அரசியல் செய்தி

தமிழ்நாடு

காந்தி சங்கல்ப யாத்திரை: தமிழக பா.ஜ.,வின் புதிய பிரசார திட்டம்

Updated : செப் 29, 2019 | Added : செப் 28, 2019 | கருத்துகள் (3)
Advertisement
காந்தி, சங்கல்ப யாத்திரை, தமிழக பா.ஜ., பிரசார திட்டம்

மகாத்மா காந்தியின், 150வது பிறந்த நாளை ஒட்டி, தமிழக பா.ஜ.,வினர், கதர் ஆடை அணிந்து, லோக்சபா தொகுதிகள் வாரியாக, காந்தி சங்கல்ப யாத்திரையை துவக்குகின்றனர்; நாளை முதல், 15 நாட்கள் நடக்கும் பாதயாத்திரையின் போது, மத்திய அரசின் சாதனைகளை, மக்களிடம் பிரசாரம் செய்ய உள்ளனர்.


அஹிம்சை



தமிழக பா.ஜ., தலைமை அலுவலகமான, சென்னை, கமலாலயத்தில், காந்தியடிகளின், 150வது பிறந்த நாள் விழா ஆலோசனை கூட்டம், சமீபத்தில் நடந்தது. அதில், மூத்த தலைவர், இல.கணேசன் உட்பட, 75 பேர் பங்கேற்றனர். அவர்களிடம், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, பா.ஜ., தேசிய தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷா, செயல் தலைவர், ஜே.பி.நட்டா, மத்திய நிதித்துறை இணை அமைச்சர், அனுராக்சிங் தாகூர் ஆகியோர் பேசினர்.

அவர்கள் கூறியதாவது:காந்தியடிகளின், 150வது பிறந்த நாள் விழாவை, நாடு முழுவதும், பா.ஜ.,வினர் கொண்டாட வேண்டும். நாட்டின் சுதந்திரத்திற்காக, பா.ஜ.,வினர் பாடுபட்ட வரலாறை, பொது மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும்.

காந்தியடிகளின் கொள்கைகளை, பா.ஜ.,வினர் மட்டும் தான் கடைபிடிக்கின்றனர்; வேறு எந்த கட்சியினரும் கடைபிடிக்கவில்லை. சுதேசி, காதி, தன்னிறைவு, துாய்மை, அஹிம்சை, கண்ணியம், அனுசரித்தல், அரவணைத்தல், பாராட்டுதல், காருண்யம் போன்ற, காந்தியின் கோட்பாடுகளை, மக்களிடம் பிரசாரம் செய்ய வேண்டும்.

கட்சியில் உள்ள, 70 ஆயிரம் நிர்வாகிகளும், இதில் பங்கேற்க வேண்டும். ஒருவர் குறைந்த பட்சம், 15 கி.மீ., வரை, பாதயாத்திரை செல்ல வேண்டும். தினமும், 50 முதல், 100 பேர் வரை நடக்க வேண்டும்.கொள்கை இல்லாத அரசியல், உழைப்பு இல்லாத செல்வம், நன்னெறி இல்லாத வியாபாரம், குணமற்ற கல்வி, மனிதத் தன்மையற்ற விஞ்ஞானம், மனசாட்சியற்ற இன்பம், தியாகமில்லாத வழிபாடு என, காந்தியடிகள் எடுத்துரைத்த, ஏழு பாவங்கள் பற்றியும், அவற்றிற்கு என்ன பரிகாரம் என்பதையும், பொது மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும்.




உத்தரவு



'முத்ரா' கடன் திட்டத்தினால், தமிழக பா.ஜ.,வை சேர்ந்த தொண்டர்கள் பயன் பெற வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து வங்கிகளிலும், தலா ஒன்றில்,5 தொண்டர்களின் குடும்பத்திற்கு, முத்ரா கடன் பெற்று கொடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் பேசினர்.

