சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண்களை மிரட்டி பலாத்காரம் வி.சி., கட்சி நிர்வாகி கைது

Added : செப் 26, 2019 | கருத்துகள் (19)
Share
Advertisement
பெண்களை மிரட்டி பலாத்காரம்  வி.சி., கட்சி நிர்வாகி கைது

சேலம்:பல பெண்களை ஆபாச படமெடுத்து அதைக் காட்டி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த வி.சி. கட்சி நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.சேலம் மாவட்டம் தைலாம்பட்டியைச் சேர்ந்தவர் முருகேசன் 43. இவர் மகுடஞ்சாவடி போலீஸ் ஸ்டேஷனில் நேற்று முன்தினம் கொடுத்த புகார்:செப். 25 அதிகாலை 5:30 மணிக்கு இளம்பிள்ளையில் உள்ள இலவச கழிப்பறைக்கு சென்றேன். என் பின்புறம் வந்த ஒருவர் என்னை உரசினார். திரும்பி பார்த்தபோது காகாபாளையத்தில் ஆட்டோ ஓட்டும் மோகன்ராஜ் 42 நின்றிருந்தார்.என் கையை பிடித்து ஒரு பேப்பரை காட்டினார். அதில் இரு ஆண்கள் படம் ஆபாசமாக இருந்தது. 'படத்தில் உள்ளது போல் நீயும் நானும் இருக்கலாமா' எனக் கேட்டார்.நான் மறுத்ததால் ஆபாச வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு புகாரில் கூறப்பட்டிருந்தது.போலீசார் விசாரித்து மோகன்ராஜை கைது செய்தனர். இவர் காகாபாளையம் ஆட்டோ ஸ்டாண்ட் வி.சி. கட்சி தொழிற்சங்க தலைவராக உள்ளார். இவர் கைது செய்யப்பட்ட தகவல் பரவியதால் சில பெண்கள் மகுடஞ்சாவடி போலீசாருக்கு புகார் அனுப்பினர்.
அதில் மோகன்ராஜ் இளம்பிள்ளையைச் சேர்ந்த ஒரு பெண்ணை கடத்திச் சென்று மிரட்டி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட வீடியோ காட்சியை பதிவு செய்து வைத்துள்ளதாகவும் அதேபோல் பல பெண்களின் ஆபாச படங்கள் அவரிடம் உள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து அவரது அலைபேசிகளை கைப்பற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
03-அக்-201917:50:15 IST Report Abuse
skv srinivasankrishnaveni கருணையவேண்டாம் உடனே வெட்டணும் கண்களைதொண்டிகுருடாக்கவேண்டும் பெண்பித்தன் களுக்கெல்லாம் இதுவேதான் முகலாயற்காலத்துலே தண்டனை என்று சொல்லுவாங்க தப்பே இல்லீயே உடனே எவன் பெண்பித்தனாக தெரிஞ்சாலும் ப்ளீஸ் உடனே செய்யவேண்டும் நோ கேசு பல்லக்கு இழுத்தடிப்பு ஏமாந்தால்போலீஸ்காரிகளையேகூட வேட்டையாடும் கூட்டம் தான் இந்தபொம்பளெ பொறுக்கிங்கள்
Rate this:
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
03-அக்-201905:17:42 IST Report Abuse
 nicolethomson இதுதானா சரக்கும் மிடுக்கும் , கோட்டு சூட்டு ஒன்னும் குறையில்லே ஆனா சுத்தமா மனித தன்மையில்லாத இந்த மாதிரி துரோகிகளுக்கு எப்படி தண்டனை கொடுப்பது ?
Rate this:
Cancel
Sankare Eswar - tuas,சிங்கப்பூர்
01-அக்-201907:59:28 IST Report Abuse
Sankare Eswar குருமாவை மிஞ்சிய சீடன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X