சியோல்: அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்ட சில மணி நேரத்தில் வடகொரியா 2 ஏவுகணைகளை சோதனைசெய்துள்ளது.
கிழக்காசிய நாடான வட கொரியா தொடர்ந்து அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வந்ததற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. ஆயுதத் தயாரிப்பை நிறுத்திக் கொள்வது தொடர்பாக வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுடன் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.இதையடுத்து அணு ஆயுத சோதனைகளை, வட கொரியா நிறுத்தியது.

இந்த நிலையில் அணுஆயுத விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை வருகிற 5-ந்தேதி தொடங்கும் என வடகொரியா கடந்த சில தினங்களுக்கு முன் அறிவித்தது. அமெரிக்காவும் இதனை உறுதி செய்ததது.இந்த சூழ்நிலையில், வடகொரியா தெற்கு பகுதியில் உள்ள துறைமுக நகரமான வான்சன் நகரில் இருந்து உள்ளூர் நேரப்படி 7.17 மணிக்கு முதல் ஏவுகணையும், 7.27 மணிக்கு 2-வது ஏவுகணையும் ஏவப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த 2 ஏவுகணைகளும் 910 கி.மீ உயரத்துக்கு மேல் சென்று, 450 கி.மீ. தொலைவுக்கு பறந்து ஜப்பான் கடல் பகுதியில் விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தங்கள் நீர்பரப்பில் ஏவுகணைகள் விழுந்ததை ஜப்பானும் உறுதி செய்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE