காலக்கெடு விதித்தார் நிதியமைச்சர் நிலுவை தொகைகளை அக்., 15க்குள் வழங்க உத்தரவு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

காலக்கெடு விதித்தார் நிதியமைச்சர் நிலுவை தொகைகளை அக்., 15க்குள் வழங்க உத்தரவு

Updated : செப் 30, 2019 | Added : செப் 28, 2019 | கருத்துகள் (13)
Share
புதுடில்லி:செலவினங்கள் மற்றும் வளர்ச்சியை அதிகரிக்கும் வகையில், விற்பனையாளர்கள், ஒப்பந்தக்காரர்கள் ஆகியோருக்கான நிலுவைத் தொகைகளை, அக்., 15ம் தேதிக்குள் கொடுத்து முடித்துவிட வேண்டும் என, பொதுத் துறை நிறுவனங்களை, மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத வகையில், பொருளாதாரம் சரிந்துள்ள நிலையில், அதை வளர்ச்சிப் பாதைக்கு திருப்ப, பல்வேறு
காலக்கெடு, விதித்தார்,நிதியமைச்சர்,நிலுவை,தொகைகளை,அக்., 15க்குள், வழங்க, உத்தரவு

புதுடில்லி:செலவினங்கள் மற்றும் வளர்ச்சியை அதிகரிக்கும் வகையில், விற்பனையாளர்கள், ஒப்பந்தக்காரர்கள் ஆகியோருக்கான நிலுவைத் தொகைகளை, அக்., 15ம் தேதிக்குள் கொடுத்து முடித்துவிட வேண்டும் என, பொதுத் துறை நிறுவனங்களை, மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத வகையில், பொருளாதாரம் சரிந்துள்ள நிலையில், அதை வளர்ச்சிப் பாதைக்கு திருப்ப, பல்வேறு நடவடிக்கைகள் மத்திய அரசால் எடுக்கப்பட்டு வருகின்றன.இதன் தொடர்ச்சியாக, வெள்ளிக்கிழமை அன்று, நிதியமைச்சர், நிர்மலா சீதாராமன், பல்வேறு அமைச்சகங்களைச் சேர்ந்த செயலர்கள் மற்றும் நிதி ஆலோசகர்களை சந்தித்தார்.


முதல் கூட்டம்இந்த கூட்டத்திற்கு பின், பத்திரிகையாளர்களை சந்தித்தபோது, “குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் மற்றும் பொருட்களை வழங்கியவர்களுக்கு கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகைகளை உடனே வழங்குமாறு, அரசு துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

“வழக்குகள் எதுவும் இல்லாத நிலுவைத் தொகை எதையும் நிறுத்தி வைக்காமல், உடனடியாக வழங்குமாறு கூறப்பட்டுள்ளது. அரசின் எந்த செலவினங்களும் இதுவரை நிறுத்தப்படவில்லை. தேவையையும்,நுகர்வையும் அதிகரிக்கும் வகையிலான நிதிகள் உடனே வழங்கப்படும். “மேலும்,அடுத்த நான்கு காலாண்டுகளுக்கான மூலதன முதலீடுகள் குறித்த திட்டங்களை, இன்னும் ஒரு வார காலத்துக்குள் தயார் செய்யுமாறும் கூறியுள்ளேன். அடுத்து, நாளையும், பொதுத் துறையைச் சேர்ந்தவர்களுடன் சந்திப்பு நடைபெறும்,” என, தெரிவித்தார்.
அதன்படி, நேற்று, மத்திய பொதுத் துறை நிறுவனங்களின் தலைவர்களுடன், மூலதன செலவு திட்டங்கள் குறித்த மறு ஆய்வில் ஈடுபட்டார்.பின், பத்திரிகையாளர்களை சந்தித்த நிதியமைச்சர், நிர்மலா சீதாராமன் கூறியதாவது:மத்திய பொதுத் துறை நிறுவனங்கள், நிலுவைத் தொகைகளை, அக்டோபர் 15ம் தேதிக்குள் வழங்கிவிட வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன்மத்திய பொதுத் துறை நிறுவனங்கள் மட்டுமின்றி, மாநில அரசுகளுக்கு சொந்தமான நிறுவனங்களும், அதன் ஒப்பந்ததாரர்கள், விற்பனையாளர்கள், சேவைகளை வழங்குபவர்கள் என அனைவருடைய நிலுவைத் தொகைகளையும், 15ம் தேதிக்குள்ளாக வழங்கிவிட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.இதனால், பணப்புழக்க நெருக்கடியை குறைக்க முடியும் என, கருதுகிறோம்.

மேலும், ஒப்பந்தக்காரர்களுடன் ஏற்படும் பிரச்னைகளை மத்தியஸ்தம் பண்ணுவதற்கு ஆகும் காலம் எவ்வளவு என்பதையும், ஒப்பந்தக்காரர்களின் பணம் எவ்வளவு காலம் நிறுத்தி வைக்கப்படுகிறது என்பதையும் விளக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், நிலுவைத் தொகை வழங்குவதை உடனுக்குடன் அறிந்து கொள்ளும் வகையில், அக்டோபர் 15ம் தேதிக்குள், தனி இணையதள வசதியை ஏற்படுத்தும்படி, பெரிய பொதுத் துறை நிறுவனங்களிடம் கூறப்பட்டுள்ளது.

இவை மட்டுமின்றி, அடுத்த நான்கு காலாண்டுகளுக்கான செலவு திட்டங்களை சமர்ப்பிக்கவும், அரசுக்கு சொந்தமான நிறுவனங்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.இவ்வாறு நிதியமைச்சர் கூறினார்.ஆகஸ்ட் மாதம் வரை, 34 பொதுத் துறை நிறுவனங்கள் ஏற்கனவே, 48 ஆயிரத்து, 77 கோடி ரூபாயை செலவழித்துள்ளன.மேலும், டிசம்பர் வரையிலான காலகட்டத்தில், 50 ஆயிரத்து, 159 கோடி ரூபாய் செலவுக்கான விரிவான திட்டங்களையும் வைத்துள்ளன.

ராஜீவ் குமார், நிதித் துறை செயலர்

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X