பொது செய்தி

இந்தியா

தஹில் ரமானி மீது சிபிஐ நடவடிக்கை எடுக்க முடியும்

Updated : செப் 30, 2019 | Added : செப் 30, 2019 | கருத்துகள் (116)
Advertisement

புதுடில்லி : புலனாய்வு பிரிவு அளித்த முறைகேடு அறிக்கை அடிப்படையில் சென்னை ஐகோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி தஹில் ரமானி மீது சிபிஐ நடவடிக்கை எடுக்க முடியும் என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார்.

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமானியை, மேகாலயா ஐகோர்ட் தலைமை நீதிபதியாக பணியிட மாற்றம் செய்ய, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான கொலீஜியம் முடிவு ஆக.,28 அன்று முடிவு செய்தது. இதனை ஏற்க மறுத்த தஹில் ரமானி, முடிவை மாற்றும்படி கொலீஜியத்திடம் முறையிட்டார். ஆனால் கொலீஜியம் மறுத்து விட்டதால், தனது பதவியை ராஜினாமா செய்தார் தஹில் ரமானி.

இந்நிலையில் தஹில் ரமானி, சென்னை புறநகர் பகுதியான செம்மஞ்சேரி பகுதியில் முறைகேடாக 2 வீடு வாங்கிய விவகாரம் தொடர்பாக 5 பக்க விசாரணை அறிக்கையை புலனாய்வு பிரிவு, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியிடம் தாக்கல் செய்துள்ளது. புலனாய்வு பிரிவு அளித்துள்ள அறிக்கை தொடர்பாக சிபிஐ வட்டார தகவல்கள் கூறுகையில், தஹில் ரமாஜி ரூ.3.18 கோடிக்கு புதிதாக கட்டப்பட்ட 2 பிளாட்களை வாங்கி உள்ளார். இதில் ரூ.1.62 கோடி எச்டிஎப்சி வங்கியில் இருந்த பெற்ற கடன் மூலமும், ரூ.1.56 கோடி தனது சொந்த பணத்தில் இருந்தும் அளித்துள்ளார்.

தஹில் ரமானி பெயரில் 6 வங்கிக் கணக்குகள் உள்ளன. இவற்றில் 3 தனது கணவருடன் இணைந்த கணக்காகவும், ஒன்று தனது தாயுடன் இணைந்த கணக்காகவும், ஒன்று அவரின் சம்பள கணக்காகவும், மற்றொன்று தனது மகனுடன் இணைந்த கணக்காகவும் வைத்துள்ளார். இந்த கணக்குகளில் இருந்து ரூ.1.61 கோடி பணம், நீதிபதி தஹில் ரமானியால் நடத்தப்படும் மும்பை நிறுவன கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது. தனது தாயுடன் இணைந்த கணக்கில் இருந்து எடுக்கப்பட்ட ரூ.18 லட்சம், அடுத்த மாதமே காசோலை மூலமாக மீண்டும் அவரின் கணக்கில் போடப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் சிலை கடத்தலில் ஈடுபட்டுள்ள செல்வாக்கு மிகுந்த நபர்கள் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி மகாதேவன் தலைமையிலான சிறப்பு அமர்வை தஹில் ரமானி, திடீரென கலைத்துள்ளார் என்பதையும் புலனாய்வு பிரிவு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இதனால் இந்த அறிக்கை அடிப்படையில் தஹில் ரமானி மீது சிபிஐ நடவடிக்கை எடுக்க முடியும் என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் கடந்த 2 நாட்களுக்கு முன் தனக்கு மும்பையில் இருப்பதை விட சென்னையில் குடியேறவே பிடித்திருப்பதாக நீதிபதி தஹில் ரமானி கூறி உள்ளது சந்தேகத்தை அதிகப்படுத்துவதாக உள்ளது என சிபிஐ தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
வாசகர் கருத்து (116)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mohan - chennai,இந்தியா
30-செப்-201920:01:26 IST Report Abuse
mohan எல்லாம் அதிகார வர்கத்தின் நாடகம்... மக்களை திசை திருப்ப....
Rate this:
Share this comment
Cancel
Dr.C.S.Rangarajan - Fort Worth,யூ.எஸ்.ஏ
30-செப்-201919:14:44 IST Report Abuse
Dr.C.S.Rangarajan ஓய்வுபெறும் தருவாயில் உள்ள ஒரு உயர்நீதி மன்ற நீதிபதி தான் வகித்துவந்த பதவியின் வாயிலாகவோ, மறபுரிமையால் பெற்ற செல்வத்தினாலோ, சில பல கோடிகளை வங்கியில் இருப்பு தொகையாக வைத்திருக்க முடியாதா? சந்தேகங்கள் அடிப்படையில் விஜாரணைகள் தொடர்ந்தாலும், ஒரு நீதிமன்ற நீதிபதி தன்னை ஒரு நிரபராதி என நிரூபிக்கமுடியாத நிலையிலா இருப்பார்? சத்திய சோதனை என்பதா, அக்னிப்ரவேசம் பெண்களுக்கே உரித்தானதோ தாங்கள் தங்கமென நிரூபிக்க?
Rate this:
Share this comment
Cancel
spr - chennai,இந்தியா
30-செப்-201917:50:51 IST Report Abuse
spr தலைமை நீதிபதி இவர் பேரில் குற்றச்சாட்டு வந்த பின்னர் விசாரணையைத் துவங்கியிருந்தால், அது நேர்மையான செயல். அவர் விருப்ப ஒய்வு பெற அனுமதித்த பின் " புலனாய்வு பிரிவு அளித்த முறைகேடு அறிக்கை அடிப்படையில் சென்னை ஐகோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி தஹில் ரமானி மீது சிபிஐ நடவடிக்கை எடுக்க முடியும்" என்று கூறுவது என்ன நியாயம் இவரே பணிஓய்வு பெறப்போகும் நிலையில்,"எடுக்க முடியும்" என்று பூச்சாண்டி காட்டுவதனைவிட்டு, நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ஏன்கூறவில்லை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X