'மத ஒற்றுமையை பாதிக்கும் வகையில் பேசியதில்லை'

Updated : அக் 02, 2019 | Added : அக் 02, 2019 | கருத்துகள் (20)
Advertisement

புதுடில்லி: 'அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில், மத ஒற்றுமையை பாதிக்கும் வகையில், நாங்கள் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை' என, உச்ச நீதிமன்றத்தில், ஹிந்து அமைப்புகள் தெரிவித்தன.






உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன், தினமும் நடந்து வருகிறது.

விசாரணையின், 35வது நாளான நேற்று(அக்.,1), ராம் லல்லா சார்பில் ஆஜரான வழக்கிறஞர் வைத்தியநாதன் கூறியதாவது: அயோத்தி வழக்கில், மத ஒற்றுமையை சீரழிக்கும் வகையில், ஹிந்து அமைப்புகள் தரப்பில், இதுவரை எந்த சர்ச்சைக்குரிய கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், முஸ்லிம் அமைப்புகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், 'அயோத்தியில், தொல்பொருள் ஆய்வுத்துறையின் அறிக்கை, அனுமானத்தில் கூறப்பட்டுள்ளது; இதை ஏற்க முடியாது.





பூமிக்கடியில் இருந்ததாக தொல்பொருள் ஆய்வுத்துறை கூறியுள்ளதை, தொழுகை கட்டடம்' என, கூறுகின்றனர். இது ஹிந்துக்களை அவமதிப்பதாக உள்ளது. தொழுகை கட்டடத்தை இடித்து விட்டு தான், பாபர் மசூதியை கட்டியதாக, இப்போது புதிதாக கூறுகின்றனர். தொல்பொருள் ஆய்வுத்துறை அறிக்கையை குறைகூறியவர்கள், சுவற்றை எப்படி தொழுகை கட்டடம் என, கூறுகின்றனர்? இவ்வாறு, வைத்தியநாதன் கூறினர்,.

