அரசியல் செய்தி

தமிழ்நாடு

'பேனர்' விழுந்து பெண் இறந்த விவகாரத்தில் அராஜகம்!

Updated : செப் 27, 2019 | Added : செப் 26, 2019 | கருத்துகள் (99)
Advertisement
பேனர்,  பெண், அராஜகம், சுபஸ்ரீ, அ.தி.மு.க., முன்னாள் கவுன்சிலர், ஜெயகோபால், சென்னை ஐகோர்ட், சென்னை உயர் நீதிமன்றம்

சென்னையில், சட்ட விரோதமாக வைக்கப்பட்ட, 'பேனர்' சரிந்து விழுந்து, பெண் மென்பொறியாளர் இறந்த விவகாரத்தில், அப்பாவி இன்ஸ்பெக்டர், அழகு மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. சம்பந்தப்பட்ட கட்சிக்காரரை காப்பாற்ற, அ.தி.மு.க., அரசு, இந்த அராஜக நாடகத்தை அரங்கேற்றியுள்ளதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்னை, குரோம்பேட்டை, பவானி நகரைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகள், சுபஸ்ரீ, 23; மென்பொறியாளர். இவர், துரைப்பாக்கத்தில் உள்ள, தனியார் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.


தண்ணீர் லாரி


கடந்த, 12ம் தேதி மாலை, பணி முடிந்து, பல்லாவரம் ரேடியல் சாலை வழியாக, இரு சக்கர வாகனத்தில், வீடு திரும்பினார்.பள்ளிக்கரணை அருகே சென்றபோது, ரேடியல் சாலையின் மையப் பகுதியில், சட்ட விரோதமாக வைக்கப்பட்டிருந்த, பேனர் ஒன்று, சுபஸ்ரீ மீது சரிந்து விழுந்தது. இதனால், நிலை தடுமாறி விழுந்தார். அப்போது, பின்னால் வந்த தண்ணீர் லாரி ஏறி, சம்பவ இடத்திலேயே பலியானார்.

பள்ளிக்கரணை, சக்கர வர்த்தி நகரைச் சேர்ந்த, அ.தி.மு.க., முன்னாள் கவுன்சிலர், ஜெயகோபால், 56, என்பவர், தன் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு, முதல்வர், இ.பி.எஸ்., மற்றும் துணை முதல்வர், பன்னீர் செல்வம் படத்துடன் வைத்திருந்த, பேனர் தான், சுபஸ்ரீயின் உயிரை பறித்தது. இந்த விபத்து குறித்து விசாரித்து வரும், பரங்கிமலை போக்குவரத்து போலீசார், உடனடியாக, தண்ணீர் லாரி ஓட்டுனர், மனோஜ், 25, என்பவரை கைது செய்தனர்.

ஆனால், சுபஸ்ரீயின் இறப்புக்கு காரணமான, சட்ட விரோத பேனர் வைத்தவரான, ஜெயகோபால் மீது, வழக்குப் பதிவு செய்யவில்லை.இந்த விவகாரத்தில், சென்னை உயர் நீதிமன்றம், 'குட்டு' வைத்த பின், ஜெயகோபால், இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். மேலும், 'கொலை நோக்கமற்ற மரணம்' என்ற, சட்டப் பிரிவின் கீழ், ஜெயகோபால் மற்றும் அவரது மைத்துனர், மேகநாதன் மீது, வழக்கு பதிந்தனர்.

அதேபோல, பள்ளிக்கரணை போலீசாரும், ஜெயகோபால் மீது, ஜாமினில் வெளிவரக்கூடிய, சாதாரண பிரிவின் கீழ் தான் வழக்கு பதிந்துஉள்ளனர். ஆனால், விபத்து நடந்து, ஒரு உயிர் பறி போய், 15 நாட்களாகியும், ஜெயகோபாலும், அவரது மைத்துனரும் கைது செய்யப்படவில்லை.


கண்டிப்பு



இவர்கள் குடும்பத்துடன் தலைமறைவாகி உள்ளதாகவும், ஐந்து தனிப்படைகள் அமைத்து, தேடி வருவதாகவும், போலீசார், 'கதை' சொல்லி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, '20ம் தேதி, விசாரணைக்கு ஆஜராக வேண்டும்' என, பள்ளிக்கரணை போலீசார், ஜெயகோபாலின் வீட்டில், 'நோட்டீஸ்' ஒட்டினர். இது எதையும், ஜெயகோபால் பொருட்படுத்தவில்லை.

சுபஸ்ரீ பலியான விவகாரத்தில், சென்னை உயர் நீதிமன்றமும், கடுமையான உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.'இன்னும் எத்தனை லிட்டர் ரத்தம் சிந்த வேண்டும் என, எதிர்பார்க்கிறீர்கள்; மனித உயிர்களுக்கு, இது தான் மரியாதையா' எனவும், போலீசை கண்டித்து உள்ளது.'குற்றம் சாட்டப்பட்டவர்களை, எப்போது கைது செய்வீர்கள்; அவர்களை துண்டு விரித்து, வலை வீசி தேடி வருகிறீர்களா?' என, சென்னை உயர் நீதிமன்றம், நேற்று முன்தினம் கூட, சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளது.

