'ஒரே மாணவர்' இரு மையங்களில் தேர்வு: 'நீட்' ஆள்மாறாட்ட விசாரணையில் அம்பலம்

Updated : செப் 30, 2019 | Added : செப் 30, 2019 | கருத்துகள் (15) | |
Advertisement
தேனி:'நீட்' தேர்வு ஆள் மாறாட்ட விவகாரத்தில், ஒரே மாணவர் பெயரில், இரு மையங்களில் தேர்வு எழுதியது அம்பலமாகி உள்ளது. ஆவணங்களில் முறைகேடு செய்தும், கல்லுாரியில் சேர்ந்தது, விசாரணையில் தெரிந்துள்ளது. 'நீட்' தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில், தேனி அரசு மருத்துவக் கல்லுாரியில் படித்த உதித்சூர்யா, அவரது தந்தை டாக்டர் வெங்கடேசன் கைது செய்யப்பட்டுள்ளனர்.தொடர்ந்து, சென்னை
 'ஒரே மாணவர்' இரு மையங்களில் தேர்வு: 'நீட்' ஆள்மாறாட்ட விசாரணையில் அம்பலம்

தேனி:'நீட்' தேர்வு ஆள் மாறாட்ட விவகாரத்தில், ஒரே மாணவர் பெயரில், இரு மையங்களில் தேர்வு எழுதியது அம்பலமாகி உள்ளது.

ஆவணங்களில் முறைகேடு செய்தும், கல்லுாரியில் சேர்ந்தது, விசாரணையில் தெரிந்துள்ளது. 'நீட்' தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில், தேனி அரசு மருத்துவக் கல்லுாரியில் படித்த உதித்சூர்யா, அவரது தந்தை டாக்டர் வெங்கடேசன் கைது செய்யப்பட்டுள்ளனர்.தொடர்ந்து, சென்னை தனியார் மருத்துவக் கல்லுாரியில் சேர்ந்த பிரவின், அவரது தந்தை சரவணன், ராகுல், அவரது தந்தை டேவிஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மாணவி அபிராமி, அவரது தாயிடம், சி.பி.சி.ஐ.டி, போலீசார் விசாரிக்கின்றனர்.நேற்று அதிகாலை, 12:30 மணிக்கு பிரவின், சரவணன் ஆகியோரை, தேனி குற்றவியல் நடுவர் பன்னீர்செல்வம் முன்னிலையில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.இதுவரை நடந்த விசாரணையில், புனே, மும்பை, லக்னோ, சென்னை மையங்களில் ஒரே மாணவர் பெயரில், இரு மையங்களில், 'நீட்' தேர்வு எழுதியது, அம்பலமாகி உள்ளது.
அதாவது, நிஜ மாணவர் ஒரு மையத்திலும், போலி மாணவர், மற்றொரு மையத்திலும் தேர்வு எழுதி உள்ளனர்.இதில், போலி மாணவர், அதிக மதிப்பெண் பெற்றுள்ளார். கல்லுாரியில் மாணவர் சேர்க்கை வரை, போலி மாணவரே வந்துள்ளார். வகுப்புகள் தொடங்கிய பின், நிஜ மாணவர் வந்துள்ளார்.ஆவணங்கள் திருத்தம்மேலும், ஆவணங்கள் திருத்தப்பட்டு, மாணவர் சேர்க்கை நடந்துள்ளது.
ஆள் மாறாட்டம், ஆவணங்கள் முறைகேடு ஆகியவற்றுக்கு, 20 லட்சம் ரூபாய் வரை புரோக்கரிடம் தரப்பட்டுள்ளது. தனியார் கல்லுாரியில் படித்த ராகுல், தந்தை டேவிஸ், நேற்று பிற்பகல், 3:00 மணிக்கு உடல் தகுதி சான்றுக்காக, தேனி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.மாணவி விடுவிப்புசென்னை சத்யசாய் மருத்துவக் கல்லுாரி மாணவி அபிராமி, அவரது தாயார், தந்தை மாதவன் ஆகியோர் தேனி, சி.பி.சி.ஐ.டி., போலீஸ் விசாரணையில் இருந்தனர்.அவர் சென்னையில் தேர்வு எழுதி, 316 மதிப்பெண் பெற்றுள்ளார். போலீசார் ஆவணங்களை ஆய்வு செய்தனர். இதில் அபிராமியின் சான்றிதழ்கள் உண்மையானது என தெரிந்தது. அவர் பெற்ற மதிப்பெண்ணுக்கு தனியார் மருத்துவக் கல்லுாரியில் சேர வாய்ப்பு உள்ளது எனவும் விசாரணையில் தெரிந்தது. நேற்று இரவு வரை அவர்களிடம் விசாரணை நடந்தது. முறைகேட்டில் ஈடுபடவில்லை என தெரிந்ததால், மூவரும் விடுவிக்கப்பட்டனர்.
தலைமறைவானடாக்டர் கைது
தர்மபுரி அரசு மருத்துவ கல்லுாரியில் படித்த இர்பானின் தந்தை டாக்டர் முகமது சபி, வாணியம்பாடியில் மருத்துவமனை நடத்தி வருகிறார். 'நீட்' ஆள்மாறாட்ட புகார் வந்தவுடன், மருத்துவமனையை பூட்டி, தலைமறைவாகி விட்டார்.அவரை, வேலுார், சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்து, தேனிக்கு அழைத்து வருகின்றனர். அவருக்கும், புரோக்கர் ரஷித்திற்கும் நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது. முகமது சபி மூலமாக, மற்றவர்கள் ரஷித்தை தொடர்பு கொண்டு, முறைகேட்டில் ஈடுபட்டனர். மாணவர் இர்பான், ஏற்கனவே மொரிஷியஸ் நாட்டில் மருத்துவ படிப்பில் சேர்ந்து, பாதியில் கைவிட்டவர்.

