சென்னை: 'அ.தி.மு.க., ஆட்சி, இ.பி.எஸ்., கையிலா; மணல் கொள்ளையர் கையிலா' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் தன், 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:'இது முதல்வர் லாரி' என, மிரட்டும் அளவுக்கு, சமூக விரோதிகள் நடமாட்டத்திற்கு, இ.பி.எஸ்., பெயரை பயன்படுத்துவது போன்ற அராஜகம், வேறு எங்கு இருக்க முடியும்; இந்த ஆட்சி, இ.பி.எஸ்., கையிலா; மணல் கொள்ளையர் கையிலா; தமிழகத்தில் நடப்பது, சட்டத்தின் ஆட்சியா; குற்றத்தின் ஆட்சியா?
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையில், முதல்வரின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்து, தி.மு.க., முதன்மை செயலர், டி.ஆர்.பாலு வெளியிட்ட அறிக்கை:தி.மு.க., ஆட்சியில், அணைகள் கட்டப்பட்டன; காவிரி கால்வாய்கள் துார்வாரப்பட்டன. ஏரி, குளங்களை பல மாவட்டங்களில், தி.மு.க., துார்வாரியுள்ளது. சேலத்தில், ஏரியயை துார் வாரப்போன ஸ்டாலினை, தடுத்தவர் நீங்கள்.
எனவே, ஸ்டாலினை பற்றி பேசுவதற்கு, எந்தத் தகுதியும், உங்களுக்கு இல்லை என்பதை, நீங்கள் நினைவில் கொள்ளுங்கள். அது உங்களுக்கும் நல்லது; உங்கள் எதிர்காலத்திற்கும் நல்லது.இவ்வாறு, பாலு கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE