கல்லுாரி நிறுவனர் வீட்டில் தங்கம், வைர நகை திருட்டு

Added : செப் 29, 2019 | |
Advertisement
கோவை:தனியார் இன்ஜி., கல்லுாரி நிறுவனர் வீட்டில், ரூ.25 லட்சம் மதிப்பிலான தங்கம், வைர நகைகளை திருடிச் சென்றவர்களை போலீசார் தேடுகின்றனர்.கோவை, சாய்பாபா காலனி, பாரதி பார்க் பகுதியை சேர்ந்த நாராயணசாமி,70, தடாகம் ரோட்டில், 'ஸ்ரீரங்கநாதன் இண்டஸ்ட்ரீஸ்' என்ற நிறுவனம் மற்றும் இன்ஜி., கல்லுாரி நடத்துகிறார். மூன்று தளங்கள் கொண்ட இவரது வீட்டில், இரண்டாவது தளத்தில் இருந்த பீரோவில்,

கோவை:தனியார் இன்ஜி., கல்லுாரி நிறுவனர் வீட்டில், ரூ.25 லட்சம் மதிப்பிலான தங்கம், வைர நகைகளை திருடிச் சென்றவர்களை போலீசார் தேடுகின்றனர்.கோவை, சாய்பாபா காலனி, பாரதி பார்க் பகுதியை சேர்ந்த நாராயணசாமி,70, தடாகம் ரோட்டில், 'ஸ்ரீரங்கநாதன் இண்டஸ்ட்ரீஸ்' என்ற நிறுவனம் மற்றும் இன்ஜி., கல்லுாரி நடத்துகிறார்.
மூன்று தளங்கள் கொண்ட இவரது வீட்டில், இரண்டாவது தளத்தில் இருந்த பீரோவில், 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க, வைர நகைகள் மற்றும், 15 ஆயிரம் ரூபாய் பணம் திருட்டு போயிருந்தது.சாய்பாபா போலீசார் நடத்திய விசாரணையில், பக்கத்து வீட்டில் இருந்து சுவர் ஏறி குதித்து, வீட்டுக்குள் நுழைந்து திருட்டில் ஈடுபட்டிருப்பது தெரிந்தது.
வீட்டின் இருபுறமும் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. கேமரா இல்லாத பின்பகுதி வழியாக வீட்டுக்குள் நுழைந்து, திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.கதவில் பொருத்தப்பட்டிருந்த சென்சார் கருவியும் சேதமடைந்துள்ளது. வீட்டை பற்றிய நன்கு அறிந்தவர்களே, திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர். கடந்த, 19ம் தேதி, தற்போது திருட்டு நடந்த வீட்டுக்கு, அருகே உள்ள ஆதித்யா குப்தா என்பவரது வீட்டில், 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் திருட்டுப்பட்டுள்ளன. 10 நாட்கள் இடைவெளியில், மீண்டும் திருட்டு சம்பவம் நடந்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X