பொது செய்தி

இந்தியா

'வந்தே பாரத்' அதிவேக ரயில் சோதனை ஓட்டம் வெற்றி

Updated : செப் 30, 2019 | Added : செப் 30, 2019 | கருத்துகள் (23)
Advertisement

புதுடில்லி : டில்லியிலிருந்து, ஜம்மு அருகேயுள்ள, கட்ராவுக்கு இயக்கப்படவுள்ள, அதி நவீன வசதிகள் அடங்கிய, 'வந்தே பாரத்' எக்ஸ்பிரஸ் ரயிலின் சோதனை ஓட்டம், நேற்று வெற்றிகரமாக நடந்தது. இதையடுத்து, வரும், 5ம் தேதியிலிருந்து, இந்த வழித்தடத்தில், 'வந்தே பாரத்' ரயில் சேவை துவங்கவுள்ளது.


சென்னையில் உள்ள ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையில், 'டிரெயின் - 18' எனப்படும், அதி நவீன வசதிகள் அடங்கிய ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டன.


குளிர்சாதன வசதி


இந்த ரயிலில், தனியாக இன்ஜின் இருக்காது; ரயில் பெட்டியிலேயே, அதற்கான வசதிகள் இருக்கும். இந்த ரயில், அதிகபட்சமாக, 180 கி.மீ., வேகத்தில் செல்லக் கூடியது. முழுமையான குளிர்சாதன வசதி, சுழலும் இருக்கைகள், 'வை - பை' வசதி, தானியங்கி கதவுகள், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத கழிப்பறைகள், ஜி.பி.எஸ்., அடிப்படையில் இயங்கும் தகவல் மையம், எல்.இ.டி., விளக்குகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இந்த ரயிலில் உள்ளன.

'வந்தே பாரத்' என பெயரிடப்பட்டுள்ள இந்த ரயில், முதல் முறையாக, டில்லி - வாரணாசி இடையே, சில மாதங்களுக்கு முன் இயக்கப்பட்டது. பிரதமர் மோடி, இந்த போக்குவரத்தை துவக்கி வைத்தார். இந்நிலையில், டில்லியிலிருந்து, ஜம்மு - காஷ்மீரின் கட்ராவுக்கு, இந்த ரயிலை இயக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.


முன்பதிவு


இதற்கான சோதனை ஓட்டம், நேற்று வெற்றிகரமாக நடந்தது. மற்ற ரயில்கள், இந்த வழித்தடத்தை கடக்க, 12 மணி நேரமாகும். வந்தே பாரத் ரயில், எட்டு மணி நேரத்தில், இந்த வழித்தடத்தை கடக்கும். சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்ததை அடுத்து, அடுத்த மாதம், 5ம் தேதியிலிருந்து, டில்லி - கட்ரா வழித்தடத்தில், இந்த ரயிலை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவும் துவங்கியுள்ளதாக, ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.
இது குறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், 'இந்த ரயிலை, அதிகபட்சமாக, 180 கி.மீ., வேகத்தில் இயக்க முடியும். 'ஆனாலும், தண்டவாளத்தின் வலிமை உள்ளிட்ட மற்ற விஷயங்களை கணக்கில் வைத்து, 130 கி.மீ., வேகத்தில் இயக்க, அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்' என்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
30-செப்-201912:55:06 IST Report Abuse
Natarajan Ramanathan Not only in Railways. Visible difference is observed in National Highways also and in All other Central Govt departments. Even in Bihar & UP, I observed face lift in many railway stations where once, only pan stain was visible. Even the public toilet stench was missing in stations.
Rate this:
Share this comment
Cancel
R.Balasubramanian - Chennai,இந்தியா
30-செப்-201912:51:54 IST Report Abuse
R.Balasubramanian 39 திமுக எம் பிக்கள் என்ன செய்துகொண்டு இருக்கிறார்கள்? தென் சென்னை எம்பி போல பவுடர்,ஒப்பனை செய்து கொண்டு தமிழ் தமிழ் என்று சொன்னால் வயிறு நிறையுமா, பரங்கிமலை ஆதம்பாக்கம் பறக்கும் ரயிலையாவது முடிக்க முயற்சி செய்யலாமே? , விழுப்புரம் தஞ்சாவூர் இரட்டை ரயில் பாதை போட சொல்லி கேட்கலாமே.
Rate this:
Share this comment
S.Balasubramanian - Chennai,இந்தியா
30-செப்-201922:11:41 IST Report Abuse
S.Balasubramanianமுன் இருந்த அ.தி .மு .க உறுப்பினர்கள் என்ன சாதித்தார்கள் என்பதைச் சொன்னால் உபயோகமாக இருக்கும். மிகவும் இன்னக்கமாக மத்திய அரசுடன் உறவு கொண்டுள்ளோம் என்று மார்தட்டிக் கொண்ட அ.தி.மு.க வால் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நிதியைக்கூட பெற முடியவில்லை. மாற்றுக கட்சியினரின் கோரிக்கை இந்த சர்வாதிகார மத்திய அரசு செவி கொடுத்துக் கேட்குமா?...
Rate this:
Share this comment
Cancel
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
30-செப்-201912:00:57 IST Report Abuse
Loganathan Kuttuva அத்தியாவசிய பொருட்களை விரைவாக கொண்டு செல்ல சரக்கு ரயில் போக்குவரத்திற்கு தனி தடம் தேவை. லாப நஷ்டமின்றி குறைந்த செலவில் போக்குவரத்து கையாண்டால் விவசாயிகள் பயன்பெறுவார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X