நேரு செய்த இமாலய தவறு: அமித்ஷா

Updated : செப் 29, 2019 | Added : செப் 29, 2019 | கருத்துகள் (58)
Share
Advertisement
Nehru, Kashmir, UN, Himalayas, Amit Shah,காஷ்மீர், ஜவஹர்லால் நேரு, நேரு, முன்னாள் பிரதமர்,உள்துறை அமைச்சர், அமித்ஷா, பாகிஸ்தான், பிரதமர் மோடி, இமயமலை, தவறு,  படேல், ஜம்மு காஷ்மீர்,

புதுடில்லி: காஷ்மீர் விவகாரத்தில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு, இமாலய தவறு செய்துவிட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
டில்லியில் நடந்த கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது: காஷ்மீர் விவகாரத்தை முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு தன்னிச்சையாக ஐக்கிய நாடுகள் சபைக்கு எடுத்து சென்றார். இது இமயமலையை விட பெரிய தவறு. இந்தியாவில் இருந்த 630 மாகாணங்களை சர்தார் வல்லபாய் படேல் இணைத்தார். நேரு, காஷ்மீரை மட்டும் இணைத்தார். ஆனால், அந்த பணியை கடந்த ஆகஸ்ட் மாதம் தான் நிறைவு பெற்றது. காஷ்மீர் சிறப்பு சட்டம் ரத்து குறித்து இன்றும் வதந்திகள் பரப்பப்படுகின்றன. இது குறித்து விளக்க வேண்டியது அவசியம்.

முந்தைய காங்கிரஸ் அரசுகள், வரலாற்றை உருக்குலைத்தது. கடந்த 1947 முதல் காஷ்மீர் விவாதம் மற்றும் சர்ச்சைக்குரிய விவகாரம் ஆக இருந்தது. ஆனால், மக்கள் முன் உருக்குலைந்த வரலாறு காண்பிக்கப்பட்டது. காஷ்மீர் விவகாரத்தில், தவறு செய்தவர்களே, வரலாற்றை எழுதினர். இதனால், உண்மை தகவல்கள் மறைக்கப்பட்டன. தற்போது. உண்மையான வரலாறு எழுதப்பட்டு, மக்கள் முன் அளிப்பதற்கான சரியான நேரம் வந்துள்ளது என நினைக்கிறேன்.


latest tamil newsகாஷ்மீர் விவகாரத்தில், பாகிஸ்தானை , ஐக்கிய நாடுகள் சபையில், எந்த நாடும் ஆதரிக்கவில்லை. இந்தியாவின் உரிமையை ஆதரவு தெரிவித்தன. இது பிரதமர் மோடிக்கு கிடைத்த மிகப்பெரிய தூதரக வெற்றி ஆகும்.முந்தைய காங்கிரஸ் அரசு, ஷேக் அப்துல்லாவை 11 ஆண்டுகள் சிறையில் வைத்திருந்தது. ஆனால், தற்போது, 2 மாதத்திற்கே அவர்கள் கேள்வி கேட்கின்றனர்.
காஷ்மீரில் விரைவில் இயல்பு நிலை திரும்பும். காஷ்மீரில் எந்த தடையும் இல்லை. எதிர்க்ட்சியினரின் மனதில் தான் உள்ளது. காஷ்மீரில் உள்ள 196 போலீஸ் ஸ்டேசன் எல்லைகளில் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. 8 போலீஸ் ஸ்டேசன் எல்லைகளில் மட்டுமே, சில கட்டுப்பாடுகள் உள்ளன.தொலைபேசி இணைப்பு தராதது, மனித உரிமை மீறல் அல்ல. கடந்த காலங்களில் 41 ஆயிரம் அப்பாவி மக்களை கொன்றதே மனித உரிமை மீறல் ஆகும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (58)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kumar periyaar - Chennai,இந்தியா
03-அக்-201917:21:29 IST Report Abuse
Kumar periyaar நீங்கள் வொரு ஆறு வருடம், வாஜிபாஜி ஒரு ஐந்து வருடம் மொத்தம் 11 வருடம் இதை பத்தி சொல்லுங்களேன்
Rate this:
Cancel
Amal Anandan - chennai,இந்தியா
30-செப்-201907:58:09 IST Report Abuse
Amal Anandan நேருவுக்கும், காங்கிரசுக்கும் பிஜேபி நிறைய கடன் பட்டுள்ளது. இந்த இரண்டும் இல்லையென்றால் யார் மீது பழிபோட்டு மக்களை ஏமாற்ற முடியும்?
Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
30-செப்-201919:06:39 IST Report Abuse
தமிழ்வேல் அதான, வெள்ளையனும் நமக்கு வேண்டியவனுவோ......
Rate this:
Cancel
Amal Anandan - chennai,இந்தியா
30-செப்-201906:43:05 IST Report Abuse
Amal Anandan நேரு, காங்கிரஸ் இல்லைனா இவங்க எப்படி காலத்தை ஓட்டுவாங்க, இப்படி குறை சொல்லியே ஆறு வருடத்தை ஓட்டியாச்சு, திறமையெல்லாம் குறை சொல்றதில் மட்டுமே இருக்கு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X