சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நீட் ஆள்மாறாட்டம் : மேலும் 3 மருத்துவ மாணவர்கள் கைது

Updated : செப் 28, 2019 | Added : செப் 28, 2019 | கருத்துகள் (86)
Advertisement

சென்னை : நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் மேலும் 3 மருத்துவ மாணவர்கள் மற்றும் அவர்களின் தந்தையை சிபிசிஐடி போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த விவகாரம் தொடர்பாக உதித்சூர்யா மற்றும் அவரது தந்தை டாக்டர் வெங்கடேசன் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், நேற்று டாக்டர் வெங்கடேசன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதற்கிடையில் ஆள் மாறாட்ட விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதில் காஞ்சிபுரத்தை சேர்ந்த 3 மருத்துவ மாணவர்கள் நேற்று சிக்கிய நிலையில், இன்று மேலும் 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி, விழுப்புரம் மருத்துவ கல்லூரிகளை சேர்ந்த அபிராமி, பிரவீன், ராகுல் ஆகிய 3 பேர் மற்றும் அவர்களின் தந்தையை சிபிசிஐடி போலீசார் இன்று கைது செய்து, விசாரித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் இடைத்தரகர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உதித் சூர்யாவின் தந்தையிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சிபிசிஐடி தற்போது நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் தொடர்ந்து பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருவதாக சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (86)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
30-செப்-201920:12:05 IST Report Abuse
Krishnamurthy Venkatesan நான்1976-77 பழைய SSLC ( 600 மார்க், எலெக்ட்டிவ்ஸ் உண்டு). நிலக்கோட்டை அரசு பள்ளி மாணவன். அப்போது நண்பர்களிடையே படிப்பில்தான் போட்டி வரும். பெற்றோர்களுக்கும் (அனைவரும் நண்பர்களாக பழகுகிறவர்கள்) ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது பிள்ளைகளின் படிப்பு திறனை பற்றி பேசுவார்கள், ஆசிரியர்களை மாதம் ஒருமுறையாவது சந்திப்பார்கள். எனது நண்பர்கள் அனைவரும் மிக உயர்ந்த பதவிகளிலும், ஆசிரியர்களாகவும், தொழில் அதிபர்களாகவும், சிறந்த விவசாயிகளாகவும், ராணுவ வீரர்களாகவும் பணியாற்றி வருகிறார்கள். எல்லோரும் நேர்மையையே கடைபிடித்தோம். குறுக்கு வழி என்பதே இல்லை. அது ஒரு பொற்காலம்.
Rate this:
Share this comment
Cancel
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
30-செப்-201919:57:15 IST Report Abuse
Krishnamurthy Venkatesan எங்கே நமது நாடு/நாம் போய்க்கொண்டிருக்கிறோம்? எதை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறோம்? இந்த ஆள் மாறாட்டம் மிக்க அருவருப்பாக இருக்கிறது. எவரிடத்திலும் (நீட் குழுவில்) நீதி, நேர்மை, கடவுளுக்கு பயப்படுத்தல் எள்ளளவும் இல்லது போயிற்றே. இனி வருங்காலத்தை (இந்தியாவின்/மாணவர்களின்) பணம்தான் முடிவு செய்யுமா?. கயவர்களுக்கு 9யாராக இருப்பினும்) தயவு தாட்சண்யமின்றி உட்சபட்ச தண்டனை கொடுத்தால் தான் இனி எவரும் அத்தகைய தப்பு செய்ய மாட்டார்கள்.
Rate this:
Share this comment
Cancel
29-செப்-201907:45:16 IST Report Abuse
ருத்ரா அத்தனை சோதனைகளையும் மீறி மாணவர்களின் புதிய முகம் தொடர்ந்துள்ளது என்றால் சலவை நோட்டுக்கள் கை மாறியிருப்பவர்களும் கூட்டத்தில் இருப்பான் கண்டுபிடி. இது மிகவும் ஆபத்தான கலப்படம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X