சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

செவ்வாயில் கேட்கும் ஓசைகள்!

Added : அக் 03, 2019 | கருத்துகள் (9)
Share
Advertisement
செவ்வாயில் கேட்கும் ஓசைகள்!

செவ்வாய் கிரகத்தை வட்டமிட்ட மங்கள்யான், அங்கு வீசும் புயல் காட்சிகளை படம் படித்து பூமிக்கு அனுப்பி அசத்தியது. அதேபோல, அமெரிக்காவின் நாசா அனுப்பிய இன்சைட் என்ற ஊர்தி, அண்மையில் செவ்வாய் கிரகத்தில் ஏற்படும் ஓசைகளை பூமிக்கு அனுப்பிஉள்ளது.
செவ்வாயின் வளி மண்டலத்தில் ஏற்படும் காற்றுவீச்சின் ஓலம், செவ்வாய் மண், கற்கள் உரசும் ஓசை, இன்சைட் லேண்டர் ஊர்தியின் உலோகக் கருவிகள், வெப்பமடைந்து மீண்டும் குளிர்ச்சி அடையும்போது எழும் உலோக சப்தங்கள் என்று பல ஓசைகளை இன்சைட் ஊர்தி ஒலி வடிவில் அனுப்பியுள்ளது.
இவற்றோடு இதுவரை, செவ்வாய் தரைப் பரப்பில் ஏற்பட்ட, 21, நில அதிர்வுகளையும், இன்சைட்டிலுள்ள நில அதிர்வு அளக்கும் கருவி பதிவு செய்து அனுப்பியுள்ளது.
காட்சி யுகமான இந்தக் காலத்தில், வேற்றுகிரகத்தில் ஏற்படும் ஓசைகளைக் கேட்பதும் அதிசயமாக இருப்பது விநோதம் தான்.

Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மீனா தேவராஜன் - singapore,சிங்கப்பூர்
10-அக்-201906:33:56 IST Report Abuse
மீனா தேவராஜன் உதடுகள் சிவந்த செவ்வாயிலிருந்து ஒலி வருவது என்ன அதிசயமா? வாயில்தானே ஒலி வெளிவரும். எப்படி நம்ம ஜோக்.
Rate this:
Cancel
magan - london,யுனைடெட் கிங்டம்
08-அக்-201914:47:13 IST Report Abuse
magan மேலே குறிப்பிட்ட அணைத்து கருத்துக்களும் அறிவியல் பூர்வமான உண்மையான கருத்துக்கள் அருமை
Rate this:
Cancel
oce - kadappa,இந்தியா
07-அக்-201914:20:13 IST Report Abuse
oce வளி மண்டல காற்றுக்கு உயிர்ப்பு சக்தி இல்லை. ஆனால் பூமிக்கு அருகே புவி ஈர்ப்பு எல்லை வரை இருக்கும் காற்றில் பிராணவாயு கலந்துள்ளது. அது வரை மனிதர்கள் மூச்சு விடமுடியும்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X