புகார் வாபஸ்

தேனி அரசு மருத்துவக் கல்லுாரியில், உதித்சூர்யாவின் வருகை பதிவை திருத்தியதாக, பேராசிரியர் வேல்முருகன், உதவி பேராசிரியர் திருவேங்கடம் மீது முதல்வர் ராஜேந்திரன் புகார் அளித்தார்.மேலும், இப்பிரச்னைகளால், தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும், போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் மனு அளித்தார். இது, உயர் அதிரிகாரிகள், சக பேராசிரியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.இதையடுத்து, நேற்று, முதல்வர், தனக்கு ஏற்பட்ட பயத்தால், போலீஸ் பாதுகாப்பு கேட்டதாகவும், அதை வாபஸ் பெறுவதாகவும் கடிதம் வழங்கினார். இரு பேராசிரியர்கள் பற்றிய புகாரை, சி.பி.சி.ஐ.டி.,யிடம் வழங்க அறிவுறுத்தினர்.
கல்லுாரி முதல்வர்கள் ஆஜர்
ஆள்மாறாட்டம் செய்து, 'நீட்' தேர்வு எழுதி, சென்னையில் உள்ள, மூன்று தனியார் கல்லுாரிகளில் ஏழு மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இந்த முறைகேட்டுக்கு கல்லுாரி முதல்வர்கள் உதவினரா என விசாரிக்க, சி.பி.சி.ஐ.டி., போலீசார், அவர்களை தேனிக்கு அழைத்தனர்.இதன்படி, சென்னை சத்ய சாய் மருத்துவக் கல்லுாரி முதல்வர் பிரேம்நாத் பக்ரியாசொட்டூர், கண்காணிப்பாளர் சுகுமார், சென்னை காட்டாங்குளத்துார், எஸ்.ஆர்.எம்., மருத்துவக் கல்லுாரி முதல்வர் சுந்தரம், சென்னை பாலாஜி மருத்துவக் கல்லுாரி முதல்வர் சிவகுமார், நேற்று ஆஜராகினர். 'மாணவர்களை எந்த அடிப்படையில் சேர்த்தனர், ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டனவா என' விசாரித்தனர். 'மாணவர் சேர்க்கை குழுவினர் இப்பணியை மேற்கொண்டனர்' என, முதல்வர்கள் தெரிவித்தனர்.


Advertisement


வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சீனி - Bangalore,இந்தியா
04-அக்-201908:55:51 IST Report Abuse
சீனி ஆதார் கட்டாயமாக்கப்பட்டிருந்தால் இது நடந்திருக்க வாய்ப்பு இல்லை. பல வக்கீல் புண்ணியவான்கள் கட்டாய ஆதரை வழக்குபோட்டு நீக்கியதன் காரணம் இப்போ புரிகிறதா ? நீட்குளறுபடிக்கு திமுகவும் ஒரு காரணம். ஆதார் இருக்கும் போதே இப்படின்னா, இந்த 72 ஆண்டுகளில் எத்தனை கருப்பு ஆடுகள் ஸ்த்தாஸ்கோப்பு மாட்டியிருக்கோ ஆண்டவனுக்கே வெளிச்சம். ஆதார் கட்டயமாக்கப்பட்டு, மாணவன் கையில் ஆதர் எண்ணோடு டேக் இணைக்கவேண்டும் பரிட்சை எழுதும்போது டேக் மற்றும் விடைத்தாளில் உள்ள எண்ணும் சரியா என பார்க்கவேண்டும், இல்லையெனில் வசூல் ராஜா மார்க்கபந்து மாதிரி போலி மாணவனும், நிஜ மாணவனும் ஒரே நேரத்தில் உள்ளே போய் பதில் தாள்களை மாற்றிக்கொள்ள வாய்ப்பு உள்ளது.
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
03-அக்-201918:20:11 IST Report Abuse
skv srinivasankrishnaveni அடப்பாவிகளா உங்களை எல்லாம் கழுவுளே தான் ஏற்றவேண்டும் அவ்ளோ கேடுகெட்டவங்களேதான் shameless களவாணிகள் எவ்ளோ ஸ்ட்ரிக்ட் ஆ இருக்கானுக வலிவும் வெளிவேஷமா வெட்கமா இல்லியா உப்புபோடாமல் சோறு துண்ணும் உணர்ச்சி யற்றவர்களா
Rate this:
Cancel
Balakrishnan - Bangalore,இந்தியா
01-அக்-201917:48:37 IST Report Abuse
Balakrishnan உதித் சூர்யாவின் நீட் ஹால் டிக்கெட்டில் உள்ள போட்டோ அவருடையதல்ல . நீட் மைய சோதனைகளை மீறி தவறு நடைபெறவில்லை. காலேஜில் சான்றுகள் சரிபார்க்கப்படும்போது அட்ஜஸ்ட் செய்யப்பட்டுள்ளது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X