மோடியை ஏற்காதவர்கள் இந்தியரில்லை: மத்திய அமைச்சர்

Updated : செப் 26, 2019 | Added : செப் 26, 2019 | கருத்துகள் (52)
Advertisement

புதுடில்லி : இந்தியாவின் தந்தையாக மோடியை ஏற்க தயாராக இல்லாதவர்கள் தங்களை இந்தியர்கள் என சொல்லிக் கொள்ள முடியாது என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.





செப்.,22 ம் தேதி அமெரிக்காவின் ஹூஸ்டனில் நடந்த ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் டிரம்ப், ஏராளமான பிரச்னைகள் சண்டைகள் இருந்த போதிலும் மக்களை ஒன்றுபடுத்திய பிரதமர் மோடி, இந்தியாவின் தந்தை என புகழ்ந்து பேசினார். அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்த வார்த்தைக்கு காங்., கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.




இந்நிலையில் இது பற்றி கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், வெளிநாட்டில் வசிப்பவர்கள் என பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது பிரதமர் மோடி என்ற தனிநபர் மற்றும் தகுதியாலேயே ஏற்பட்டது. அமெரிக்க அதிபரிடம் இருந்து முதல் முறையாக இது போன்றதொரு வார்த்தை வந்துள்ளது. வேறு எந்த தலைவரையும் இல்லாமல் இந்திய பிரதமரை மட்டும் பாராட்டி உள்ளார். இதனால் பெருமை கொள்ளாதவர்களை இந்தியர்களாகவே கருத முடியாது. டிரம்ப் பேசியதில் காங்.,க்கு ஏதாவது பிரச்னை என்றால் அவரிடம் நேரடியாக வாதம் செய்யட்டும் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (52)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RM -  ( Posted via: Dinamalar Android App )
26-செப்-201923:57:13 IST Report Abuse
RM Mahatma periappa, Modichithappa,Amitsha big uncle,Nirmala patti,(Panapetti incharge). All indians are brothers and sisters.
Rate this:
Share this comment
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
26-செப்-201920:41:54 IST Report Abuse
Visu Iyer பிரதமரின் தேர்தலில் வெற்றி குறித்து சந்தேகம் உள்ளது என்பது போல உள்ளது இவருடைய பேச்சு.. இப்பவும் தெரியவில்லையா ...? தேர்தலில் .... வெற்றி எப்படி கிடைத்தது என்று...?
Rate this:
Share this comment
Cancel
வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா
26-செப்-201920:13:54 IST Report Abuse
வந்தியதேவன் ஹய்யா... அப்ப, அமைச்சர் சொல்வதிலிருந்து... நான் “இந்தியன்” இல்லை...? கரெட்டா...? என்னடா இது.. இந்தியாவுக்கு வந்த சோதனை...?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X