இந்நிலையில், அதி.மு.க.,வைச் சேர்ந்த, ஜெயகோபாலை காப்பாற்றும் நோக்கில், பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் பணிபுரியும், அப்பாவி இன்ஸ்பெக்டர் அழகு மீது, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இவருக்கு, '3பி' எனும், 'மெமோ' கொடுக்கப்பட்டு இருப்பதால், அழகுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்காது; நிரந்தர பணி நீக்கமும் செய்யப்படலாம் என, போலீசார் தெரிவிக்கின்றனர்.

நீதிமன்றத்திற்கு பதில் சொல்ல வேண்டும் என்பதற்காக, தன் கட்சிக்காரரை காப்பாற்றும் விதமாக, அ.தி.மு.க., அரசு, அழகு மீது நடவடிக்கை எடுத்து, நாடகம் ஒன்றை அரங்கேற்றி இருப்பதாக, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (99)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
30-செப்-201906:17:31 IST Report Abuse
skv srinivasankrishnaveni மரணம் லேயும் கூடவா இவ்ளோ பேதம் குப்பத்து பொன்னாயிருந்தால் எல்லாரும் வரிஞ்சுகட்டிண்டு க்ரூப்பா கிளம்பி ஆட்டம்போடுவானுக அப்பாவி ஐய்யர் வீட்டுப்பொண்ணுன்னா கண்டுக்கமாட்டானுக இந்த மதமாறின VIP க்களும்திகழேந்து எல்லா கட்ச்சிகளும் கண்டுக்காமப் போயினனிருப்பானுக
Rate this:
Share this comment
Cancel
M.Balakrishnan - Chennai,இந்தியா
27-செப்-201921:36:49 IST Report Abuse
M.Balakrishnan பெறுநர் உயர்திரு மேற்பார்வை பொறியாளர் கன்னியாகுமரி மின்பகிர்மான வட்டம் பார்வதிபுரம், நாகர்கோவில் கன்னியாகுமரி மாவட்டம் ஐயா, பொருள்: உயிர்சேதம், விபத்து ஏற்படும்படியாக பாதுகாப்பற்ற முறையில் அமைக்கப்பட்ட உயர்மின்னழுத்த கம்பி, மின்மாற்றி (11KV network) இவைகளை மாற்றியமைத்தல் - சார்பாக நான் படர்நிலம் பகுதியில் மேற்கண்ட விலாசத்தில் 2015 முதல் வசித்து வருகிறேன். தற்போது வேலைநிமித்தமாக வெளிநாட்டில் இருக்கிறேன். மேற்கண்ட வீட்டில், 85 வயதுக்கு மேலான வயது முதிர்ந்த எனது தாயார், எனது மனைவி, எனது இரண்டு சிறிய குழந்தைகள் வசித்து வருகிறார்கள். நேற்றையதினம் (25.09.2019) எனது வீட்டுக்கு ஓரமாக சுமார் ஒரு அடி இடைவெளியில் புதிதாக இரண்டு மின்கம்பங்கள் நட்டு புதிய மின்மாற்றி அமைக்க முயற்சிக்கிறார்கள். இதனால் எனது வீட்டில் வசிக்க முடியாத பாதுகாப்பற்ற நிலையில் உள்ளோம்.  மேலும், மின்கம்பம் அமைக்கும் போது, பாதுகாப்பு கருதி எதிர்ப்பு தெரிவித்தோம். அப்போது வீட்டிற்கும், உயர்மின்னழுத்த கம்பி, மின்மாற்றி இவைகளை குறைந்தபட்ச கிடைமட்டதூரம் 6 அடிக்கும் மேலாக  இருக்கும்படிதான் அமைப்போம், அதனால் உங்களுக்கு பாதுகாப்பு பிரச்சனை இருக்காது எனக் கூறினார்கள். ஆனால் தற்போது ஒரு அடி இடைவெளியில் உயர்மின்னழுத்த கம்பி, கருவிகளை அமைத்துள்ளார்கள். ஆகவே, மேற்படி உயர்மின்னழுத்த கம்பி, கருவிகளை, விபத்து மற்றும் உயிர் ஆபத்து ஏற்படாதவாறு  பாதுகாப்பான தூரத்தில் மாற்றியமைக்குமாறு வேண்டுகிறேன்.  மேலும், வீட்டு கட்டுமானத்திற்காக, அந்த உயர்மின்னழுத்த கம்பியை மாற்றியமைப்பதற்காக 08.11.2014 அன்று, மணவாளக்குறிச்சி மின்பகிர்மான அலுவலகத்தில் ரூபாய்.80,730/- (ரூபாய் எண்பதாயிரத்து எழுநூற்றி முப்பது) கட்டணம் செலுத்தியுள்ளேன். அதன்படி அந்த உயர்மின்னழுத்த கம்பி பாதையை எனது எல்லையிலிருந்து சுமார் 12 அடி தூரத்தில் மாற்றியமைத்தார்கள்.  