அரசியல் செய்தி

தமிழ்நாடு

காங்கிரஸ் வேட்பாளர் தேர்வு: தி.மு.க., அதிருப்தி?

Updated : செப் 29, 2019 | Added : செப் 28, 2019 | கருத்துகள் (33)
Advertisement
காங்., வேட்பாளர்,தி.மு.க., அதிருப்தி,நாங்குநேரி

நாங்குநேரி சட்டசபை தொகுதி, காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில், தி.மு.க., அதிருப்தி அடைந்துள்ளது. சென்னையில் வசிப்பவரை, நாங்குநேரியில் போட்டியிட வைத்துள்ளதை, அக்கட்சி விரும்பவில்லை.

தமிழகத்தில், விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டசபை தொகுதிகளுக்கு, அக்., 21ம் தேதி, இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இரு தொகுதிகளிலும், அ.தி.மு.க., சார்பில், உள்ளூரை சேர்ந்தவர்கள், வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளனர். விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும், தி.மு.க., சார்பில், அந்த தொகுதியை சேர்ந்த உள்ளூர் நிர்வாகியே, வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளார்.

ஆனால், நாங்குநேரி தொகுதியில், காங்கிரஸ் கட்சி, சென்னையில் வசிக் கும், ரூபி மனோகரனை, வேட்பாளராக நிறுத்தியுள்ளது. இவர், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர். தற்போது, காஞ்சிபுரம் மாவட்டத்தில், காங்கிரஸ் நிர்வாகியாக பதவி வகித்து வருகிறார். வசதி படைத்தவர்; தாராளமாக செலவு செய்வார் என்ற காரணத்தால், இவரை, வேட்பாளராக நிறுத்தி உள்ளனர்.இது, உள்ளூர் காங்கிரஸ் நிர்வாகிகளிடம் மட்டு மின்றி, திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த, தி.மு.க., நிர்வாகிகளுக்கும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

அ.தி.மு.க.,வில், தொகுதியை சேர்ந்தவரே வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளதால், காங்., கட்சியும், உள்ளூர் நிர்வாகி ஒருவருக்கு வாய்ப்பளிக்கும் என, தி.மு.க., நிர்வாகிகள் எதிர் பார்த்தனர். அது நடக்காதது, அவர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.அ.தி.மு.க., வேட்பாளர், நாராயணன், ஹிந்து நாடார் வகுப்பை சேர்ந்தவர். காங்கிரஸ் வேட்பாளர், ரூபி மனோகரன், கிறிஸ்தவ நாடார். நாங்குநேரி தொகுதியில், ஹிந்து நாடார் வகுப்பை சேர்ந்தவர்கள், 24 சதவீதம் பேர் உள்ளனர். கிறிஸ்தவ நாடார் வகுப்பை சேர்ந்தவர்கள், 8 சதவீதம் தான் உள்ளனர். இதுவும், தி.மு.க.,வினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

'நாங்குநேரியை மேம்படுத்துவேன்!'

நாங்குநேரி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க., கூட்டணியில், காங்., வேட்பாளராக, ரூபி மனோகரன் அறிவிக்கப்பட்டுள்ளார். நேற்று காலை, கிழக்கு தாம்பரத்தில் உள்ள, அவரது இல்லத்தில், கட்சி நிர்வாகிகள், அவரை சந்தித்து, மாலை அணிவித்து, வாழ்த்து தெரிவித்தனர். அப்போது, அவர் கூறியதாவது:நாங்குநேரி தொகுதி மக்களுக்காக, என்னுடைய மீதம் உள்ள காலத்தை செலவிட முடிவு செய்துள்ளேன். நாங்குநேரியை பொருத்தவரை, விவசாயம் சரியாக இல்லை. படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை.

தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை மக்களுக்கு, சரியான அங்கீகாரம் இல்லை. அவர்களை முன்னேற்றுவதற்காக பாடுபடுவேன். கண்டிப்பாக, தி.மு.க., ஆட்சிக்கு வரும்; ஸ்டாலின், முதல்வராவார். அப்போது, நாங்குநேரி தொகுதியை மேம்படுத்த பாடுபடுவேன்.இவ்வாறு, ரூபி மனோகரன் கூறினார்.

- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
INNER VOICE - MUMBAI,இந்தியா
30-செப்-201922:30:53 IST Report Abuse
INNER VOICE "தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை மக்களுக்கு, சரியான அங்கீகாரம் இல்லை. அவர்களை முன்னேற்றுவதற்காக பாடுபடுவேன். கண்டிப்பாக, தி.மு.க., ஆட்சிக்கு வரும் ஸ்டாலின், முதல்வராவார். அப்போது, நாங்குநேரி தொகுதியை மேம்படுத்த பாடுபடுவேன்.இவ்வாறு, ரூபி மனோகரன் கூறினார்.".........இதைத்தான் அந்த டைலரும் சொன்னான். கேட்டுக்கோங்கோ மக்களே.
Rate this:
Share this comment
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
30-செப்-201903:12:25 IST Report Abuse
J.V. Iyer பணம் இருக்குய்யா வேறு என்ன வேண்டும்? தமிழ் மக்களின் வோட்டை பணம் கொடுத்து வாங்கலாம் என்றுதான் நிரூபித்து இருக்கிறீரே மானத்தை வாங்காதீர்கள்.
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
29-செப்-201915:43:24 IST Report Abuse
ஆரூர் ரங் ரியல் எஸ்டேட் காரர்கள்தான் நிஜமான சத்யசந்த காந்......தீயர்கள் எனக்கருதி காங்கிரஸ் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது அதைக்குறைசொல்லலாமா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X