இந்தியா-பாக்., போர் 125 மில்லியன் பேரை கொல்லும்| Dinamalar

இந்தியா-பாக்., போர் 125 மில்லியன் பேரை கொல்லும்

Updated : அக் 03, 2019 | Added : அக் 03, 2019 | கருத்துகள் (53)
Share
வாஷிங்டன் : இந்தியா- பாகிஸ்தான் இடையே அணுஆயுத போர் நடைபெற்றால் 125 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் உடனடியாக கொல்லப்படுவார்கள் என அமெரிக்காவில் நடத்தப்பட்ட புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியா-பாக்., இடையே போர் ஏற்பட்டால் 2025 ல் நிலைமை எப்படி இருக்கும் என்பது குறித்து அமெரிக்காவின் Alan Robock of Rutgers University-New Brunswick ஆகியவை இணைந்து ஆய்வு ஒன்றை நடத்தின. Journal Science Advances ல்

வாஷிங்டன் : இந்தியா- பாகிஸ்தான் இடையே அணுஆயுத போர் நடைபெற்றால் 125 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் உடனடியாக கொல்லப்படுவார்கள் என அமெரிக்காவில் நடத்தப்பட்ட புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



latest tamil news



இந்தியா-பாக்., இடையே போர் ஏற்பட்டால் 2025 ல் நிலைமை எப்படி இருக்கும் என்பது குறித்து அமெரிக்காவின் Alan Robock of Rutgers University-New Brunswick ஆகியவை இணைந்து ஆய்வு ஒன்றை நடத்தின. Journal Science Advances ல் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வு முடிவில், காஷ்மீர் விவகாரம் தொடர்பாக அண்டை நாடுகளான இந்தியா- பாக்., இடையே பல போர்கள் நடந்துள்ளன. இந்த பதற்றம் காரணமாக 2025 ம் ஆண்டில் இரு நாடுகளும் 400 முதல் 500 அணுஆயுதங்களை வைத்திருக்கும்.


latest tamil news


இவ்விரு நாடுகள் இடையே அணுஆயுத போர் ஏற்பட்டால் உடனடியாக 125 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் உடனடியாக கொல்லப்படுவார்கள். இந்த போர் உலகையே அணுஆயுதத்தில் உறைய வைக்கும். உலக அளவில் தாவர வளர்ச்சியும் 15 முதல் 30 சதவீதம் குறையும். கடலிலும் உயிரின உற்பத்தி 5 முதல் 15 சதவீதம் குறையும். போரினால் ஏற்படும் புகையின் தாக்கம் அடுத்த 10 ஆண்டுகளுக்கு வளிமண்டலத்தில் இருக்கும்.
9 நாடுகள் அணுஆயுதங்களை வைத்துள்ளன. ஆனால் இந்தியாவும்-பாக்., மட்டும் தான் தங்களின் படைகளின் வலிமையை மிக வேகமாக அதிகப்படுத்தி வருகின்றன. காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இரு நாடுகள் இடையே நிலவும் பதற்ற நிலை தொடர்ந்து நீடித்தால் அது அணுஆயுத போருக்கு வழிவகுக்கும்.


latest tamil news


2025 ல் 15 கிலோடன் வெடிக்கும் திறன் கொண்ட அணுஆயுதங்கள் இருக்கும். இது 1945 ல் உலகப் போரின் போது அமெரிக்காவால் ஜப்பானின் ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டிற்கு சமமானதாக இருக்கும். இதனால் ஏற்படும் நேரடி பாதிப்பு காரணமாக 50 முதல் 125 மில்லியன் பேர் உயிரிழப்பார்கள்.
உலக அளவில் பெரிய அளவிலான மக்கள் கொல்லப்படுவதற்கும், பட்டினி சாவு போன்ற அவலங்கள் நடைபெறவும் அதிக வாய்ப்புள்ளது. இவ்வாறு ஆய்வு முடிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X