மற்றும் blood test ரூ 500 .
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
26-செப்-201913:56:44 IST Report Abuse
தமிழ்வேல் தலைப்பில் உள்ளதுபோல அவர் அந்த "காய்ச்சலுக்கு"தான் மருந்து சொல்லி உள்ளார். இது விநோதமல்ல. 18, 20 வயதை தாண்டியவர்கள் ஒவ்வொரு முறையும் 1000 மில்லி கிராம் எடுத்துக்கொள்ளலாம். குறைந்து எடுத்து பிரயோசனமில்லை.
Rate this:
Share this comment
Cancel
26-செப்-201913:18:45 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் செய்தியின் தலைப்பே தவறாக இருக்கிறது, டெங்கு போன்ற வைரஸ் நோய்களுக்கு தடுப்பு, எதிர்ப்பு மருந்துகள் இல்லை, வெறும் பாராசிட்டமால் மட்டுமே தரப்படுகிறது. உணவு உட்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டால், நரம்பு மூலம் குளுக்கோஸ் ஏற்றுவார்கள். மூன்று வருடங்களுக்கு முன்பு என் மகனுக்கு இந்த நோய் வந்தபோது இதுதான் சிகிச்சை அளித்தார்கள். அரிதாக ஒரு சிலருக்கு மூக்கில் ரத்தம் வடிந்தால் மட்டுமே ரத்தம் ஏற்றுவார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X