சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க.,வை சேர்ந்த மோசடி மன்னன் முத்துவேல் கைது

Added : செப் 30, 2019 | கருத்துகள் (34)
Advertisement
 தி.மு.க.,வை சேர்ந்த மோசடி மன்னன் முத்துவேல் கைது

சென்னை:தொழில் அதிபர்களுக்கு, வங்கி கடன் வாங்கித் தருவதாக, பல கோடி ரூபாய் சுருட்டிய, தி.மு.க., வைச் சேர்ந்த, மோசடி மன்னன் முத்துவேலை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
மிரட்டல்
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர், நிக்கில் கண்ணா. ரியல் எஸ்டேட் அதிபரான இவர், சென்னை வில்லிவாக்கத்தில் வசித்து வருகிறார். போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், இவர் அளித்துள்ள புகார்: வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர், முத்துவேல், 42; தி.மு.க., பிரமுகரான இவர், நண்பர் ஒருவர் வாயிலாக அறிமுகமானர். எனக்கு, 100 கோடி ரூபாய் வங்கி கடன் வாங்கித் தருவதாக, 2.62 கோடி ரூபாய் வாங்கி, மோசடி செய்து விட்டார். பணத்தை திருப்பி கேட்டால், கொலை மிரட்டல் விடுக்கிறார். அரசியல் செல்வாக்குள்ள முத்துவேலுவால், என் உயிருக்கு ஆபத்து உள்ளது. அவர் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டுத்தர வேண்டும்.இவ்வாறு, புகாரில் கூறியுள்ளார். இதுகுறித்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து, முத்துவேலை, நேற்று முன் தினம் கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.
முத்துவேல் அளித்துள்ள வாக்குமூலம் குறித்து, போலீசார் கூறியதாவது:தி.மு.க.,வில், வில்லிவாக்கம் பகுதி துணை அமைப்பாளராக இருந்தேன். கொளத்துார், வில்லிவாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில், என்னை தெரியாத நபர்களே இருக்க முடியாது.அந்த அளவுக்கு பிரபலம். பல கோடி ரூபாய் செலவு செய்து, 27ம் தேதி பிறந்த நாள் கொண்டாடினேன்.கடன் பிரச்னையில் சிக்கும் தொழில் அதிபர்கள், என்னை அணுகுவர். எனக்குள்ள அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி, தீர்த்து வைப்பேன்; அதற்கு, கமிஷன் தொகையும் பெற்று வந்தேன். மேலும், இதுபோன்ற தொழில் அதிபர்களை அடையாளம் கண்டு, என்னிடம் அழைத்து வர, அம்ஜத் மற்றும் வாசு என்ற இருவரை, புரோக்கர்களாக வைத்திருந்தேன். இவர்களுக்கு மாதம் தோறும், பல லட்சம் ரூபாய் வாரி வழங்கி வந்தேன்.எனக்கு, கழுத்து நிறைய, தங்க நகை அணியும் பழக்கம் உள்ளது. தொழில் அதிபர்களிடம், நான் பெரிய ஆள் என்பதை நம்ப வைக்க, போயஸ்கார்டனில் அலுவலகம் துவங்கி நடத்தி வந்தேன்.
வங்கி கடன்
போலி ஆவணங்கள் வாயிலாக, நிலங்களை அபகரித்து, குறைந்த விலைக்கு விற்று வந்தேன். என் மீது யாராவது புகார் அளித்தால், சமரச பேச்சு நடத்தி, 'செட்டில்' செய்து விடுவேன். சென்னை மற்றும் ஆந்திராவை சேர்ந்த, பல தொழில் அதிபர்களுக்கு, வங்கி கடன் வாங்கித் தருவதாக, கோடிக்கணக்கில் சுருட்டி உள்ளேன்.இவ்வாறு, போலீசார் கூறினர்.
போலீஸ் காட்டில் பண மழை
வில்லிவாக்கம், ராஜமங்கலம் மற்றும் கொளத்துார் சுற்று வட்டார பகுதிகளில் பணிபுரியும், போலீசாருக்கு, முத்துவேல் அட்சய பாத்திரமாக இருந்து வந்துள்ளார். இதனால், முத்துவேல் கைது செய்யப்பட்ட தகவலை, மறைப்பதிலேயே குறியாக இருந்தனர். இவரை, ஆந்திர போலீசார் கைது செய்து இருப்பதாக, தவறான தகவலையும் பரப்பினர். இதற்கு முன், முத்துவேல் மீது, மத்திய குற்றப்பிரிவு போலீசில் வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளில், இவர் கைது செய்யப்படாமல், 'செட்டில்' செய்து, தப்பித்து வந்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X