மன்மோகன் மட்டுமே நாட்டை காப்பற்றுவார்: சிதம்பரம்

Updated : செப் 26, 2019 | Added : செப் 26, 2019 | கருத்துகள் (139)
Advertisement

புதுடில்லி : தற்போதைய பொருளாதார சரிவில் இருந்து மன்மோகன் சிங்கால் மட்டுமே நாட்டை காப்பாற்ற முடியும். மத்திய அரசு மன்மோகனின் யோசனைகளை கேட்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ.,யால் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார், ப.சிதம்பரம். இருந்தாலும் இவரது டுவிட்டர் பக்கம் துடிப்புடன் இயங்கி வருகிறது. இவரது சார்பில் இவரின் குடும்பத்தினர்கள் பதிவிடுவதாக கூறி தினம் ஒரு டுவீட் பதிவிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு வாழ்த்து கூறியும், அவரை புகழ்ந்தும் ப.சிதம்பரம் சார்பில் கருத்து பதிவிடப்பட்டுள்ளது.

சிதம்பரம் தனது டுவீட்டில், மன்மோகன் சிங்கிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் 100 ஆண்டுகளுக்கும் வாழ வாழ்த்துகிறேன். மன்மோகன் சிங்கின் யோசனைகளை கேட்க வேண்டும் என அரசை வலியுறுத்துகிறேன். தற்போதைய பொருளாதார சரிவில் இருந்து மீட்கும் சரியான வழியை ஒருவரால் காட்ட முடியும் என்றால், அது மன்மோகன் சிங்கால் மட்டுமே முடியும்.

பொருளாதார சரிவிற்கான முக்கியமான காரண காரணி என்ன என்பதை புரிந்து கொள்ளாமல் இருப்பது தான் அரசு செயல்பாடுகளில் இருக்கும் அடிப்படை தவறு. தேவையில் உள்ள குறைபாடு, வேலைவாய்ப்பு, சம்பளம், வாய்ப்புக்கள் ஆகியவற்றின் வளர்ச்சி மீதான அவநம்பிக்கை ஆகியன பெரிய பிரச்னையாக உள்ளது. இவ்வாறு சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (139)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
30-செப்-201919:05:41 IST Report Abuse
Poongavoor Raghupathy மன்மோகன் Singh must give advise to BJP for improving economy in the interest of our Nation. The Political Parties must think our Nation as a whole and not creating enmity and prolonging on enmity. Forget the differences and share ideas for improving the Nation.Manmohan is a learned Economist and a clean safe Politician in Congress. Manmohan is a right man in a wrong Party now. Modi must listen to all economy experts pool the ideas and do what he thinks is good for the Nation. Brainstorming of all stake-holders in our economy is required to be done.
Rate this:
Share this comment
Cancel
cbonf - doha,கத்தார்
29-செப்-201914:18:04 IST Report Abuse
cbonf மன்மோகன் 1991 ல் நாட்டின் நிதி அமைச்சர் ஆனார். அதன் பிறகு தான் விவசாயிகள் தற்கொலை தொடங்கியது. 2014 வரை மன்மோகன் நாட்டின் பிரதம மந்திரி யாக பணி புரிந்தார். சுமார் 10 லக்ஷம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். சுமார் 20 கோடி விவசாயிகள் விவசாயத்தை விட்டு நகரங்களில் குடியேறி மிக பரிதாபகரமான நிலைமையில் வாழ்ந்து வருகிறார்கள். மன்மோகன் இன்னொரு முறை பதவிக்கு வந்தாலோ அல்லது மன்மோகன் யோசனைகளை ஏற்றுக்கொண்டாலோ நாட்டின் ஏழைகள் பட்டினிச்சாவு அடைவார்கள். முதலில் மன்மோகனை கைது செய்து நடந்த எல்லா ஊழல்களிலும் அவர் மீதும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
THENNAVAN - CHENNAI,இந்தியா
28-செப்-201909:40:15 IST Report Abuse
THENNAVAN thirudanidam saavi kodukka solkiraar.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X