பொது செய்தி

இந்தியா

எந்த தாக்குதலுக்கும் தயார்: புதிய விமானப்படை தளபதி

Updated : செப் 30, 2019 | Added : செப் 30, 2019 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி: விமானப்படை தளபதியாக, ஆர்.கே.எஸ். பதாரியா இன்று (செப்., 30) பொறுப்பேற்றார். தளபதியாக இருந்த தனோவா ஓய்வு பெற்ற நிலையில், விமானப்படை துணை தளபதியாக உள்ள பதாரியாவை தளபதியாக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இதன்படி இன்று பதவியேற்றுக் கொண்டு தேசிய போர் நினைவு சின்னத்தில் அஞ்சலி செலுத்தினார்.இதன்பின் நிருபர்களை சந்தித்த பதாரியா கூறியதாவது: பாலகோட்

புதுடில்லி: விமானப்படை தளபதியாக, ஆர்.கே.எஸ். பதாரியா இன்று (செப்., 30) பொறுப்பேற்றார். தளபதியாக இருந்த தனோவா ஓய்வு பெற்ற நிலையில், விமானப்படை துணை தளபதியாக உள்ள பதாரியாவை தளபதியாக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இதன்படி இன்று பதவியேற்றுக் கொண்டு தேசிய போர் நினைவு சின்னத்தில் அஞ்சலி செலுத்தினார்.



latest tamil news



இதன்பின் நிருபர்களை சந்தித்த பதாரியா கூறியதாவது: பாலகோட் தாக்குதல் போன்று மற்றொரு தாக்குதல் நடத்தவும், அனைத்து சவால்கள் மற்றும் அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள தயாராகவே இருக்கிறோம். தாக்குதல் தொடர்பாக எந்த அறிவிப்பு வந்தாலும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். திறன் வாய்ந்த போர் விமானமான ரபேலுக்கு முன்னுரிமை அளிப்பேன். அது பாக்., மற்றும் சீனாவின் இந்திய எல்லை பிரச்னைகளை எதிர்கொள்ள இந்தியாவின் சிறந்த ஆயுதமாக இருக்கும்.


latest tamil news



அணு ஆயுத போர் ஏற்படும் என பாக்., பிரதமர் கூறியது, அவர்களது புரிதல் ஆகும். ஆனால், அணு ஆயுதங்கள் பற்றிய சொந்த புரிதல் மற்றும் பகுப்பாய்வுகள் எங்களிடம் உள்ளன. எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். இவ்வாறு பதாரியா கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
01-அக்-201904:02:30 IST Report Abuse
கதிரழகன், SSLC அபிநந்தன் அளவு இல்லாட்டியும் கொஞ்சம் நல்லாவே இருக்கு மீசை. இந்த விமான படை தோள்பட்டை சின்னம் விளங்கவே மாட்டேனுது. கோடு கோடா இருக்கு. தரை படை தான் சூப்பரா மூணு சிங்கம் வெட்டு கத்தி நட்சத்திரம் எல்லாம் போட்டு ஜோரா இருக்கும்
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
30-செப்-201922:50:25 IST Report Abuse
மலரின் மகள் இவரின் அலுவலகத்தில் போட்டோ விற்கான அனுமதியை மறுத்திருக்கலாம். கணினி திரை, திறந்த நிலையில் கோப்புக்கள் வெளிப்படையாக தெரிகிறதே? கவன குறைவு என்பது கூடுதலாக நம்மிடம் இருக்கிறதோ? இதனால் தான் நமது போர்க்கப்பல் தயாரிப்பு ஹார்ட் டிஸ்க் களவு போயிற்றோ
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
30-செப்-201914:28:48 IST Report Abuse
சீனி புதிய விமானப்படை தளபதிக்கு வாழ்த்துக்கள். மோடி தலைமையில் ரெபேல் வந்தப்புறம் நீங்க தளபதியாகியிருப்பது, உங்க பதவிக்கு மேலும் பெருமை சேர்க்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X