இதையடுத்து, லோக்சபா தொகுதிகள் வாரியாக, பாதயாத்திரை பொறுப்பாளர்களை, பா.ஜ., மேலிடம் நியமித்துள்ளது. கன்னியாகுமரி, துாத்துக்குடி, விருதுநகர் லோக்சபா தொகுதிகளுக்கு, பொன்.ராதாகிருஷ்ணன்; விழுப்புரம், கடலுார் ஆகிய தொகுதிகளுக்கு, கே.டி.ராகவன் நியமிக்கப் பட்டு உள்ளனர்.கோவை,சேலம், ஈரோடு, திருச்சிக்கு வானதி சீனிவாசன்; சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூருக்கு சக்கரவர்த்தி, நிர்மல்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தஞ்சாவூர், ராமநாதபுரம், சிவகங்கை லோக்சபா தொகுதிகளுக்கு, கருப்பு முருகானந்தம் என, 39 தொகுதிகளுக்கும்பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மூத்த தலைவர், இல.கணேசன், அனைத்து தொகுதிகளுக்கும் பொறுப்பாளராக உள்ளார். லோக்சபா தொகுதிகள் வாரியாக நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள் தலைமையில், பா.ஜ.,வினர் நாளை பாதயாத்திரையை துவக்குகின்றனர். தொடர்ந்து, 15 நாட்கள், தொகுதிகளுக்குள், கதர் ஆடைகளை அணிந்து, பிரசாரம் செய்ய வேண்டும். ஆடம்பர உடை உடுத்தக் கூடாது.
எளிமையை மக்களிடம் வெளிப்படுத்தும் வகையில், சணல், துணி பைகளை எடுத்து செல்ல வேண்டும். 'பிளாஸ்டிக்' பாதிப்புகள் குறித்து, மக்களிடம் சொல்ல வேண்டும்.
மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மத்திய அரசு கொண்டு வந்துள்ள, 'டிஜிட்டல் இந்தியா' திட்டங்கள், அவற்றின் பயன்கள் குறித்து, குறைந்தபட்சம், ஐந்து பேருக்கு எடுத்துரைக்க வேண்டும் என, கட்சியினருக்கு, பா.ஜ., மேலிடம் சரமாரி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pattikkaattaan - Muscat,ஓமன்
29-செப்-201912:11:42 IST Report Abuse
pattikkaattaan காந்தியைப்பற்றி பிஜேபியினர் பிரச்சாரம் செய்வது நடக்குமா ?.. சென்ற வருடம் காந்தி படத்தையே ஒருவர் துப்பாக்கியால் சுட்டார் .. காந்தியை வெறுப்பவர்கள் எதற்க்காக வேஷம் போடவேண்டும் ?.. வோட்டுக்காகவா ?..
Rate this:
Share this comment
blocked user - blocked,மயோட்
29-செப்-201912:47:12 IST Report Abuse
blocked userநேரு குடும்பம் காந்தியை ஒரு வர்த்தக விளம்பரப் பொருளாகவே பார்த்தது, பார்க்கிறது, பார்க்காது என்று நம்ப வாய்ப்பும் இல்லை. காந்தியை கடவுள் என்று நினைத்து இருந்தால் நேரு குடும்பம் ஏன் அவர் பெயரை திருடவேண்டும்? ஜனநாயகம் என்று வந்தால் நேருவை விட படேல் யோக்கியர், திறமைசாலி. அவருக்கு பிரதமர் பதவியை கொடுத்து இருக்கலாம். குறைந்தபட்சம் நேதாஜியையாவது மரியாதையுடன் நடத்தி இருக்க நேருவை வற்புறுத்தி இருக்கலாம். இம்சை வழியில் சுதந்திரம் வரவில்லை என்ற உண்மை ஆசிய நாடுகள் அனைத்துக்கும், பிரிட்டனுக்கும் ஏன் இரஷ்யாவுக்கும் கூட தெரியும். இந்திய மக்கள் ஏமாற்றப்பட்டார்கள்....
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
29-செப்-201908:01:37 IST Report Abuse
blocked user கீதை படித்தால் பயமே வராதாம்... ஆனால் கீதை படித்து அகிம்சை என்ற ஒரு இம்சயை உருவாக்கி மானத்தை வாங்கியவர் காந்தி. அவரை தலையில் தூக்கி வைத்து ஆடுவது ஏற்புடையது அல்ல. முரண்பாடான மனிதரை தேசத்தந்தை என்று போற்றுவது கூட தவறுதான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X