இதற்கு முஸ்லிம் அமைப்புகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே, நீதிமன்றத்தில், கடும் வாக்குவாதம் நடந்தது.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P.K. GANESAN - chennai ,இந்தியா
03-அக்-201912:11:20 IST Report Abuse
P.K. GANESAN நீங்கள் இந்நேரம் பாக்கிலிருந்திருந்தால், பெரும்பான்மையினருக்கு எதிராக இப்பொழுது கூறியது போல் கருத்து கூறக்கூட முடிந்திருக்காது என்ற உணர்வே உங்களுக்கு தோன்றவில்லையா? இந்த மண்ணுக்கு விசுவாசமாகக் கூட நீங்கள் இல்லாதது வேதனையிலும் வேதனை. தயவு செயது நீங்கள் அந்த பாக்குக்கு ஓடி விடுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Amreen - Connecticut,யூ.எஸ்.ஏ
02-அக்-201910:52:58 IST Report Abuse
Amreen இந்தியாவின் உண்மையான வரலாறு சொல்வது என்ன ? 1 சிவ ஆலயமாக இருந்த தேஜோ மஹால் (ஒளி) தாஜ் மஹால் என்று மாற்றப்பட்டது. 2 மாலிக்கபூர் படையெடுப்பின் போது 1300 அப்பாவி ஹிந்துக்கள் ஸ்ரீரங்கம் கோவில் முன் வெட்டி சாய்க்கப்பட்டனர் 3 கோரி முஹம்மது படையெடுப்பின் போது அவன் தளபதி மதுரை மற்றும் பக்கத்து கிராமங்களில் 1000 கணக்கான பேரை மானபங்கம் செய்தான் குழந்தைகளை கொன்றான். அவன் பேரில் மதுரையில் கோரி பாளையம். வெட்க கேடு 4 சோமநாதர் ஆலயத்தின் முன் 50000 ஹிந்துக்கள் கோவிலுக்காக வெட்டி கொல்லப்பட்டனர் 5 காஷ்மீரில் மேற்கு வங்காளத்தில் ஒரு ஹிந்து majority நாட்டில் ஹிந்துக்கள் அவர்கள் இருப்பிடத்தில் வாழ முடியவில்லை. 6 திப்பு சுல்தான் கொடகு நாட்டில் 80000 மக்களை மதத்திற்காக கொலை செய்தான்.
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
02-அக்-201910:04:37 IST Report Abuse
A.George Alphonse நமது நாட்டு இந்து மதம் மிக மிக தொன்மையானது.இப்போதுள்ள கிறிஸ்துவர்களின் grandfathers and the great grand fathers were Hindus only. அந்த காலத்து ஆங்கிலேயர்கள் இவர்களுக்கு பொருள் உதவியும்,அருள் உதவியும்,கல்வி உதவியும் எந்த வித நிபந்தங்களுக்கும் ஆளாக்காமல் கொடுத்து ஜாதி பேதம் இன்றி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தினார்கள்.மனித சேவையே மகேஸன் சேவை என்று அவர்களின் மனித சேவையால் ஈர்க்கப்பட்டு அப்போதுள்ள இந்துக்கள் மனம் மாறி கிறிஸ்துவ மதத்திற்கு மாறினார்கள். யாரும் பலவந்தமாக கிறிஸ்துவ மதத்திற்கு மாற்ற படவில்லை. ஆங்கிலேயர்கள் நமது நாட்டை அநேக நூற்றாண்டுகள் ஆண்டு நாம் எல்லோரையும் அடிமைகளாக நடத்தினார்கள். பிறகு ஏன் எல்லோறையும் கிறிஸ்துவர்களாக மாற்றவில்லை.தற்போதுள்ள இந்துக்கள் இதை எல்லாம் பாராமல் கிறிஸ்துவர்களையும் கிறிஸ்டியானிடியையும் மிக மட்டமாகவும், கேவலமாகவும் பேசுகிறார்கள். மதம் என்பதுதனி மனிதனின்உரிமையும், ரைட்டும் ஆகும். இந்து மதமும், கிறிஸ்துவ மதமும் எதற்கும் வளைந்து கொடுத்து நல்லதையே போதிக்கும் ஒருநல்ல எடுத்துக்காட்டு மதங்கள்.
Rate this:
Share this comment
R.Subramanian - Chennai,இந்தியா
02-அக்-201914:27:02 IST Report Abuse
R.Subramanian கிறிஸ்துவர்கள் வலுக்கட்டாயமாக ஹிந்துக்களை மதமாற்றம் செய்த சம்பவங்கள் பல உள்ளது, மிக பெரிய உதாரணம் என்றால் கோவா.. எப்படி கிறிஸ்துவம் மிக பெரிய கொடூரங்களை செய்து பிரேசில் மெக்ஸிகோ போன்ற நாடுகளை கிறிஸ்துவமயம் ஆக்கியதோ அதற்கு சற்றும் குறையாத கொடூரங்களை கோவாவில் செய்து ஹிந்துக்களை மதம் மாற்றி இருக்கிறார்கள். முடிந்தால் கோவா வரலாறை எடுத்து படித்து பார்க்கவும்....
Rate this:
Share this comment
Anjankumar Raghavan - Chennai,இந்தியா
02-அக்-201916:35:11 IST Report Abuse
Anjankumar Raghavanகோவாவில் போர்ச்சுகீசியர்கள் கோவா இன்க்விசிஷன் என்ற சித்திரவதை, கொடுமைப் படுத்துதல், சொத்துக்களைச் சூறையாடுதல், அபகரித்தல், பெண்களை வன்புணர்ச்சி செய்தல் ஆகியன செய்து கிறிஸ்தவர்களாக மாற்றினர். 1545ஆம் ஆண்டு அதற்கான உத்தரவைக் கோரி புனித ஃப்ரான்சிஸ் சேவியர் போர்ச்சுகீசிய மன்னன் 3ஆம் ஜானுக்கு எழுதிய கடிதம் உள்ளது. போப் மூன்றாம் பால் இதற்கான Papal Bull எனப்படும் உத்தரவைப் பிறப்பித்தார். 1566இல் இந்துக் கோவிகளை இடித்துத் தள்ள எழுத்தில் இட்ட உத்தரவு உள்ளது. 1567இல் பல இந்துக் கோவில்கள் இடித்துத் தள்ளப்பட்டன. இந்து கவுடசரஸ்வத் பிரிவினரின் மடாலயம் இடிக்கப் பட்டது. அந்த மடத்து சாமியார்கள் சித்திரவதை செய்யப் பட்டனர். 1684இல் கொன்கணி பேசத் தடை விதிக்கப் பட்டது....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X