லேண்டரை கண்டுபிடிக்க முடியவில்லை : நாசா

Updated : செப் 27, 2019 | Added : செப் 27, 2019 | கருத்துகள் (24) | |
Advertisement
நியூயார்க் : நிலவின் விக்ரம் லேண்டரை, விழுந்த இடத்தை எங்கள் நாட்டு ஆர்பிட்டரால் கண்டுபிடிக்க முடியவில்லை எனவும், நிழலில் லேண்டர் மறைந்திருக்கலாம் எனவும் நாசா தெரிவித்துள்ளது.நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக, 'சந்திரயான்- 2' விண்கலத்தை, 'இஸ்ரோ' செலுத்தியது. இந்த விண்கலத்தில், 'ஆர்பிட்டர் ' சாதனம் திட்டமிட்டபடி, தன் பாதையில் பயணித்து வருகிறது. ரோவர்
Isro, Nasa, chandrayaan-2, vickram lander, விக்ரம் லேண்டர், சந்திரயான்-2, ஆர்பிட்டர், இஸ்ரோ, நாசா,

நியூயார்க் : நிலவின் விக்ரம் லேண்டரை, விழுந்த இடத்தை எங்கள் நாட்டு ஆர்பிட்டரால் கண்டுபிடிக்க முடியவில்லை எனவும், நிழலில் லேண்டர் மறைந்திருக்கலாம் எனவும் நாசா தெரிவித்துள்ளது.

நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக, 'சந்திரயான்- 2' விண்கலத்தை, 'இஸ்ரோ' செலுத்தியது. இந்த விண்கலத்தில், 'ஆர்பிட்டர் ' சாதனம் திட்டமிட்டபடி, தன் பாதையில் பயணித்து வருகிறது. ரோவர் வாகனத்துடன் கூடிய, லேண்டர் சாதனம், இம்மாதம் 7 ம் தேதி நிலவின் மேற்பரப்பில் தரையிறங்க திட்டமிடப்பட்டது. ஆனால், நிலவின் மேற்பரப்பில் இருந்து சில கி.மீ., தூரத்தில் இருந்த போது, பெங்களூரில் உள்ள, இஸ்ரோ கட்டுப்பாடு மையத்துடனான, லேண்டர் சாதனத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. கிட்டத்தட்ட, 95 சதவீதம் வெற்றி கிடைத்த நிலையில், லேண்டர் சாதனத்துடன் தொடர்பு துண்டிக்கப்பட்டது, விஞ்ஞானிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில், அமெரிக்க விண்வெளி ஆய்வு, அமைப்பான, 'நாசா' அனுப்பியுள்ள, நிலவை சுற்றி வரும், ஆர்பிட்டர் சாதனம், விக்ரம் லேண்டர் கருவி விழுந்த பகுதிக்கு அருகே சென்ற போது, தொடர்பு கொள்ள முயற்சித்தது. ஆனால், தொடர்பு ஏதும் கிடைக்கவில்லை. அதேநேரத்தில், விக்ரம் லேண்டர் தரையிறங்குவதற்கு திட்டமிட்ட இடத்தை தனது செயற்கைகோள் கடந்து சென்ற போது, படங்கள் எடுத்ததாகவும், அவற்றை ஆராய்ந்து வருவதாகவும் நாசா கூறியிருந்தது. அந்த படங்கள் தற்போது வெளியிட்டுள்ள நாசா, அதில் விக்ரம் லேண்டரை காண முடியவில்லை என தெரிவித்துள்ளது.


latest tamil newsஇது குறித்து நாசா டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், எங்களது ஆர்பிட்டர் சாதனம், நிலவின் தென்துருவத்தில், விக்ரம் லேண்டர் தரையிறங்குவதாக இருந்த இடத்தை கடந்த 17 ல் படம் எடுத்தது. அதை ஆராய்ந்த போது, விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த படங்கள் எடுக்கப்பட்ட சமயத்தில் நிலவின் அந்த பகுதியில் இருள் சூழ்ந்திருக்கலாம். வரும் அக்டோபர் மாதம் வெளிச்சம் திரும்பும் போது, விக்ரம் லேண்டரை கண்டறிந்து அதை படம் எடுக்கும் பணியில் எங்களது ஆர்பிட்டர் ஈடுபடுத்தப்படும். இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.


latest tamil newsமேலும், விக்ரம் லேண்டர் , ஒரு கடினமான தரையிறக்கத்தை கொண்டிருந்தது. நிலவின் மேற்பரப்பு மலைப்பகுதிகளில் விண்கலத்தின் துல்லியமான இடம் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது.
Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
27-செப்-201920:33:47 IST Report Abuse
Sampath Kumar நம்ம M /G .R ஒரு படத்தில் கதா காலஷேபம் பண்ணுவார் ஆதில் அமாவாசை அணைக்கு சந்திரன் ஏது ?? என்று முடிப்பர் இப்போ உள்ள சூழ் நிலைக்கு அது ரொம்ப பொருத்தம்
Rate this:
Cancel
oce - kadappa,இந்தியா
27-செப்-201919:38:03 IST Report Abuse
oce பூமியில் கிடைக்கும் எரி சக்திகளை விண் கலங்களில் நிரப்பி சந்திரனுக்கு அனுப்புவதை விட அவைகளை சூரிய ஒளியினை பயன்படுத்தி அனுப்ப இயலுமா. பகலும் இரவும் பூமிக்குள் மட்டும் தான். அண்டவெளியில் எப்போதும் சூரிய ஒளி நிரம்பி இருக்கும். கடல் நீர் பூமியை ஆக்ரமிப்பதற்குள் எப்பாடு பட்டாவது இந்த பூமியை விட்டு மனித இனம் வெளியேற வேண்டும்.
Rate this:
Cancel
Babu -  ( Posted via: Dinamalar Android App )
27-செப்-201917:13:57 IST Report Abuse
Babu குற்றவாளிகளை பிடித்து அனுப்பினால், அவர்கள் வேண்டுமென்றே விண்கலத்தை நாசம் செய்யலாம். விண்கலத்தினுள் தற்கொலை செய்து மொத்த திட்டத்தையும் நஷ்டமாக்கலாம். அதுவும் போக மன்ஸ உர்மை கழகத்திற்கு பதில் சொல்ல முடியாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X