அரசியல் செய்தி

தமிழ்நாடு

கிராம சபை கூட்டம்; பாதியில் வெளியேறினார் கமல்

Updated : அக் 03, 2019 | Added : அக் 03, 2019 | கருத்துகள் (39)
Share
Advertisement
கிராம சபை, கூட்டம், பாதியில், வெளியேறினார், கமல்

சென்னை: கிராம சபை கூட்டத்தில் ஏற்பட்ட சலசலப்பால் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் பாதியில் வெளியேறினார்.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஊராட்சிகளில் நேற்று கிராம சபை கூட்டங்கள் நடந்தன. திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு லைட்அவுஸ் குப்பம் ஊராட்சியில் நடந்த கூட்டத்தில் கமல் பங்கேற்றார். கூட்டத்தில், துறைமுக விரிவாக்கப் பணியால் 50 ஆயிரம் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக சிலர் முறையிட்டனர்.

அப்போது அ.தி.மு.க., முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சுமித்ரா குமார் பல்வேறு கருத்துக்களை கூறினார். இதில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. நீண்ட நேரமாகியும் சலசலப்பு ஓயாததால் கூட்டத்தில் இருந்து கமல் வெளியேறினார்.

பின் கமல் அளித்த பேட்டி: பழவேற்காடு அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறை இருப்பதாக கூறினர். டாக்டர்கள் இல்லாவிட்டால் மருத்துவமனைகள் வெறும் கட்டடங்கள்தான். எங்கள் மருத்துவ அணி சார்பில் இங்கு மாதம் ஒரு முறை மருத்துவ முகாம் நடத்தப்படும். அரசு மருத்துவமனைகளை கட்டினால் டாக்டர்களை பணிக்கு வர வைப்பது எங்கள் கடமையாக இருக்கும்.

திட்டங்களுக்கு ஹிந்தியில் பெயர் வைக்கும் போது, பெயரும் அதற்கான காரணமும் மக்களுக்கு புரிய வேண்டும். பழவேற்காடு ஏரிக்கு பாதிப்பு ஏற்பட்டால் சென்னை மக்கள் பாதிக்கப்படுவர். ஏரி போன்ற இடங்கள் கோட்டைக்கு அரணாக இருக்கும் இடம். இதை, ஏலம் போட்டு விற்று விடக்கூடாது. துறைமுகத்தை விரிவுபடுத்தலாம்; புதிய துறைமுகம் தேவையில்லை. மக்களுக்கு தேவையில்லை என்றால் மொழி பிரச்னையில் பின்வாங்கியது போல் இதிலும் பின்வாங்கி விடுங்கள். காந்தி படத்திற்கு மாலை போட்டு கும்பிட்டு பலன் இல்லை.

அவரது உறுதி மனதில் வேண்டும். காந்தியின் சகாப்தம் 1,000 ஆண்டுகள் வாழும். நாட்டுக்கு தியாகம் செய்ய நினைப்பவர்கள் எந்த வயதினராக இருந்தாலும் அவரை வணங்க வேண்டும். மதுக்கடைகளை மூடுவதால் கள்ளச்சாராயம் பெருகும். மக்கள் ஆரோக்கியம் கருதி மதுவை குறைப்பதற்கான பாடத்தை நடத்த அரசு முன்வர வேண்டும். தேர்தலில் நடக்கும் ஊழலால்தான் நாங்கள் இடைத்தேர்தலில் இருந்து பின்வாங்கினோம். இவ்வாறு கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Covaxin - Bharat Hindustan,இந்தியா
08-அக்-201921:41:21 IST Report Abuse
Covaxin எப்போது நாட்டை விட்டு வெளியேறுவார்...??
Rate this:
Cancel
Raja - Paris,பிரான்ஸ்
07-அக்-201918:30:32 IST Report Abuse
Raja இவன் ஒரு தெண்டம். இவனை பற்றி பேசுவதே வேஸ்ட்
Rate this:
Cancel
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
06-அக்-201916:33:52 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam அறிவு எப்போதும் வற்றாத நதியாக இருக்கவேண்டும். பரவைக் கடலாக இருக்கக் கூடாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X