கடல் போலானது இளைஞர்கள் தூர் வாரிய ஏரி

Updated : செப் 29, 2019 | Added : செப் 29, 2019 | கருத்துகள் (22) | |
Advertisement
தஞ்சாவூர்:தஞ்சை அருகே, இளைஞர்கள் முயற்சியால், துார் வாரப்பட்ட குளத்தில், தண்ணீர் நிரம்பியதால், கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம், ஆம்பலாப்பட்டு தெற்கு கிராமத்தில், 18 ஏக்கரில், குறிச்சி ஏரி அமைந்துள்ளது. 30 ஆண்டுகளாக, குளம் துார் வாரப்படாததால், 3 அடி வரை மட்டுமே தண்ணீர் தேங்கும் நிலை இருந்தது. அப்பகுதி இளைஞர்கள் ஒன்றிணைந்து, 19 லட்சம் ரூபாய்

தஞ்சாவூர்:தஞ்சை அருகே, இளைஞர்கள் முயற்சியால், துார் வாரப்பட்ட குளத்தில், தண்ணீர் நிரம்பியதால், கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.



latest tamil news




தஞ்சாவூர் மாவட்டம், ஆம்பலாப்பட்டு தெற்கு கிராமத்தில், 18 ஏக்கரில், குறிச்சி ஏரி அமைந்துள்ளது. 30 ஆண்டுகளாக, குளம் துார் வாரப்படாததால், 3 அடி வரை மட்டுமே தண்ணீர் தேங்கும் நிலை இருந்தது. அப்பகுதி இளைஞர்கள் ஒன்றிணைந்து, 19 லட்சம் ரூபாய் வரை, நிதி திரட்டினர். தொடர்ந்து கிராம மக்கள், இளைஞர்கள் இணைந்து, குளத்தின் கரைகளை பலப்படுத்தியும், 8 அடி வரை ஆழப்படுத்தியும் துார் வாரினர்.


latest tamil news




கரைகளில், 1,500 மரங்களையும், குளத்திற்குள், மூன்று இடங்களில், செயற்கையாக மண் மேடுகளை அமைத்து, அதில், 600 மர கன்றுகளை நட்டனர். இந்நிலையில், தொடர்ந்து பெய்த மழையால், ஏரி முழுமையாக நிரம்பி, கடல் போல காட்சியளிக்கிறது; இதனால், கிராம மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.ஏரி சீரமைப்பு குழுவைச் சேர்ந்த, வைரக்கண்ணு, ''துார் வாரப்பட்ட ஏரி முழுவதும், தண்ணீர் நிரம்பியுள்ளது. இதன் மூலம், 50 ஏக்கர் பாசன வசதி பெறும். நிலத்தடி நீர் மட்டம் உயரும்,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
29-செப்-201921:41:30 IST Report Abuse
r.sundaram மிக்க மகிழ்ச்சி. திருநெல்வேலியில் நைனார் குளத்தை பார்த்தால் அழுகைதான் வருகிறது. தூர் வருகிறேன் என்று சொல்லி மேலால் இருக்கும் செடிகொடிகளை மட்டுமே அகற்றுகின்றனர். வண்டல் அப்படியே உள்ளது. இன்னமும் ஒரு இரண்டு வருடங்களில் குளம் முழுவதும் தூர்ந்து போய்விடும். பின்னர் என்ன அரசியல் வாதிகளுக்கு கொண்டாட்டம்தான். திருநெல்வேலி நகரின் கழிவுகள் முழுவதும் இந்த குளத்தில் தான் சங்கமம் ஆகின்றது. இதற்க்கு என்றுதான் விடிவோ தெரியவில்லை. எல்லாம் நெல்லையப்பருக்கே தெரியும்.
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
29-செப்-201919:07:10 IST Report Abuse
சீனி வாழ்த்துக்கள், மிக அருமை, மரம் வளத்துங்க, யாரும் ஆக்கிரமிப்பு பண்ணமுடியாதபடி முறையாக எல்லையை பாதுகாப்பு பண்ணுங்க....
Rate this:
Cancel
THENNAVAN - CHENNAI,இந்தியா
29-செப்-201914:57:58 IST Report Abuse
THENNAVAN முடிந்தவரை தி மு க ஆட்சிக்கு வரும்முன் அணைத்து ஏரிகளையும் பொது மக்களே தூர் வரி பயன்படுத்த துவங்கிவிடுங்கள் அப்புறம் ,தி மு க ஆட்சிக்கு வந்துவிட்டால் தூர்வார ஏரியே இருக்காது வழக்கம்போல பிளாட்டு போட்டு வைத்துவிடுவார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X