அமலாக்கத்துறை முன் ஆஜர் : பவார் திடீர் 'பல்டி'

Updated : செப் 27, 2019 | Added : செப் 27, 2019 | கருத்துகள் (42)
Advertisement

புதுடில்லி: கூட்டுறவு வங்கிக் கடனில் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பாமல், தானாக முன்வந்து இன்று ஆஜராக உள்ளதாக தேசியவாத காங்., கட்சி தலைவர் சரத்பவார் அறிவித்திருந்தார். ஆனால், கடைசி நிமிடத்தில் தான் இன்று ஆஜராக போதில்லை எனவும், தான் எந்த தவறும் செய்யவில்லை எனவும் சரத் பவார் பேட்டி அளித்துள்ளார்.


கூட்டுறவு வங்கிக் கடனில் ரூ.25,000 கோடி பண மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் சரத்பவார், அவரது உறவினர் உள்ளிட்ட பலர் மீது அமலாக்கத்துறை சமீபத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இது தொடர்பாக அப்போது கருத்து தெரிவித்த சரத்பவார், தான் சிறைக்கு செல்ல தயாராக உள்ளதாகவும், அமலாக்கத்துறை முன் செப்.,27 பிற்பகல் 2 மணிக்கு ஆஜராவேன் எனவும் கூறி இருந்தார். ஆனால் அமலாக்கத்துறை சார்பில் சரத்பாவருக்கு எந்த சம்மனும் அனுப்பப்படவில்லை.

இது குறித்து அமலாக்கத்துறை கூறுகையில், அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் அவரை நேரில் அழைத்து விசாரிப்போம் என்றனர். அவருக்கு நாங்கள் சம்மன் அனுப்பவில்லை. நாங்கள் அழைக்காமல் எதற்காக விசாரணைக்கு ஆஜராக உள்ளதாக அவர் கூறினார் என தெரியவில்லை என பதிலளித்துள்ளனர். இந்த வழக்கில் சரத் பவாரிடம் கடைசியாக விசாரிக்கவே முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் சரத் பவார், மும்பை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக உள்ளதால் அவரது கட்சி தொண்டர்கள், அவருக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பியபடி அமலாக்கத்துறை அலுவலகம் முன் கூடி இருந்தனர். மும்பையின் பல பகுதிகளில், குறிப்பாக அமலாக்கத்துறை அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டிருந்தது.
இப்போது விசாரணைக்கு வர வேண்டாம் என அமலாக்கத்துறை கூறியும், நான் வருவேன் என பிடிவாதமாக சரத் பவார் கூறி வந்தார். இந்நிலையில், அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு சரத் பவார் எப்போது கிளம்புவார் என அனைவரும் எதிர்த்து இருந்த சமயத்தில், வீட்டிற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த சரத் பவார், சட்ட ஒழுங்கு பிரச்னை காரணமாக நான் இன்று ஆஜராக போவதில்லை. அமலாக்கத்துறையின் நடவடிக்கை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. நான் எந்த தவறும் செய்யவில்லை. அதனால் எனக்கு எந்த பயமும் இல்லை என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vasan - doha,கத்தார்
27-செப்-201920:57:09 IST Report Abuse
vasan இது இன்னொரு குடும்ப அரசியல் நம்ம ஊரு மஞ்சள் துண்டு குடும்பம் போலவே..100 தலைமுறைக்கு sothu சேர்த்து வச்சி இருக்கார் .சும்மா விடாதீங்க
Rate this:
Share this comment
Cancel
K.P SARATHI - chennai,இந்தியா
27-செப்-201918:17:57 IST Report Abuse
K.P  SARATHI ஒரு பைசா கூட பறிமுதல் செய்ய முடியாத ஒரு விசாரணை வீண், மேலும் இதுவரை கைதானவர்கள் எவ்வளவு பணம் பறிமுதல் செய்யப்பட்டது என்ற விவரம் மக்களுக்கு தெரியவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
27-செப்-201917:02:46 IST Report Abuse
யாரோ இந்த மூஞ்சிய பார்த்தா உங்களுக்கு பாவமா தெரியல?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X