தற்போது எனது வீட்டில் பாதுகாப்பற்ற முறையில் சுமார் ஒரு அடி இடைவெளியில் உயர்மின்னழுத்த கம்பி பாதையை அமைக்க முயற்சிக்கிறார்கள். உயர்மின்னழுத்த கட்டுமானத்திற்கான, குறைந்தபட்ச பாதுகாப்பு விதிமுறைகளோ, வழிகாட்டி நெறிமுறைகளோ பின்பற்றப்படாமல், Public safety, tem reliability இவை கருத்தில் கொள்ளாமல் அமைக்கப்பட்ட இந்த உயர்மின்னழுத்த கம்பி, கருவிகளை பழைய பாதையில் மாற்றியமைத்து அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தவிர்ப்பதோடு, சம்பந்தபட்ட மின்வாரிய அதிகாரிகளுக்கு துறை ரீதியான நடவடிக்கை / வழிகாட்டுதல் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.  தாமதிக்கும் காலங்களில் ஏதாவது உயிராபத்து, விபத்து ஏற்படுமாயின், மின்வாரியமே பொறுப்பேற்க வேண்டும் என்பதுடன், தங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவும் நேரிடும். தங்கள் உண்மையுள்ள, M. பாலகிருஷ்ணன்
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
27-செப்-201922:11:35 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்விவசாய நிலங்களில் உயர் அழுத்த மின்சார கோபுரங்கள் குறித்து தங்களின் மேலான கருத்து என்னவோ.. உங்க வாசல் கதவை தட்டும் போது தான் உங்க பிரச்சினை பூதாகரமாக தெரிகிறது அல்லவா? அவ்வளவு பிரச்சினைக்கும் பேசாம இருந்தது போல இதுக்கும் பேசாம இருன்னு சொல்லுவாங்க.. இல்லாட்டி இருக்கவே இருக்கு காவி கூட்டம், வாயை தொறந்தா "ஆன்டி இந்தியன்' ன்னு கூவ....
Rate this:
Share this comment
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
27-செப்-201921:13:31 IST Report Abuse
Matt P ஒரு இளம்பெண் மறைந்தது துரதிர்ஷ்டமானது, பரிதாபமானது ,அனுதாபத்திற்குரியது. ..இந்த பெண் மறையும்போது தமிழகமெங்கும் சட்டத்துக்கு விரோதமாக ஆளும்கட்சியினரின் பேனர்கள் அங்கங்கே தலை தூக்கி கொண்டிருக்கும். ஏனென்றால் நடப்பது நமது ஆட்சி யாரும் நம்மை ஓன்று செய்யமுடியாது என்ற இறுமாப்பு ...சட்டத்துக்கு மீறி அவர்கள் தட்டிகள் வைத்திருக்கிறார்கள் என்றால் , போலீஸ் அதிகாரிகளுக்கு தெரியாதஆ அவைகள் சட்டத்துக்கு மீறி வைக்கப்பட்டிருக்கிறது என்று தெரியாதா? ..அவைகள் அகற்றப்பட்டிருக்க வேண்டாமா? ..யாராக இருந்தாலும் வைத்தவர்களை கண்டுபிடித்து தண்டனை கொடுத்திருக்க வேண்டாமா? லார்ரி ஓட்டுனரை கூட எப்படி தண்டிக்க முடியும் . அதிக இடை வெளி இல்லாததால் அவரால் வண்டியை கட்டு படுத்த முடியாமல் போயிருக்கலாம் ...சட்டத்தை மதிக்காமல் தட்டி வைத்தவர்கள் , அரசின் ஏவல் துறையாகிய காவல் துறை ஆட்சிக்கு வந்தும் கட்சியே பெரிது மக்கள் அல்ல என நிலைக்கும் அரசு ...இவர்கள் தான் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் ....வெளிநாடு போயிட்டு வந்த இடைப்பாடி , ...வெளிநாடுகளில் ...எவ்வள்வு கட்டுக்கோப்பாக சாலைகளும் சாலை ஓரங்களும் இருப்பதை பார்த்திருப்பீர். அதையாவது ச்சரியாக செய்ய பார்க்கவும். ...அப்புறம் தொழில் முன்னேற்றத்தை பற்றி பார்க்கலாம். இடைப்பாடி அரசு மக்களுக்கு இடர்பாடு இல்லாத அரசு என்ற ஒரு நிலை வர காரணமாக இருக்கட்டும் .........................
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X