பொது செய்தி

தமிழ்நாடு

அதிரப்போகும் தமிழகம்!

Updated : செப் 29, 2019 | Added : செப் 29, 2019 | கருத்துகள் (105)
Advertisement

சென்னை: எப்போதுமே அதிரடியாக செயல்படுவதில் ஆர்வமுள்ளவர் பிரதமர் மோடி. அரசு நிகழ்ச்சிகள் அனைத்தையும், தலைநகர் டில்லியிலேயே வைத்துக் கொள்ளக் கூடாது; மாநில தலைநகரங்களிலும், முக்கிய நகரங்களிலும், வெளிநாட்டு தலைவர்கள் சந்திப்பு போன்ற நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என, முடிவெடுப்பது மோடியின் வழக்கம்.






கடந்த முறை, மோடி பிரதமராயிருந்த போது, சீன அதிபர், ஜி ஜின்பிங்கை, தன் சொந்த மாநிலமான, குஜராத் தலைநகர், ஆமதாபாதிற்கு அழைத்துச் சென்றார். இம்முறை, சீன அதிபரை, தமிழகத்தில், காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள மகாபலிபுரத்திற்கு அழைத்து வருகிறார் மோடி. இதனால், தமிழகமே அதிரப்போகிறது என்கின்றனர், சீனியர் அதிகாரிகள்.





அக்டோபர், 11ம் தேதி காலை, சீன அதிபர் சென்னை வருகிறார். இங்கிருந்து, மகாபலிபுரம் செல்கிறார். பாதுகாப்பு அதிகாரிகள், வெளியுறவு அதிகாரிகள், மொழிபெயர்ப்பாளர்கள் என, 300 பேர் கொண்ட, 'மெகா டீம்' சீன அதிபருடன், மகாபலிபுரம் வர உள்ளது. இங்குள்ள நகராட்சி, ஜி ஜின்பிங்கிற்கு மாபெரும் வரவேற்பு அளிக்க உள்ளது. மகாபலிபுரத்திலுள்ள ஓட்டல்கள் அனைத்தும், 'புக்' செய்யப்பட்டுள்ளன.

இதே போல, பிரதமர் மோடியுடனும், 200க்கும் மேலான அதிகாரிகள் மகாபலிபுரம் வருகின்றனர். தமிழகத்திற்கும், குறிப்பாக காஞ்சிபுரத்திற்கும், சீனாவிற்கும் உள்ள தொடர்பு, இங்கிருந்து போதி தர்மர், புத்த பிக்குவாக சீனா சென்று, அங்கு புத்த மதத்தை பரப்பிய வரலாறு குறித்தெல்லாம் மோடி, சீன அதிபரிடம் பேசுவாராம்.பிரதமர் மோடி, -சீன அதிபர் சந்திப்பு, தமிழகத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என, அதிகாரிகள் சொல்கின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (105)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
30-செப்-201917:52:48 IST Report Abuse
Sampath Kumar வருகை அதிர்வு எல்லாம் ஓகே, இதனால் யார்க்கு என்ன லாபம் ??
Rate this:
Share this comment
Cancel
narayanan iyer - chennai,இந்தியா
30-செப்-201915:09:07 IST Report Abuse
narayanan iyer இனி மோடிஜியை பற்றியோ, அவரின் செயல்பாடுகளைப்பற்றியோ வைகோ பேசமாட்டார் . அவர் ஒரு ஆத்மீகவாதி ஆகிவிட்டார் . மேலும் டெல்லியில் மோடிஜியை நேரில் வேறு பார்க்கவேண்டும் . தர்மசங்கடம் .
Rate this:
Share this comment
Cancel
Jaykumar Dharmarajan - Madurai,இந்தியா
30-செப்-201914:56:13 IST Report Abuse
Jaykumar Dharmarajan இந்தியாவிற்கு எப்போதுமே சவால் விடும் நம் அண்டை நாடான சீனாவின் பிரதமரை அரசு விதிப்பு படியே,ஜனாதிபதி மாளிகைக்கும்,பிரதமர் விருந்து கொடுக்கும் இடங்களுக்கு மட்டுமே கூட்டிச்செல்லாமல், நம் நாட்டின் கலை நயமிக்க பகுதிகளுக்கு அழைத்துச்செல்வதால் என்ன தவறு. பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே ஜப்பான் நாட்டிலிருந்து நம் நாட்டின் நாலந்தா பல்கலைக் கழகத்திற்கு யுவான் சுவாங், மற்றும் ஹுவாயுன் வந்து நம் நாட்டின் பாரம்பரியத்தை கற்று சென்றார்கள் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X