பொது செய்தி

இந்தியா

தேஜஸ் ரயில் தாமதமானால் இழப்பீடு: ஐ.ஆர்.சி.டி.சி முடிவு

Updated : அக் 01, 2019 | Added : அக் 01, 2019 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி : டில்லி -லக்னோ இடையே இயக்கவுள்ள தேஜஸ் ரயில் காலதாமதமாக வந்தால் பயணிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என ஐ.ஆர்.சி.டி.சி தெரிவித்துள்ளது.டில்லி - லக்னோ மற்றும் மும்பை - ஆமதாபாத் இடையே தேஜஸ் ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது. ரயில்களை தனியாரிடம் ஒப்படைக்க அரசு முயற்சிக்கும் நிலையில் அக்.,4 முதல் டில்லி - லக்னோ இடையே தேஜஸ் இயக்கப்பட

புதுடில்லி : டில்லி -லக்னோ இடையே இயக்கவுள்ள தேஜஸ் ரயில் காலதாமதமாக வந்தால் பயணிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என ஐ.ஆர்.சி.டி.சி தெரிவித்துள்ளது.



latest tamil news




டில்லி - லக்னோ மற்றும் மும்பை - ஆமதாபாத் இடையே தேஜஸ் ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது. ரயில்களை தனியாரிடம் ஒப்படைக்க அரசு முயற்சிக்கும் நிலையில் அக்.,4 முதல் டில்லி - லக்னோ இடையே தேஜஸ் இயக்கப்பட உள்ளது.


latest tamil news



மேலும் ரயில்கள் பல மணிநேரம் காலதாமதமாவது அடிக்கடி தொடர்ந்து வருவதால் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர். இதனை தடுக்கவும், பயணிகளின் சிரமத்தை குறைக்கவும் ரயில் தாமதத்துக்கு இழப்பீடு வழங்கப்படும் என ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது. அதன்படி தேஜஸ் ரயில் 1 மணி நேரம் தாமதமாக வந்தால் ரூ.100 , 2 மணி நேரம் தாமதமாக வந்தால் ரூ.250 என பயணிகளுக்கு இழப்பீடு வழங்க ஐ.ஆர்.சி.டி.சி முடிவு செய்துள்ளது.


latest tamil news




இதுமட்டுமின்றி இந்த தேஜசில் பயணிக்கும் பயணிகளுக்கும் அவர்களது உடமைக்கும் காப்பீடு வழங்குகிறது. தேஜஸ் ரயிலில் பயணிக்கும் பயணிகளின் உடமைகள் திருட்டு போனால் ரூ.1 லட்சம் மற்றும் பயணத்தின் போது பயணிகளுக்கு உயிரிழப்போ அல்லது விபத்து நேர்ந்தாலோ ரூ.25 லட்சம் வரையும் காப்பீடு வழங்கப்படும் எனவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


latest tamil news




இந்த ரயிலில் பயணிகளுக்கென்று சிறப்பு வசதிகள் செய்யப்பட இருக்கிறது. பயணிகள் தங்கள் உடமைகளுடன் பயணிக்கத் தேவையில்லை என்றும், அவர்களது உடமைகளை பயணத்தின் ஆரம்பத்தில் பெற்றுக்கொண்டு, பயணத்தின் முடிவில் மீண்டும் பயணிகளிடமே ஒப்படைக்கும் நடைமுறையயும் அறிமுகப்படுத்த இருக்கிறது.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pattikkaattaan - Muscat,ஓமன்
02-அக்-201912:00:05 IST Report Abuse
pattikkaattaan டிக்கெட் கட்டணம் எவ்வளவு என்று குறிப்பிடவில்லையே ... இன்றைய நிலையில் ரயில் கட்டணத்தைவிட குறைவாக விமான கட்டணம் உள்ளது , விரைவாகவும் செல்லலாம் ..
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
02-அக்-201909:44:43 IST Report Abuse
தமிழ்வேள் // தேஜஸ் ரயில் 1 மணி நேரம் தாமதமாக வந்தால் ரூ.100 , 2 மணி நேரம் தாமதமாக வந்தால் ரூ.250 என பயணிகளுக்கு இழப்பீடு //- அதாவது முதல் 59 நிமிடங்கள் வரை தாமதமானால் யாருக்கும் இழப்பீடு தரவேண்டியதில்லை ...அதுவரையிலான தாமதம் இயக்க காரணங்களுக்காக [ ஒர்க்கிங் டைம் டேபிள் என்பது பாசஞ்சர் டைம் டேபிளிலிருந்து மாறுபடும்- இது ரயில்வே இயக்க விதி ] அனுமதிக்கப்பட்டது .......எனது புரிதல் சரியா?
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
02-அக்-201909:32:58 IST Report Abuse
Sampath Kumar டிரைனே கேன்சல் ஆனா ? எம்புட்டு தருவீக ?/ இதில் தனியார் மயமாக்கல் வேறு ?/ விளங்கிடும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X