பொது செய்தி

தமிழ்நாடு

பிரதமர் - சீன அதிபர் சந்திப்பு: மாமல்லபுரத்தில் முதல்வர் ஆய்வு

Updated : அக் 03, 2019 | Added : அக் 02, 2019 | கருத்துகள் (6)
Advertisement
பிரதமர்,சீன அதிபர்,சந்திப்பு,மாமல்லபுரம்,முதல்வர்,ஆய்வு

மாமல்லபுரம் : இந்திய பிரதமர் - சீன அதிபர் இடையிலான பேச்சு, மாமல்லபுரத்தில் நடக்க உள்ளதால், அங்கு உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதல்வர் பழனிசாமி மாமல்லபுரம் சென்று, ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.

பிரதமர் நரேந்திர மோடி - சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர், மாமல்லபுரத்தில் சந்தித்து பேச உள்ளனர். இதற்காக இருவரும், அடுத்த வாரம், மாமல்லபுரம் வர உள்ளனர். மாமல்லபுரம் அடுத்த கோவளத்தில் உள்ள, 'தாஜ் பிஷர்மன்கோவ்' ஓட்டலில், பிரதமர் மோடியும், சென்னையில் உள்ள, 'ஐ.டி.சி., கிராண்டு சோழா' ஓட்டலில், சீன அதிபர் ஜின் பிங்கும் தங்க உள்ளனர். எனவே, மாமல்லபுரம் மற்றும் சென்னையில், உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பிரதமரும், சீன அதிபரும், வரும், 12, 13ம் தேதிகளில், மாமல்லபுரத்தில் உள்ள பழமை வாய்ந்த, பல்லவர் கால சிற்பங்களை கண்டு ரசிக்க உள்ளனர். இருவரும், கடற்கரை கோவிலை சுற்றி பார்க்க உள்ளனர். அதையொட்டி, தரை தள கோவில் பகுதியிலிருந்து, உயர் புல்வெளி பகுதிக்கு, தற்காலிக படிகள் அமைக்கப் பட்டுள்ளன. அவர்கள் அமர்ந்து, புராதன சின்னங்களை பார்வையிடும் இடம், இருவரும் அமர்ந்து உரையாடும் இடம், புகைப்படம் எடுக்கும் இடம், உணவு அருந்தும் இடம் ஆகியவை தேர்வு செய்யப்பட்டு, அப்பகுதிகளை மேம்படுத்தும் பணிகள் நடக்கின்றன.

ஐந்து ரதங்கள், அர்ச்சுனன் தபசு, வெண்ணெய் உருண்டை பாறை பகுதிகளும் புனரமைக்கப்படுகின்றன. சாலைகள் சீரமைப்பு உட்பட, அனைத்து பணிகளும் நடந்து வருகின்றன. நேற்று, முதல்வர் பழனிசாமி ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். அவருடன், துணை முதல்வர் பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் வந்தனர். மதியம், 1:00 மணிக்கு, அர்ச்சுனன் தபசு சிற்பம், ஐந்து ரதங்கள், கடற்கரை கோவில் பகுதிகளில், முதல்வர் ஆய்வு செய்தார்.

செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து, தலைமைச் செயலர் சண்முகம், முதல்வருக்கு விளக்கினார். முன்னதாக, மாமல்லபுரம், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக விடுதியில், அமைச்சர்கள், பல்வேறு துறை அதிகாரிகளுடன், முதல்வர் ஆலோசனை நடத்தினார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
03-அக்-201909:45:48 IST Report Abuse
Pugazh V சீனாவை "கம்மிகள்', 'சப்பமூக்கன்', 'சீனப் பொருட்களை வாங்காதே' என்று கூவிய பாஜகவின் வாசகர்களின் அசடு வழியும்.முகத்தில் கரி.பூசப்பட்டு விட்டது. கொஞ்ச நாளைக்கு முக்காடு போட்டுண்டிருங்கோ.
Rate this:
Share this comment
03-அக்-201913:41:30 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன்எதிரியாக இருந்தாலும் பக்கத்துக்கு நாடு என்றால் சந்தித்துதானே ஆகவேண்டும். வர்த்தகம் நடக்கிறதே இருதேசத்திற்கு இடையில். ஆனால் இந்திய தேசத்தின் நலனை கருதி சீன பொருட்களை தவிர்ப்பது தான் சிறந்தது. இங்கே உற்பத்தியாகும் பொருட்களை வாங்கினால் இங்குள்ள மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்கிற தேசப்பற்று இருந்தால் போதும். அது ஏது தீம்க கூட்டத்திற்கு...
Rate this:
Share this comment
Cancel
மணி - புதுகை,இந்தியா
03-அக்-201906:39:36 IST Report Abuse
மணி எல்லாம் தமிழக மக்களின் தலைவிதி...
Rate this:
Share this comment
Cancel
s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா
03-அக்-201904:49:34 IST Report Abuse
s.maria alphonse pandian இவர்களின் வரவால் மாமல்லபுரம் பகுதி சில நாட்கள் கொஞ்சம் கெடுபிடிகளை சந்தித்தாலும் , நல்ல சீரமைப்புகளை, வளர்ச்சிகளை இந்த பகுதிகள் அடையும் என்பது மட்டுமே இப்பகுதி மக்களுக்கான நலன்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X