பொது செய்தி

தமிழ்நாடு

எட்டு சென்ட் இடத்துக்குஆண்டுக்கு வாடகை ரூ.8

Updated : அக் 01, 2019 | Added : அக் 01, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
கொடைக்கானல்:கொடைக்கானல் ஏரியில் எட்டு சென்ட் இடத்திற்கு ஆண்டுக்கு ரூ.8 மட்டுமே வாடகை செலுத்தி வந்த படகு குழாமின் குத்தகையை கலெக்டர் விஜயலட்சுமி ரத்து செய்தார்.ஐந்து கி.மீ., பரப்பு கொண்ட கொடைக்கானல் ஏரி நகராட்சி பராமரிப்பில் உள்ளது. அதில் எட்டு சென்ட் இடத்தை 1921-ம் ஆண்டு வருவாய்த்துறை மூலம் தனியார் படகு குழாம் 49 ஆண்டு குத்தகைக்கு எடுத்தது. கட்டணமாக ஆண்டுக்கு ரூ. எட்டு
 எட்டு சென்ட் இடத்துக்குஆண்டுக்கு வாடகை ரூ.8

கொடைக்கானல்:கொடைக்கானல் ஏரியில் எட்டு சென்ட் இடத்திற்கு ஆண்டுக்கு ரூ.8 மட்டுமே வாடகை செலுத்தி வந்த படகு குழாமின் குத்தகையை கலெக்டர் விஜயலட்சுமி ரத்து செய்தார்.
ஐந்து கி.மீ., பரப்பு கொண்ட கொடைக்கானல் ஏரி நகராட்சி பராமரிப்பில் உள்ளது. அதில் எட்டு சென்ட் இடத்தை 1921-ம் ஆண்டு வருவாய்த்துறை மூலம் தனியார் படகு குழாம் 49 ஆண்டு குத்தகைக்கு எடுத்தது. கட்டணமாக ஆண்டுக்கு ரூ. எட்டு மட்டும் செலுத்தியது. 49 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் குத்தகையை நீட்டித்து பெற்றது. அந்த காலமும் நிறைவுற்றதையடுத்து நடப்பாண்டு மீண்டும் புதுப்பிக்க விண்ணப்பித்தனர். இதுகுறித்து நகராட்சிக்கும், வருவாய்த்துறைக்கும் மாறுபட்ட கருத்துகள் எழுந்தன. குறைவான வாடகை குறித்து சமூக வலைதளங்களிலும் பரவியது. இந்நிலையில் படகு குழாமின் குத்தகை நீட்டிப்பு விண்ணப்பத்தை கலெக்டர் விஜயலட்சுமி நிராகரித்தார். ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து அறிக்கை அளிக்க வருவாய்த்துறைக்கும் உத்தரவிட்டார். ஆர்.டி.ஓ., சுரேந்திரன்கூறுகையில், ''உரிமம் காலாவதியாகியுள்ளது. இது குறித்து படகு குழாமுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பு கிடைத்த 15 தினங்களில் இடத்தை ஒப்படைக்க வேண்டும். இல்லையேல் நகராட்சி மீட்பு நடவடிக்கையை துவங்கும்'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
01-அக்-201908:29:26 IST Report Abuse
Bhaskaran அதெல்லாம் அதிகாரிகளுக்கு லட்சக்கணக்கில் கப்பம் கட்டியிருப்பாங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X