முட்டுச்சந்தில் முகாமிட்டு வசூல்வேட்டை: மீண்டும் ரவுடியிசம் தலைதூக்கும் 'பேட்டை'

Added : அக் 01, 2019
Advertisement
மங்கலம் ரோட்டிலுள்ள நவக்கிரஹ விநாயகர் கோவிலில் நடந்து வரும் நவராத்திரி சிறப்பு வழிபாட்டுக்கு, சித்ராவும், மித்ராவும் சென்று கொண்டிருந்தனர்.அப்பகுதியிலுள்ள 'இ-சேவை' மையம் முன், மக்கள் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர்.அதைப்பார்த்த மித்ரா, ''இதுக்கு, 'வி.ஏ.ஓ., ஆபீஸ் பரவாயில்லை போல,'' என்றாள்.''ஏன்டீ, இப்படி சலிச்சுக்கிறே. 'இ-சேவை' மையத்துக்கு
சித்ரா, மித்ரா,மங்கலம் ரோட்டிலுள்ள நவக்கிரஹ விநாயகர் கோவிலில் நடந்து வரும் நவராத்திரி சிறப்பு வழிபாட்டுக்கு, சித்ராவும், மித்ராவும் சென்று கொண்டிருந்தனர்.
அப்பகுதியிலுள்ள 'இ-சேவை' மையம் முன், மக்கள் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர்.அதைப்பார்த்த மித்ரா, ''இதுக்கு, 'வி.ஏ.ஓ., ஆபீஸ் பரவாயில்லை போல,'' என்றாள்.
''ஏன்டீ, இப்படி சலிச்சுக்கிறே. 'இ-சேவை' மையத்துக்கு போனீயா?''
''ஆமாக்கா, இ-சேவை மையம் பூராவும், புரோக்கர்கள் ராஜ்யமா மாறிடுச்சு. கலெக்டர் ஆபீஸ், தாலுகா ஆபீஸ், கூட்டுறவு சேவை மையம்னு, அவங்களுக்குள்ளேயே பங்கு பிரிச்சுட்டு, ஆதார்கார்டு, ரேஷன்கார்டுனு கொடுத்திடறாங்க,''
''இது தெரியாம, மக்கள் போனால், 'சர்வர்' கிடைக்கலே. நாளைக்கு வாங்கன்னு, சொல்றாங்க. ஆனால், புரோக்கர்கள் வந்தா மட்டும், வேலை செய்றாங்க. குறிப்பா, சொல்லப்போனா, கலெக்டர் ஆபீசில்தான், புரோக்கர் நடமாட்டம் ரொம்ப அதிகமா இருக்குது. யாருமே கேட்க மாட்டாங்களான்னு, மக்கள் புலம்பறாங்க,'' விளக்கினாள் மித்ரா.

''மித்து, வடக்கு தாலுகா ஆபீசிலும், புரோக்கர்கள் கை ஓங்கிடுச்சுன்னு சொல்றாங்க,'' என்ற சித்ரா,
''காதும் காதும் வெச்ச மாதிரி வேலையை முடிங்கன்னு, சொல்லியும், ரகசியம் கசிந்து விட்டதாம்,'' என, புதிர் போட்டாள்.

''அப்படி, என்னக்கா? சிதம்பர ரகசியம்,''

''சி.எம்., சிறப்பு முகாம்ல, பட்டா கேட்ட ஆளுங்கட்சி விசுவாசிகளுக்கு, வீட்டுமனை கொடுக்க திட்டம் போட்டிருக்காங்க. அதுக்காக, புறம்போக்கு நிலம் எங்கேன்னு பார்த்துட்டு, பட்டா குடுத்திடுங்க'ன்னு, 'சவுத்' சொன்னாராம்,''

''ஆனா, இந்த விஷயம் கசிந்ததில், எதிர்க்கட்சி நிர்வாகிகள் உஷாராகி, மங்கலத்தில், மனுக்கள் பெறும் முகாம் நடத்தியிருக்காங்க; அதையும், உள்ளாட்சி தேர்தலை மனசில் வைச்சிட்டுத்தான், கட்சிக்காரங்க காய் நகர்த்தறாங்க. அதையும் தெரிஞ்சுகிட்டே மக்களும் மனு கொடுத்தாங்களாம்,'' என்றாள் சித்ரா.பழக்குடோன் செக்போஸ்ட் தாண்டி, இருவரும் சென்றனர்.

