பொது செய்தி

இந்தியா

உதித் சூர்யா தந்தை சஸ்பெண்ட்; உதவியவர் கைது

Updated : செப் 27, 2019 | Added : செப் 27, 2019 | கருத்துகள் (18)
Share
Advertisement

திருவனந்தபுரம்: நீட் நுழைவு தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கில் உதித் சூர்யா மற்றும் குற்றத்தை ஒப்புக்கொண்ட அவரது தந்தை வெங்கடேசன் ஆகியோரை அக்., 10 வரை சிறையில் அடைக்க கோர்ட் உத்தரவிட்டது. இதனால் ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரியில் உதவி பேராசிரியராக இருக்கும் வெங்கடேசன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
மேலும், ஆள்மாறாட்டம் செய்ய கேரளாவை சேர்ந்த நீட் பயிற்சி மையம் உதவியதாக வெங்கடேசன் கூறிய தகவலின் அடிப்படையில் தமிழக சிபிசிஐடி போலீசார், கேரளா விரைந்தனர். திருவனந்தபுரத்தில் ஜார்ஜ் ஜோசப் என்பவர் நடத்தி வரும் நீட் பயிற்சி மையத்தில் விசாரணை மேற்கொண்ட போலீசார், அவரை கைது செய்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sri,India - India,இந்தியா
27-செப்-201919:09:33 IST Report Abuse
 Sri,India விளக்கம் சொல்லாமல் மௌனம் காப்பது ஏன் ??
Rate this:
Cancel
ANANDAKANNAN K - TIRUPPUR,இந்தியா
27-செப்-201918:52:09 IST Report Abuse
ANANDAKANNAN K மக்கள் தான் நன்கு சிந்திக்க வேண்டும், நீட் தேர்வு என்ற ஒரு நடைமுறை உள்ளது அதிலேயே பணம் படைத்தவர்கள் தில்லு முள்ளு பண்ணி தேர்வு எழுதி வெற்றி பெற்று மருத்துவ படிப்பில் சேர்க்கிறார்கள், இதில் நடந்த முறைகேடான நிகழ்வுகளை நாம் ஆராய வேண்டும் 1 .முதலில் இந்த மாணவர் ஒரு மருத்தவ குடும்பம் 2 .இரண்டு வருடமாக நீட் தேர்வில் தேர்ச்சி பெற வில்லை [நம் வீட்டில் ஒரு சாதாரண கும்பத்தை சேர்ந்த மாணவன் இரண்டு ஆண்டுகள் எந்த ஒரு பணியும் செய்யாமல் இருந்தால் என்னவாகும்] 3 .தமிழகத்தில் தேர்வு எழுதாமல் மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்வு எழுதுகிறார் அது இவருக்கு பதிலாக வேறு ஒரு நபர் , இங்கு தான் நாம் சிந்திக்க வேண்டும் தேர்வு அறையில் ஒரு கண்காணிப்பாளர் இருப்பர் அதுக்கு முன் கால் டிக்கெட் கொடுக்கும் போதும் ஒரு அதிகாரி வெரிஃபிகேஷன் நடக்கும், அடுத்து மெடிக்கல் COUNCELLING நடக்கும் போது CERTIFICATE வெரிஃபிகேஷன் நடக்கும், இங்கு எங்கயும் இவரின் புகைப்படம் அறியப்படவில்லயா அல்லது லஞ்சம் பெற்று கொண்டு அனுமதித்தார்களா ?? மேலும் கல்லூரியில் சேரும் போது கூட வெரிஃபிகேஷன் நடக்கும் அப்போ அந்த கல்லூரி நிர்வாகமும் இந்த முறைகேட்டில் உடந்தை தானே, எப்பொழுது இது வெளிவருகிறது, ஒரு ஏ-MAIL மூலம் முதல்வருக்கு புகார் வருகிறது, இப்பதான் போலீஸ் இல் புகார் கொடுக்கிறார் முதல்வர், அப்போ நிர்வாக அதிகாரிகள் நினைத்தால் ஒரு தேர்வு எழுதாத மாணவன் கூட MBBS படிக்க முடியும் பணம் பாதாளம் வரை பாயும் என்று தானே அர்த்தம், உண்மையாக தேர்வு எழுதி வெற்றி பெற்று பணம் என்ற ஓன்று இல்லாத ஒரு ஏழை மாணவனின் மனம் எப்படி வெம்பி இருக்கும், இதுக்கு உடந்தையாக இருந்த அனைவரையும் தூக்கில் தொங்க விட வேண்டும்.
Rate this:
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
27-செப்-201916:58:34 IST Report Abuse
Cheran Perumal நீட் இல்லையென்றால் அந்த இருப்பது லட்சத்தை முன்பணமாக கொடுத்து ஏதேனும் ஒரு தனியார் கல்லூரியில் சேர்த்திருப்பார். இப்படிப்பட்டவர்கள்தான் நீட்டை முழு மூச்சாக எதிர்க்கிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X