சாரதா வழக்கு : முன் ஜாமின் பெற்றார் ராஜிவ் குமார்

Updated : அக் 02, 2019 | Added : அக் 02, 2019 | கருத்துகள் (16)
Advertisement
சாரதா வழக்கு , முன் ஜாமின், பெற்றார், ராஜிவ் குமார்

கோல்கட்டா: சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில், குற்றம்சாட்டப்பட்டுள்ள, ஐ.பி.எஸ்., அதிகாரி, ராஜிவ் குமாருக்கு, முன் ஜாமின் வழங்கி, கோல்கட்டா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில், திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது.
இம்மாநிலத்தை சேர்ந்த, சாரதா நிதி நிறுவனம், 2014ல், அதிக வட்டி தருவதாக ஆசைகாட்டி, 2,500 கோடி ரூபாய், மக்கள் பணத்தை மோசடி செய்தது.





இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக செயல்பட்டு வந்த, கோல்கட்டா முன்னாள் கமிஷனர், ராஜிவ் குமாரிடம், சி.பி.ஐ., விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், ராஜிவ் குமாரை கைது செய்ய, பிறப்பிக்கப்பட்டு இருந்த இடைக்கால உத்தரவை ரத்து செய்து, கோல்கட்டா நீதிமன்றம், கடந்த மாதம் 13ல் உத்தரவிட்டது.
இதையடுத்து, விசாரணைக்கு ஆஜராகுமாறு, சி.பி.ஐ., தரப்பில் இருந்து, ராஜிவ் குமாருக்கு பலமுறை 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது. அவர், விடுப்பில் இருப்பதாக கூறி, நேரில் ஆஜராவதை தவிர்த்து வந்தார்.
இந்த வழக்கில் முன் ஜாமின் கோரி, கோல்கட்டா உயர் நீதிமன்றத்தில், ராஜிவ் குமார் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, 'இந்த வழக்கில், இதுவரை நடந்த விசாரணைக்கு, ராஜிவ் குமார் ஒத்துழைப்பு தந்துள்ளார். எனவே, அவரை 'கஸ்டடி'யில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதனால், அவருக்கு முன் ஜாமின் வழங்கப்படுகிறது' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
02-அக்-201920:07:39 IST Report Abuse
blocked user தலைமறைவாக உள்ளவர்களுக்கு ஜாமீன் கொடுத்து கோர்ட் தன்னைத்தானே அவமானப்படுத்திக்கொள்கிறது.
Rate this:
Share this comment
Cancel
jambukalyan - Chennai,இந்தியா
02-அக்-201916:15:00 IST Report Abuse
jambukalyan காசுக்கேற்ற நீதி?
Rate this:
Share this comment
Cancel
NewIndia_DigitalIndia - Rafale,பிரான்ஸ்
02-அக்-201916:11:29 IST Report Abuse
NewIndia_DigitalIndia இந்த ஊழலின் முக்கியமான ஆள் முகுல் ராய் , இப்போ பிஜேபி கட்சியின் தலைவன் . திருடனுக்கு மகுடம் என்ன தேச பக்தியோ ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X