''அக்கா... எரியற வீட்ல, பிடுங்கறது மிச்சமுங்கற கதையா, போலீசார் பண்ண வேலை தெரியுமா?''

''இந்த கொடுமை எங்கே நடந்தது?''

''இங்க தான் பக்கத்தில, கோழிப்பண்ணையூரில்தான். அங்க, ஒரு கடையோட பூட்ட ஒடச்சு, பணம், பொருள் எல்லாம் திருடிட்டு போனாங்க. கடைக்காரர், போலீசில் கம்ப்ளைன்ட் கொடுத்தார்,''

''கடைக்காரர்கிட்ட, விசாரணைக்கு வந்த போலீசார், நிறைய பக்கம் போக வேண்டியதிருக்கு. அதனால, செலவுக்கு பணம் கொடுங்கன்னு நச்சரிச்சு, 2 ஆயிரத்தை வசூல் பண்ணிட்டாங்களாம். இதையெல்லாம், அதிகாரிங்க கேட்க மாட்டாங்களா?''என்று ஆவேசப்பட்டாள் மித்ரா.

''போலீஸ்காரங்க இப்படின்னா, கார்ப்ரேஷன்காரங்க பண்ணின வேலை தெரியுமா?''

''அப்படி என்ன பண்றாங்க?''

''கார்ப்ரேஷன்காரங்க, 33 கோடி ரூபாய்க்கு, மின் கட்டண பாக்கி வச்சிருக்காங்க. அரசு நிறுவனமே இப்டியிருந்தால், எப்படிடி? சிட்டியில, பாதி தெருவிளக்கு கணக்குல வராம, நேரடியா கனெக் ஷன் கொடுத்திட்டாங்க. பணம் கட்டலைனு, 'கட்'பண்ணிட்டு போனா, கார்ப்ரேஷன் ஆளுங்களே, நேரடியாக கனெக் ஷன் கொடுத்துக்கறாங்க. இப்படித்தான், கணக்கு, வழக்கு இல்லாம மின்வாரியத்துக்கு 'லாஸ்' பண்ணிட்டு இருக்காங்களாம்''

''அரசு துறைகளுக்குள் இப்டி இருந்தா, எப்படி நிர்வாகம் பண்றதாம்,'' சொன்ன சித்ரா, வண்டியை கோவில் வளாகத்தில் பார்க் செய்தாள்.கூட்டம் அதிகமாக இருந்ததால், அருகிலிருந்து ெஷட்டில் இருவரும் உட்கார்ந்தனர்.

''ஏன், மித்து. வட்டிக்கு கொடுக்க சொல்லி கொடுத்த பணத்தை எப்டி வாங்குறதுன்னு தெரியாம ஒரு போலீஸ்காரங்க தவிக்கிறாங்களாம்''என, சிரித்தாள் சித்ரா.

''அட, யாருங்க, யார்கிட்ட?'' மித்ரா ஆர்வமானாள்.

''போன மாசம், பைனான்ஸ்காரரை ஒரு கும்பல் கொலை செஞ்சாங்க. அவருடன், நிறைய போலீஸ்காரங்க, 'பிரெண்ட்ஷிப்' வச்சிருந்தாங்களாம். அதனால, நிறைய பேரு, அவர்கிட்ட பணத்தை கொடுத்து வட்டிக்கு கொடுக்க சொல்லியிருக்காங்க. திடீர்னு அவர் கொலை செய்யப்பட்டதால், பணத்தை யார் கிட்ட எப்படி வாங்குறதுன்னு, 'திருதிரு'ன்னு விழிக்கிறாங்களாம்,''

''அப்ப... திருடனுக்கு தேள் கொட்டுன மாதிரின்னு சொல்லுங்க'' கலகலவென சிரித்த மித்ரா, ''முட்டுச்சந்துக்குள்ள நின்று, வண்டியை புடிக்கிறாங்களாம், தெரியுங்களா?''என்றாள்.
''இந்த கூத்து எங்கடி நடக்குது?''

