பொது செய்தி

இந்தியா

'மேக் இன் இந்தியா' திட்டத்தில் அடுத்த மைல் கல்: 'எப் - 16' போர் விமானங்கள் ஐதராபாதில் உற்பத்தி

Updated : செப் 30, 2019 | Added : செப் 28, 2019 | கருத்துகள் (30)
Advertisement
மேக் இன் இந்தியா, மைல் கல், எப் - 16, போர் விமானங்கள், ஐதராபாத், உற்பத்தி

புதுடில்லி:நவீன போர் விமானங்களை தயாரிக்கும், அமெரிக்காவை சேர்ந்த, 'லாக்ஹீடு மார்ட்டின் ஏரோனாட்டிக்ஸ்' நிறுவனம், 'எப் - 16' ரக போர் விமானங்களை, அடுத்த ஆண்டு முதல், தெலுங்கானா மாநிலம், ஐதராபாதில் இருந்து உற்பத்தி செய்ய உள்ளதாக, அந்நிறுவன அதிகாரி தெரிவித்தார்.

ரஷ்யா போன்ற நாடுகளிடம் இருந்து, பல ஆண்டுகளுக்கு முன் வாங்கப்பட்ட 'மிக்' ரக போர் விமானங்களை பயன்பாட்டில் இருந்து நீக்கிவிட்டு, புதிய நவீன போர் விமானங்களை வாங்க, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. விமான படைக்கு தேவையான போர் விமானங்கள், ஐரோப்பிய நாடான பிரான்ஸ், ஸ்வீடன் மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளில் இருந்து கொள்முதல் செய்யப்படுகின்றன.

இந்த பட்டியலில், அமெரிக்காவை சேர்ந்த 'லாக்ஹீடு மார்ட்டின்' என்ற நிறுவனமும் இணைந்து உள்ளது. இவர்களிடம் இருந்து, 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான, 114 'எப் - 16' ரக நவீன போர்விமானங்களை வாங்க, இந்திய விமானப்படை முடிவு செய்துள்ளது.பிரதமர் மோடி தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, பல்வேறு துறைகளிலும், 'மேக் இன் இந்தியா' திட்டத்தை செயல்படுத்துவதில், தீவிரம் காட்டி வருகிறது.

ராணுவ தளவாடங்கள் மற்றும் போர் விமானங்களை தயாரிக்கும் வெளிநாட்டு நிறுவனங்களை இந்தியாவில் முதலீடு செய்ய வைத்து, உள்நாட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஏற்படுத்தி, உற்பத்தியை துவக்கும் முயற்சியை, மத்திய அரசு முன்னெடுத்துள்ளது. இதன் மூலம், இந்தியா வில் வேலை வாய்ப்பு பெருகும்.


தயார் நிலை
இது குறித்து, லாக்ஹீடு மார்ட்டின் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனத்தின் திட்டமிடல் மற்றும் வர்த்த மேம்பாட்டு துறை துணை தலைவர், விவேக் லால், செய்தியாளர்களிடம் கூறியதாவது:எங்கள் நிறுவனம், தெலுங்கானா மாநிலம், ஐதராபாதில், ஏற்கனவே உற்பத்தியை துவக்கி விட்டது. 'சி - 130ஜே' ரக போக்கு வரத்து விமானங்களையும், 'சிகோர்ஸ்கை' என்ற ஹெலிகாப்டர்களின் உடல் பாகங்களையும், இங்குள்ள தொழிற்சாலையில் உற்பத்தி செய்து வருகிறோம்.

எனவே, 'மேக் இன் இந்தியா' திட்டத்தில், ஏற்கனவே நாங்கள் அங்கம் வகித்து வருகிறோம்.இந்நிலையில், 'எப் - 16' ரக போர் விமானங்களையும், இங்கேயே தயாரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அடுத்த ஆண்டு முதல், ஐதராபாத் தொழிற்சாலையில், 'எப் - 16' ரக போர் விமானங்கள் தயாரிக்கப்பட்டு, உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்கு விற்பனை செய்யப்படும்.இதன், அடுத்த கட்ட புதிய வடிவமான 'எப் - 21' ரக விமானத்தையும், இங்கேயே தயாரிக்க திட்டமிட்டு உள்ளோம்.

இதற்காக, 'டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ்' என்ற இந்திய நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. விமானத்திற்கான மாதிரி வடிவங்கள், தயார் நிலையில் உள்ளன. அடுத்த ஆண்டு முதல் உற்பத்தி துவங்கும். இதற்கான உதிரி பாகங்கள் தயாரிப்பு, பராமரிப்பு மற்றும் பழுது நீக்கல் பணிகளும், இங்கேயே செய்யப்படும்.


உறுதுணை


உலகம் முழுவதும், 3,000 எப் - 16 ரக போர் விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன. மத்திய கிழக்கு நாடான, பஹ்ரைன் போன்ற நாடுகளும், எப் - 16 விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளன. விற்பனைக்கு பிறகான, பராமரிப்பு சந்தையிலேயே, 1.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் உள்ளது. இது, இந்தியா போன்ற நாடுகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
29-செப்-201916:10:13 IST Report Abuse
Pugazh V The talks have started a decade before, that is since 1998, TASL and Lockheed Martin are in an understanding to start making some components and spare parts for f-16. This is said by the CEO of Lockheed, himself. This particular line of info. is not figuring in this news is not strange. Hee hee hee hee.
Rate this:
Share this comment
blocked user - blocked,மயோட்
29-செப்-201921:54:07 IST Report Abuse
blocked userPlease stop talking rubbish. Talks have been going on for ages. When MOU is signed - money will flow in and people will be on the job....
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
29-செப்-201914:41:06 IST Report Abuse
தமிழ்வேல் F 16 ஐ விட்டுவிட்டு F 21 ஐ உற்பத்தி செய்யவேண்டும். F 16 ரஷ்யாவின் மிக் போல விரைவில் காலாவதி ஆகிவிடும். யாரும் வாங்க மாட்டார்கள்.
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
29-செப்-201914:28:18 IST Report Abuse
ஆரூர் ரங் ஒரேயொரு விமானம் கூட தயாரித்த அனுபவமில்லாத டாட்டாவோடு லாக்ஹீடு எப்படி கூட்டு சேர்ந்து முதலீடு செய்யும்? இதில் மோதி ஊழல் பணியிருக்கிறார். இப்படிக்கு ரஃபால் அம்பானி கூட்டுப்பற்றி விமர்சித்த நகர்ப்புற காங்கிரஸ் நக்சல்கள்
Rate this:
Share this comment
N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா
29-செப்-201916:05:52 IST Report Abuse
 N.Purushothamanஅவனுங்களுக்கு பொய் சொல்றது தான் வேலை ......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X