பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையின் காலை உணவு உற்சாகம் அளிக்கும் : மோடி

Updated : செப் 30, 2019 | Added : செப் 30, 2019 | கருத்துகள் (55)
Advertisement

சென்னை : சென்னையின் காலை உணவு உற்சாகம் அளிக்கக் கூடியது என பிரதமர் மோடி பேசி உள்ளார். சென்னை ஐஐடி வளாகத்தில் நடந்த 'இந்தியா - சிங்கப்பூர் ஹேக்கத்தான்' போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் விழாவில் கலந்து கொண்டு பேசிய மோடி இவ்வாறு தெரிவித்துள்ளார்.





'இந்தியா - சிங்கப்பூர் ஹேக்கத்தான்' போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பிரதமர் மோடி பரிசுகள் வழங்கினார். தொடர்ந்து பேசிய அவர், தமிழர்களின் விருந்தோம்பல் மிகச் சிறந்தது; தமிழர்களின் இட்லி, தோசை, வடை என அத்தனையும் எனக்கு மிகவும் பிடிக்கும். சென்னையின் காலை உணவு உற்சாகம் அளிக்கக் கூடியது. ஹேக்கத்தான் வெற்றிக்கும் உதவிய சிங்கப்பூர் கல்வித்துறை அமைச்சருக்கு எனது நன்றி. ஒவ்வொருவரும் ஒரு வெற்றியாளர்கள் தான். இந்திய மாணவ நண்பர்களுக்கு எனது வாழ்த்துக்கள். என்னை பொறுத்தவரை நீங்கள் அனைவருமே வெற்றியாளர்கள் தான். ஏனென்றால் பல சவால்களை சந்திக்கிறீர்கள். பல நாடுகளின் மாணவர்களின் யோசனைகளை பரிமாறிக் கொள்ள ஹேக்கத்தான் உதவுகிறது. சிங்கப்பூர் தொடர்ந்து இந்தியாவுடன் பணியாற்ற வேண்டும்.




பல சவால்களை சரி செய்ய கடந்த 36 மணி நேரமாக நீங்கள் பணியாற்றி உள்ளீர்கள். உங்கள் பணியில் உள்ள சிறப்பினை காண்கிறேன். உங்களுக்கும் உங்கள் ஆற்றலுக்கும் வாழ்த்துக்கள். முடிவுகளைப் பற்றி கவலைப்படாமல் திறமையை வெளிப்படுத்தும் வகையில் போட்டியில் பங்கேற்றவர்களுக்கு பாராட்டு. இந்திய பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலர் என்ற இலக்கை நோக்கி முன்னேறி வருகிறது. சிங்கப்பூரை போல, பிற ஆசிய நாடுகளுடன் இணைந்து ஹேக்கத்தான் போட்டிகளை நடத்த ஆலோசனை நடத்தப்பட உள்ளது. சென்னை மிகச்சிறந்த கலாச்சாரம், மாபெரும் பாரம்பரியம், சிறந்த உணவு வகைகளை கொண்டது. மாமல்லபுரம் மிகச்சிறந்த தொன்மையான சிற்பங்களை கொண்ட நகரம். இவ்வாறு மோடி பேசினார்.

இந்த நிகழ்ச்சிக்கு பின் ஐஐடி வளாகத்தில் உள்ள 'இந்தியா - சிங்கப்பூர் ஹேக்கத்தான்' கண்காட்சியை பார்வையிட்டார். அவரிடம் கண்காட்சி குறித்து மாணவர்கள் விளக்கமளித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (55)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
30-செப்-201919:24:21 IST Report Abuse
Tamilan இந்தியாவிலேயே தொன்மையான மாநிலம் தமிழகம் . சாப்பாட்டுக்கு சிறந்தது தமிழகம் . படிப்பிற்கும் மிக சிறந்த மாநிலம் தமிழகம் . இன்னும் என்னென்ன வெல்லாம் கூற முடியுமோ அனைத்தையும் கூறுவர் இந்த அரசியல்வாதிகள். பேசாமல் இந்தியாவின் தலைநகரத்தை சென்னைக்கு மாற்ற இங்கிருந்தே ஒரு உத்தரவு போட்டுவிட்டால் தமிழர் மனம் மகிழும் . அதிக வோட்டுக்களும் கிடைக்கலாம் .
Rate this:
Share this comment
Cancel
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
30-செப்-201919:22:56 IST Report Abuse
Poongavoor Raghupathy Modi is trying his level best to woo the people of Tamilnadu. Modi talks high about Tamil language, Tamilian Breakfast items, Tamilian Culture etc etc and had gone to the extent of speaking about Purananuru in UN. When DMK is preaching that Modi is killing Tamil language Modi taking Tamil very high can change the Tamilnadu people from the narrow mind of Dravidian to Indian. Let us wait and see how for Modi is going to be successful to take Tamilnadu people into his side of India. Modi is a shrewd Marketing Leader and he can sell his Perfumes even in France. DMK slowly and steadily seems to be loosing their grounds because Tamilnadu people I have seen that they want to have a change from Dravidian Party rule. It may not be a wonder if Rajini becomes a Tamilnadu CM even if he starts his Party before six months of 2021 elections.
Rate this:
Share this comment
Cancel
Viswam -  ( Posted via: Dinamalar Android App )
30-செப்-201919:04:33 IST Report Abuse
Viswam அடிக்கடி இந்தியாவின் முக்கிய நகரங்களில் பயணம் செய்யும் நான், வட இந்திய மக்கள் நமது பிரதான காலை உணவான இட்லி மற்றும் தோசையை விரும்பி உண்டு களிப்பதை கண்கூடாக பார்த்து சந்தோஷம் அடைந்துள்ளேன். அவர்களும் இதை எல்லாம் சாப்பிட ஆரம்பித்தால் நமக்கு போகும் இடத்தில் விருப்பமான காலை உணவு நல்ல தரத்தில் கிடைக்கும் என்கிற நம்பிக்கை தான். நமது காலை உணவை வட நாட்டு இந்தியரான மோடி அவர்கள் சிலாகித்து சொன்னால் ஏன் வெறுப்பு? பெருமை அடைய வேண்டாமா? சராசரி தமிழர்களுக்கும் விருந்தோம்பலுக்கும் இவ்வளவு இடைவெளியா திமுகவின் மூளை சலவையில்? புரோட்டா, சைனீஸ் மற்றும் பிரியாணி வந்தேறி அல்லவோ? எப்படி பிரியமானது? காமாலை கண்ணுக்கு மருந்து தமிழர்கள் ஊரை விட்டு வெளியே வந்து உலகத்தை, வேண்டாம் மற்ற மாநிலங்களை பார்த்தாலே போதும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X