அரசியல் செய்தி

தமிழ்நாடு

என்றென்றும் வாய்மையே வெல்லட்டும்: ஸ்டாலின்

Updated : அக் 03, 2019 | Added : அக் 02, 2019 | கருத்துகள் (45)
Share
Advertisement
சென்னை: 'மஹாத்மா காந்தியை போற்றுகிறேன்; என்றென்றும் வாய்மையே வெல்லட்டும்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், தன், டுவிட்டர் பக்கத்தில், பதிவு செய்து உள்ளார்.பதிவில், அவர் கூறியிருப்பதாவது: இந்நாளில், என் சக இந்தியர்களோடு இணைந்து, தேசத் தந்தை, மஹாத்மா காந்தியை போற்றுகிறேன். அகிம்சை, இரக்கத்தை கற்பித்த காந்தியடிகள், கருத்து வேறுபாடு, துன்பம், துயரங்களின் போது, மன உறுதியோடு,
என்றென்றும்,வாய்மை,வெல்லட்டும்,ஸ்டாலின்

சென்னை: 'மஹாத்மா காந்தியை போற்றுகிறேன்; என்றென்றும் வாய்மையே வெல்லட்டும்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், தன், டுவிட்டர் பக்கத்தில், பதிவு செய்து உள்ளார்.

பதிவில், அவர் கூறியிருப்பதாவது: இந்நாளில், என் சக இந்தியர்களோடு இணைந்து, தேசத் தந்தை, மஹாத்மா காந்தியை போற்றுகிறேன். அகிம்சை, இரக்கத்தை கற்பித்த காந்தியடிகள், கருத்து வேறுபாடு, துன்பம், துயரங்களின் போது, மன உறுதியோடு, அதை எதிர்கொள்ள வேண்டும் என, நமக்குக் கற்றுக் கொடுத்துள்ளார். முன் எப்போதையும் விட, காந்தியையும், இந்தியா குறித்த அவரது எண்ணத்தையும் நாம் நினைவில் நிறுத்த வேண்டும். என்றென்றும் வாய்மையே வெல்லட்டும். இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.

தி.மு.க., வெளியிட்ட அறிக்கை: தன்னை சந்திக்க வருபவர்கள், வாழ்த்துக் கூற வருபவர்கள், பொன்னாடைகளை தவிர்த்து, புத்தகங்களை வழங்க வேண்டும் என, தி.மு.க., வினருக்கு, ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். அதை ஏற்று, தமிழகம் முழுவதும் இருந்து, ஆயிரக்கணக்கான அரிய புத்தகங்கள், அறிவாலயத்தில் குவிந்தன. இந்த புத்தகங்களை, மாவட்ட வாரியாக உள்ள நுாலகங்களுக்கு, ஸ்டாலின் வழங்கி வருகிறார்.

சென்னை, ஆயிரம் விளக்கு சட்டசபை தொகுதி, 110 வது வட்டத்தில் உள்ள நுாலகம், சேத்துப்பட்டு, ஹாரிங்டன் ரோடு, ஏழாவது அவென்யூ, அப்பாசாமி தெருவில் உள்ள நுாலகம் ஆகியவற்றுக்கு, 700க்கும் மேற்பட்ட புத்தகங்களை, ஸ்டாலின், நேற்று வழங்கினார். அதேபோல, திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துார் ஊராட்சி, வெண்மணம் பூதுார் அரசு நுாலகத்திற்கு, 200க்கும் மேற்பட்ட புத்தகங்களை ஸ்டாலின் வழங்கினார். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
03-அக்-201921:06:17 IST Report Abuse
RajanRajan வாய்மைக்கும் திராவிட பரம்பரைக்கு என்னப்பா சம்பத்ந்தம். இப்படி பேசுறதெல்லாம் பகுத்தறிவுக்கு புறம்பா தெரியல்லே.வேணாம் சுடலை. இப்படி எல்லாம் வாய்மையே வெல்லும் என்று சொல்லாதே. அது ஜெய்கிறப்ப உன் மொத்த கூடாரமே காலி ஆய்டுமே. .
Rate this:
Cancel
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
03-அக்-201919:25:11 IST Report Abuse
தமிழ் மைந்தன் சமச்சீர் புத்தகம் ஏதாவது இருந்தா எடுத்து தமிழ்புத்தகத்தில் அந்தனர்கள் காலை கடன்களை முடித்து அப்படியே வேதம்கற்பிக்க வருவார்கள் என்று உள்ளதை......எப்படி படிப்பது என சொல்லி கொடுக்கலாமே.....
Rate this:
Cancel
jagan - Chennai,இலங்கை
03-அக்-201917:10:09 IST Report Abuse
jagan "வாய் மெய்யை வெல்லும்" - என்று சுடலையின் அப்பா 1970 களில் சொன்னது எவ்ளோ நிஜம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X