பா.ஜ.,வில் சேருகிறார் விஜயசாந்தி; காங்.,கிலிருந்து விலகுகிறார் அசாருதீன்

Updated : செப் 30, 2019 | Added : செப் 30, 2019 | கருத்துகள் (20)
Advertisement

ஐதராபாத்: காங்கிரசிலிருந்து விலகி, பா.ஜ.,வில், நடிகை விஜயசாந்தியும்; தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியில், முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீனும் சேர முடிவு செய்து உள்ளனர்.







தோல்வி:


தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர், விஜயசாந்தி. முதலில், பா.ஜ.,வில் சேர்ந்த விஜயசாந்தி, பின், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியில் சேர்ந்தார். கடந்த, 2009 லோக்சபா தேர்தலில், மேடக் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதன் பின், 2014ல், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியிலிருந்து விலகி, காங்கிரசில் சேர்ந்தார். 2014ல் நடந்த, தெலுங்கானா சட்டசபை தேர்தலில், மேடக் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

கடந்த ஆண்டு நடந்த தெலுங்கானா சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததையடுத்து, கட்சி பணிகளில் இருந்து விலகிய விஜயசாந்தி, மீண்டும், திரைப்படங்களில் நடிப்பதில் ஆர்வம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் அவர், பா.ஜ.,வில் சேரப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.






ஆலோசனை:


இது பற்றி, அவரது கணவர் சீனிவாச பிரசாத் கூறுகையில், ''விஜயசாந்தி இப்போது, திரைப்பட ஷூட்டிங்கில் உள்ளார். பா.ஜ.,வில் சேருவது பற்றி, அவர் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. ''ஆனால், அதற்கான ஆலோசனை உள்ளது. இதற்கு முன், பா.ஜ.,வில் இருந்ததால், அந்த கட்சி யில் அவர் சேர்ந்தால் ஆச்சர்யமில்லை,'' என்றார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், முகமது அசாருதீன், 2009ல், காங்கிரசில் சேர்ந்தார். 2009 லோக்சபா தேர்தலில், உ.பி., மாநிலம், மொராதாபாத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த, 2014 தேர்தலில், ராஜஸ்தான் மாநிலம், டோங்க் மதப்பூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.





சமீபத்தில் நடந்த, ஐதராபாத் கிரிக்கெட் சங்க தலைவர் தேர்தலில் போட்டியிட்டு, அசாருதீன் வெற்றி பெற்றார். இவரது வெற்றிக்கு, ஆளும் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் ஆதரவு காரணம் என, கூறப்படுகிறது. இதையடுத்து, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியில் சேர, அசாருதீன் முடிவு செய்துள்ளார். இதற்காக, முதல்வர் சந்திரசேகர ராவை சந்திக்க, அசாருதீன் நேரம் கேட்டுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Ganesan - Hosur,இந்தியா
30-செப்-201916:27:25 IST Report Abuse
S.Ganesan அனைத்து கட்சிகளுக்கும் ஒரு வேண்டுகோள். தயவு செய்து இவர்களை விலக்கியே வையுங்கள்
Rate this:
Share this comment
Cancel
Vincent - Madurai,இந்தியா
30-செப்-201914:16:08 IST Report Abuse
Vincent அக்கரை பச்சைக்கு எப்போதும் ஓடும் விஜய சாந்தி போன்றவர்களை மக்கள் அடித்து விரட்ட வேண்டும், எந்த கட்சியின் சார்பில் அவர்கள் போட்டியிட்டாலும்.
Rate this:
Share this comment
Cancel
30-செப்-201913:51:22 IST Report Abuse
ஆப்பு இவரோட பிரதிகட்டணா தெலுங்குப் படத்தை பாத்தா தெரியும். எதிர்க்கட்சியிலிருந்து ஆளும்கட்சிக்குத் தாவி, பொறவு ஆளுங்கட்சி தலைவரையே பொதுக்கூட்டம் ஒன்றில் கோடாலியால் வெட்டிச் சாய்த்து விடுவார்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X