பொது செய்தி

இந்தியா

லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்த, 'இஸ்ரோ' முயற்சி

Updated : அக் 01, 2019 | Added : அக் 01, 2019 | கருத்துகள் (16)
Advertisement
சந்திரயான்-2, விக்ரம் லேண்டர், இஸ்ரோ, சிவன்

பெங்களூரு: ''சந்திரயான் - 2 விண்கலத்திலிருந்து பிரிந்த, லேண்டர் கருவியுடன், மீண்டும் தொடர்பை ஏற்படுத்தும் முயற்சியை கைவிடவில்லை,'' என, இந்திய விண்வெளி ஆய்வு மையமான, இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக, இஸ்ரோ விஞ்ஞானிகளால், சந்திரயான் - 2 விண்கலம், சமீபத்தில் விண்ணில் ஏவப்பட்டது. இதிலிருந்து பிரிந்து, நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்யும், விக்ரம் லேண்டர் கருவி, நிலவை மிகவும் நெருங்கிய நிலையில், திடீரென, அதிலிருந்து சிக்னல் கிடைக்கவில்லை. லேண்டர் கருவி, நிலவில் கடினமாக தரையிறங்கியதாக கூறப்பட்டது. லேண்டர் கருவியின் ஆயுட்காலம், பூமியின் நாட்களை கணக்கிடும்போது, 14 நாட்கள் தான். நிலவில் பகல் நேரமாக இருக்கும்போது, சூரிய சக்தியிலிருந்து இயங்கும் வகையில், லேண்டர் வடிவமைக்கப்பட்டிருந்தது.

இந்த, 14 நாட்கள் முடிவடைந்து விட்டதால், நிலவின் தென் துருவத்தில் இருள் சூழ்ந்துள்ளது. இதனால், லேண்டரின் பேட்டரி, இயங்காது. அதனுடன் தொடர்பை ஏற்படுத்துவது சிரமம் என, ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது.ஆனாலும், லேண்டர் கருவியுடன், மீண்டும் தொடர்பை ஏற்படுத்தும் முயற்சியில், இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.




இது குறித்து, இஸ்ரோ தலைவர் சிவன், கர்நாடக மாநிலம், பெங்களூரில் கூறியதாவது:நிலவின் தென் துருவத்தில், தற்போது இருள் நேரம் என்பதால், லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்துவது சிரமம். நிலவில் பகல் நேரம் வரும்போது, மீண்டும் தொடர்பை ஏற்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அந்த நேரத்துக்காக காத்திருக்கிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Naren - Chennai,இந்தியா
02-அக்-201913:18:08 IST Report Abuse
Naren நீங்களும் அரசியல்வாதிகள் போல் வெறும் அறிக்கைகள் விடாதீர்கள். அப்புறம் உங்கள் பேச்சுக்கு மதிப்பிருக்காது. செய்து விட்டு அப்புறம் பேசுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
02-அக்-201910:59:12 IST Report Abuse
ஆப்பு இனிமேல் தொடர்பு ஏற்படாது. பேசாம இது நேரு செஞ்ச சதி...இனிமே அப்படி நடக்க விடமாட்டேன்னு யாரையாவது விட்டு பேசச்சொல்லி ஊத்தி மூடிறலாம். அடுத்த விண்வெளி ப் பயணத்துல கவனம் செலுத்தலாம்.
Rate this:
Share this comment
Cancel
02-அக்-201909:46:47 IST Report Abuse
ssghomemadefoods வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X