பொது செய்தி

தமிழ்நாடு

சில்லரை வர்த்தகத்துக்கு தனி 'லைசென்ஸ்' வாங்கணும்! சாயம் விற்பனையாளருக்கு அட்வைஸ்

Added : அக் 01, 2019
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர் சாயம் மற்றும் கெமிக்கல் விற்பனையாளர்கள் சங்க 31வது மகாசபை கூட்டம், வாலிபாளையத்தில் உள்ள சங்க அரங்கில் நேற்று நடந்தது.கூட்டத்துக்கு, சங்க தலைவர் வைத்தியநாதன் தலைமை வகித்தார். செயலாளர் செந்தில்நாதன் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் பாஸ்கரன் வரவு செலவு கணக்கு தாக்கல் செய்தார்.டைஸ் அண்ட் கெமிக்கல் வர்த்தகர் கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது:சாயம்,

திருப்பூர்:திருப்பூர் சாயம் மற்றும் கெமிக்கல் விற்பனையாளர்கள் சங்க 31வது மகாசபை கூட்டம், வாலிபாளையத்தில் உள்ள சங்க அரங்கில் நேற்று நடந்தது.கூட்டத்துக்கு, சங்க தலைவர் வைத்தியநாதன் தலைமை வகித்தார். செயலாளர் செந்தில்நாதன் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் பாஸ்கரன் வரவு செலவு கணக்கு தாக்கல் செய்தார்.
டைஸ் அண்ட் கெமிக்கல் வர்த்தகர் கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது:சாயம், கெமிக்கல்களை கேன்கள், பாக்கெட்களிலிருந்து பிரித்தெடுத்து, சில்லரை வர்த்தகம் செய்வதற்கு தனியே லைசென்ஸ் வாங்க வேண்டும். அதாவது, சாயம், கெமிக்கல்களை நுகர்வோர் முன்னிலையில் பிரித்தெடுத்து பேக்கிங் செய்வதற்கு லைசென்ஸ் தேவையில்லை. ஆனால், சில்லரை வர்த்தகத்துக்காக பேக்கிங் செய்து வைத்து விற்பனை செய்யும்போது, லைசென்ஸ் பெற்றிருப்பது கட்டாயம்.இந்த லைசென்ஸை ஆண்டுதோறும் புதுப்பிக்க தேவையில்லை. ஆன்லைனில் விண்ணப்பித்து, இந்த லைசென்ஸ் பெறலாம்.
1972 களிலேயே இந்த விதிமுறை உள்ளது. தற்போதுதான் அரசு தரப்பில், லைசென்ஸ் பெறாதோர் மீதான கண்காணிப்பு, கட்டுப்பாடு, நடவடிக்கைகள் அதிகமாகியுள்ளன, என்றார்.தொடர்ந்து நடந்த கூட்டத்தில், சாயம் மற்றும் கெமிக்கல் விற்பனையாளர்கள் சங்கஉறுப்பினர் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும், இதற்காக உறுப்பினர் சேர்க்கை கமிட்டி அமைக்க வேண்டும், சாயம், கெமிக்கல் விற்பனையாளர்கள், ஆர்பிட்ரேஷன் கவுன்சிலை நாடி, வராக்கடன்களை வசூலிக்க வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. செயற்குழு உறுப்பினர் நாகேஷ் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X