புதுடில்லி : ஐ.நா.,வில் நடந்த சார்க் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் இந்தியா-பாக்., நாடுகளின் அமைச்சர்கள் ஒருவர் உரையை மற்றொருவர் புறக்கணித்தள்ளனர்.

வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் இந்திய அமைச்சர் ஜெய்சங்கரும், பாக்., அமைச்சர் ஷா முகம்மது குரேஷியும் கலந்து கொண்டனர். ஆனால் ஜெய்ஷங்கர் உரையாற்றும் போது குரேஷி பங்கேற்கவில்லை. தனது உரையை முடித்து விட்டு, ஜெய்சங்கர் அங்கிருந்து புறப்பட்டு சென்ற பிறகே, குரேஷி அங்கு வந்தார். அதே போன்று குரேஷி தனது உரையை முடிக்கும் வரை ஜெய்சங்கர் திரும்பி வரவேயில்லை. கூட்டத்தில் ஜெய்சங்கர் தனது உரையில் காஷ்மீர் விவகாரம் குறித்து பேசுவார் என்பதால், ஜெய்சங்கரின் உரையை குரேஷி புறக்கணித்ததாக கூறப்படுகிறது.

இது போன்று நடப்பது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டும், வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த சுஷ்மா சுவராஜ், பாக்., வெளியுறவுத்துறை அமைச்சர் உரையை துவங்கும் முன் அங்கிருந்து வெளியேறிச் சென்றார்.