''வேலம்பாளையத்தை சேர்ந்த குட்டி அதிகாரி ஒருத்தர், கும்மிருட்டில, அதுவும் முட்டுச்சந்துக்குள்ள நின்னு, டூவீலரை பிடிச்சு 'பைன்' போடறாராம். ஒரு சிலதை, தன்னோட 'பாக்கெட்டில்' போட்டுக்கறாராம். உதவிக்கு போலீஸ்காரங்க யாருமில்லாம, ஒரு 'ஹோம்கார்டை' வச்சுகிட்டு, பிடிச்சுட்டு இருக்காரு. அந்த இடத்துல ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டுச்சுன்னா, என்ன பண்ணுவாங்க. கொஞ்சம் யோசிக்க வேண்டாமா,'' என்றாள் மித்ரா.

''அட.. 'ராமா... ராமா' இவங்களை எல்லாம் என்னன்னு சொல்றது. இதையெல்லாம், பெரிய அதிகாரி கண்டுபிடிச்சு, சாட்டைய சுழற்ற வேண்டாமா?''

''அக்கா.. நீங்க வேற. போலீசார் டிரான்ஸ்பரில், ஒரு சிலரை கண்டுக்காம விட்டுட்டாங்கன்னு, அவங்க மேலயே பலரும் புகார் வாசிக்கிறாங்க, தெரியுமா?''

''அப்டியா?''

''ரூரலில், ரொம்ப வருஷமாக இருந்தவங்களை, டிரான்ஸ்பர் செஞ்சாங்க. ஆனால், தனிப்பிரிவு மற்றும் ஆபீசில் உள்ள ஆட்களை கண்டுக்காம விட்டுட்டாங்க. சும்மா, கண் துடைப்புக்கு மட்டும் சிலரை டிரான்ஸ்பர் செஞ்சிட்டு, மத்தவங்களை அப்டியேவிட்டுட்டாங்க,''

''குறிப்பாக சொல்லோணும்னா, லிங்கேஸ்வரர் ஊர் சப்-டிவிஷனில் நங்கூரம் போட்டுட்டு, பலரும் அதே ஸ்டேஷனில் ஒர்க் பண்றாங்களாம்,''

''இதே மேட்டரில், எனக்கு ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருதுடி,''

''சொல்லுங்க்கா...''

''...மலை சப்-டிவிஷனில், அந்தந்த ஏரியாவிலயே டிரான்ஸ்பர் வர்ற மாதிரி, ஒருத்தர் செட்டப் பண்ணிட்டாராம். அதற்கு 'கைமாறாக' வைட்டமின் 'ப' வாங்கிட்டாராம். அவர் இப்டித்தான், ஆபீசில் உட்கார்ந்திட்டே பல 'ல' சம்பாரிச்சுட்டே இருக்காராம்,''

''அட... கொடுமையே,''அதிர்ச்சியடைந்தாள் மித்ரா.

''அதே ஏரியாவில் இன்னொரு மேட்டரை கேளு. தனியார் பஸ் ஓனர் ஒருத்தர், தன்னோட 'ஜீப்' டிரைவர் வேலைக்கு வராம இருந்ததால், ஆட்களை கூட்டிட்டு போயி, பொதுமக்கள் அதிகமாக கூடுற இடத்துல வச்சு, கொடூரமாக தாக்கினராம்,''

''இந்த விஷயம் ஸ்டேஷனுக்கு போயிருக்கு. ஆனா, அந்த அதிகாரி வழக்கம்போல 'உம்'ன்னு எதையுமே கண்டுக்கலையாம். இதனால, பஸ் ஓனர் முகம், ஆயிரம் வாட்ஸ் பல்ப் போல, 'பிரகாஷ'மாக மாறிடுச்சாம். அதே சப்-டிவிஷனில் 'சரக்கு, லாட்டரி, ரவுடியிசம்' என, சட்ட விரோத செயல் மீண்டும், மீண்டும் தலை துாக்கிடுச்சாம்,''

''அக்கா... இப்படி, சிட்டியிலும், ரூரலிலும், இப்படித்தான் நடக்குது. அதிகாரிங்க என்ன பண்றாங்கன்னே தெரியலை,'' என்ற மித்ரா, ''அக்கா... பூஜையாக போகுது. எந்திரிங்க போலாம்,'' என்றவுடன் சித்ரா எழுந்தாள்.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X