பொது செய்தி

தமிழ்நாடு

உலகின் தொன்மையான மொழி தமிழ் : மோடி புகழாரம்

Updated : செப் 30, 2019 | Added : செப் 30, 2019 | கருத்துகள் (145)
Advertisement

சென்னை : சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, தமிழின் தொன்மை குறித்தும், ஐஐடி மாணவர்கள் குறித்தும் புகழ்ந்து பேசினார்.






சென்னை ஐஐடி.,யின் 56வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தமிழக கவர்னர் பன்வாரிலால், முதல்வர் பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்விழாவில் மாணவர்கள் வேட்டி-சட்டை அணிந்தும், மாணவிகள் புடவை மற்றும் சுடிதார் அணிந்தும் வந்து பட்டங்களை பெற்றனர்.

விழாவில் பேசிய மோடி, இளைஞர்களின் உத்வேகம் உற்சாகம் அளிக்கிறது. சாதித்த மாணவர்களின் பெற்றோர்களை பாராட்டுகிறேன். அவர்களின் தியாகம் உங்களை வளர்த்துள்ளது. இளைஞர்களின் கண்களில் ஒளியை காண்கிறேன். உங்களின் வெற்றியில் பெற்றோர்களின் உழைப்பு உள்ளது. உங்கள் சாதனையில் ஆசிரியர்கள் உள்ளனர். உங்கள் வெற்றியில் அவர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. அவர்களை நாம் உற்சாகப்படுத்துவோம். ஒருவரின் வெற்றியில் பலரின் பங்களிப்பு உள்ளது. எதிர்கால இந்தியாவின் கனவுகளை உங்களின் கண்களில் பார்க்கிறேன்.





உலகின் பழமையான மொழி தமிழ். உலகின் பழமையான மொழியை கொண்ட மாநிலம் தமிழகம். இந்தியாவின் மூத்த மொழி தமிழ் மொழி. உலகின் மிக பழமையான மொழியான தமிழை போற்றுவோம். நீங்கள் ஒரு சிறந்த கல்வி சாலையில் வெளியேறி இருக்கிறீர்கள். உலகமே உற்றுநோக்கும் கல்விச்சாலை இது. இந்திய இளைஞர்கள், இளம் பெண்கள் மீது உலகமே எதிர்பார்ப்பில் உள்ளது. உங்களுடைய ஐஐடி.,யின் முன்னாள் மாணவர்கள் பல சாதனைகளை படைத்துள்ளனர். இந்தியர்களின் முயற்சி, உழைப்பு, தன்னம்பிக்கை கண்டு உலகமே வியக்கிறது. உலக அளவில் முன்னணியில் இருக்கும் இந்தியர்கள் ஐஐடி.,யில் படித்தவர்கள் தான். உலக முழுவதும் இந்திய சமுதாயம் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ஐஐடி மாணவர்கள் நாட்டின் தூண்களாக திகழ்கிறார்கள். பொதுவான சவால்களை சந்திப்பதற்கு இந்தியாவும், சிங்கப்பூரும் இணைந்து பணியாற்றி வருகின்றன.

இந்திய இளைய சமுதாயத்தின் தன்னம்பிக்கையை கண்டு உலக தலைவர்கள் வியக்கிறார்கள். இந்தியா தொழில்நுட்பத்தில் வேகமாக முன்னேறி வருகிறது. இந்தியாவின் தனித்துவமான கண்டுபிடிப்புக்கள் உலக சந்தையில் முக்கிய இடத்தை பிடிக்க வேண்டும். 21ம் நூற்றாண்டின் தேவையை புரிந்து மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

இதுவரை 200 ஸ்டாட்அப் தொழில்கள் இங்கு உருவாக்கப்பட்டுள்ளது. பசி, தூக்கம் பாராமல் அடுத்த கட்டத்தை நோக்கி நாம் நகர வேண்டும். ரோபோடிக் போன்ற நவீன தொழில்நுட்பத்தில் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும். புதுமை கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதில் சென்னை ஐஐடி முதன்மை இடம்பிடிக்கிறது. கடின உழைப்பால் முடியாததையும் முடித்துக் காட்டும் ஆற்றல் இந்திய மாணவர்களுக்கு உள்ளது. உலகின் டாப் 3 ஸ்டார்ட்அப் கண்டுபிடிப்புக்கள் இந்தியாவினுடையது. இவ்வாறு மோடி பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (145)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Viswanathan - karaikudi,இந்தியா
30-செப்-201923:11:22 IST Report Abuse
Viswanathan இப்படியெல்லாம் தமிழ் மொழியை புகழ்ந்தால் தான் தமிழன் மயங்குவான் , இப்படி தான் தமிழ் இன தலைவர் கடந்த ஐம்பது வருடங்களாக தமிழ் வளர்த்து ஏமாற்றினார் என யாரேனும் சொல்லி இருக்க கூடும்
Rate this:
Share this comment
Cancel
30-செப்-201923:05:45 IST Report Abuse
கதை சொல்லி எங்களின் 50 ஆண்டு யாவாரத்த கெட்க்கலாமுன்னு பாக்குரீகளோ... ஒன்றும் முடியாது... சாராயத்துல ஊற வச்ச மூளை அதை எல்லாம் கண்டுக்காது... தெலுங்கன் குடும்பத்துக்கு மட்டும்தான் தமிழ் காப்பான் ரைட்ஸு...
Rate this:
Share this comment
Cancel
நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா
30-செப்-201922:55:15 IST Report Abuse
நந்தினி திவ்ய பாரதி ப்பதா நீங்கல்லம் கண்டூ புடிச்ங்களா. எங்கல்கெல்லம் மொதல்லியே தெரீஞ்சிவச்சிட்டங்க
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X