கேரள இளம் பெண் அபுதாபி கடத்தல்: 'லவ் ஜிகாத்' தில் சிக்கினாரா?

Updated : செப் 30, 2019 | Added : செப் 30, 2019 | கருத்துகள் (49)
Advertisement
கேரள, இளம் பெண் ,அபுதாபி, கடத்தல்,: 'லவ் ஜிகாத்', தில் சிக்கினாரா?

திருவனந்தபுரம்: கேரளாவில், கிறிஸ்தவ பெண்களை காதலித்து, 'லவ் ஜிகாத்' என்ற பெயரில், அவர்களை மதம் மாற்றி, பயங்கரவாத அமைப்புகளில் இணைப்பதாக வெளியான தகவலை இளம் பெண் மறுத்துள்ளார்.

கேரளாவில், கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லுாரியில், முகமது ஜசீம்,19, என்ற மாணவன் படித்து வந்தார். இவர், தன்னுடன் படித்து வந்த, கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த, 18 வயது மாணவியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார். தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு, மாணவி கேட்டபோது, முஸ்லிம் மதத்துக்கு மாறினால் மட்டுமே திருமணம் செய்து கொள்வேன் என மிரட்டினார். இதையடுத்து, மாணவியின் பெற்றோர், போலீசில் புகார் அளித்தனர்.





வழக்குப்பதிவு செய்த போலீசார், முகமது ஜசீமை, நேற்று முன் தினம் (செப்., 24) கைது செய்தனர்.இந்நிலையில் அதேகோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த சியானி பென்னி,19 என்ற மற்றொரு மாணவி கடந்த கடந்த செப்.18-ம் தேதி முதல் காணாமல் போனதாகவும் அவர் கட்டாயப்படுத்தி துபாய்க்கு கடத்திச்செல்லப்பட்டதாகவும் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இதனை மறுத்த அம்மாணவி அபுதாபியில் இருந்த படி அந்நாட்டு செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், அபுதாபியைச் சேர்ந்த இந்தியரை நான் காதலித்தேன் அவரை திருமணம் செய்து கொண்டு கிறிஸ்தவ மதத்திலிருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டேன்.என்னை யாரும் கடத்தவில்லை என்றார்

Advertisement




வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sivakumar - Qin Huang Dao,சீனா
03-அக்-201900:38:35 IST Report Abuse
sivakumar இங்கிலாந்து நமது நாட்டின் சனாதன தர்மத்தை அழித்து ஹிந்து என்று பெயர் சூட்டினார்கள், பல கோடிக்கணக்கான மக்களை கிரிஸ்துவர் ஆக்கினார்கள், இன்னும் பல பல அட்டகாசங்கள், தன் வினை தன்னை சுடும் . இப்ப அந்நாட்டின் நிலை , 2050 க்கு பிறகு இஸ்லாமியர்கள் பெரும்பான்மையானவர்களா இருப்பார்கள். முன்பு (இப்பவும்) ஹிந்துக்களை மதம் மாற்றினீர்கள், இப்போது முஸ்லிம்கள் லவ் ஜிகாத் செய்கிறார்கள் என ஓலமிடுவதும் அதே வகை தான். தனக்கு வந்தால் ரத்தம், அடுத்தவுனுக்கு வந்தால் தக்காளி சட்னி
Rate this:
Share this comment
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
02-அக்-201911:27:38 IST Report Abuse
Malick Raja பொதுவாக பெற்றோர்களுக்குத்தான் பிள்ளைகள் என்பதே இறுதியாக இருக்கும் விதிவிலக்கு பெற்றோர்கள் குற்றமுடையோராக இருப்பது நிரூபணம் ஆகும்போது பிள்ளைகள் அவர்களது வழிகளை தேர்ந்தெடுக்கலாம் .. மந்தமாண்பு ஒன்றே இதை நிலை நிறுத்தும்
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Dhanbad,இந்தியா
02-அக்-201910:19:04 IST Report Abuse
Nallavan Nallavan சேச்சியைக் கூடிய விரைவில் சிரியாவிலோ, ஈராக்கிலோ பார்க்கலாம் ......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X