பாட்னா: பீஹாரில் கனமழை, வெள்ளம் காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாட்னாவை சேர்ந்த பேஷன் டிசைனிங் படிக்கும் மாணவி, வெள்ளத்தில் எடுத்த புகைப்படம், சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள், சராமரியாக விமர்சித்து வருகின்றனர்.
பீஹாரில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், பல இடங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. 16 மாவட்டங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணகளில் ஈடுபட தேசிய பேரிடர் மீட்பு படையினர். இரண்டு விமானப்படை ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

மழை தொடர்புடைய சம்பவங்களில், இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளனர். 11 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நாளை (அக்.,2) நடைபெறவிருந்த மஹாத்மா பிறந்த நாள் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பாட்னாவில் உள்ள இந்தியன் பேஷன் இன்ஸ்டிடியூட் கல்லூரியில் படிக்கும் அதிதி சிங் என்பவர், பாட்னாவில் வெள்ளம் சூழ்ந்த சாலையில் நின்றவாறு புகைப்படம் எடுத்துள்ளார்.

இந்த புகைப்படத்தை எடுத்த சவுரவ் அனுராஜ் என்பவர், '' பேரழிவில் தேவதை(Mermaid in Disaster)'' என்ற தலைப்பில் வெளியிட்டார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள், அதீதி சிங்கை சராமரியாக விமர்சிக்க துவங்கினர். சிலர் ஆதரவாகவும் கருத்து தெரிவித்தனர்.

இது தொடர்பாக சவுரவ் அனுராஜ் கூறுகையில், எளிதாக புகைப்படம் எடுத்தவில்லை. இதற்காக கடுமையாக உழைத்துள்ளோம். இதன் மூலம் ஒரு செய்தி பரவி வருகிறது. வீட்டு ஓய்வறையில் அமர்ந்து கொண்டு வீடியோ எடுப்பதும், மற்றவர்களை விமர்சிப்பதும் உதவாது என்றார்.


தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE