சிறை உணவால் எடை குறைந்த சிதம்பரம்

Updated : அக் 03, 2019 | Added : அக் 03, 2019 | கருத்துகள் (74)
Advertisement

புதுடில்லி : ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், சிறை உணவு ஒத்துக் கொள்ளாததால் 4 கிலோ எடை குறைந்து விட்டதாக கூறி உள்ளார்.






திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிதம்பரம், தனது உடல்நிலை மற்றும் வயது ஆகியவற்றை காரணம் காட்டி ஜாமின் கேட்டு வருகிறார். ஆனால் அவருக்கு ஜாமின் வழங்க சிபிஐ எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.இதனால் சிதம்பரத்தின் ஜாமின் மனு 3 முறை நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் ஜாமின் கேட்டு டில்லி கோர்ட்டில் இன்று (அக்.,03) சிதம்பரம் தரப்பில் மீண்டும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.




சிதம்பரம் தனது ஜாமின் மனுவில், சிறை உணவு ஒத்துக் கொள்ளாததால் சிதம்பரத்தின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. இதனால் இதுவரை 4 கிலோ எடை குறைந்துள்ளார். சிபிஐ காவலுக்காக பரிந்துரைத்த 15 நாட்களையும் கடந்து அதிகபட்சமாக 42 நாட்கள் சிதம்பரம் சிறையில் கழித்துள்ளார். விசாரணைக்காக தான் அவரை காவலில் எடுத்தனர். அதை காவலில் எடுக்காமலும் விசாரிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.





ஜாமின் மறுக்கப்பட்ட மூன்றே நாட்களில் சிதம்பரம் மீண்டும் மனுத்தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. நீதிபதி என்.வி.ரமணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்த ஜாமின் மனு, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கிடையில் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைவதால், டில்லி சிபிஐ சிறப்பு கோர்ட்டில் சிதம்பரம் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.அவருக்கு அக்17 வரை காவல் நீட்டிக்கப்பட்டது


வீட்டு சாப்பாடுக்கு அனுமதி

இதற்கிடையே, வீட்டு சாப்பாடுக்கு அனுமதி கேட்ட சிதம்பரத்தின் கோரிக்கைக்கு, சிபிஐ பச்சைக் கொடி காட்டி உள்ளது இதையடுத்து அவருக்கு வீட்டு சாப்பாடு சாப்பிட அனுமதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

Advertisement




வாசகர் கருத்து (74)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
konanki - Chennai,இந்தியா
04-அக்-201910:23:47 IST Report Abuse
konanki . இதே நகரத்தார் சமூகத்தைச் சார்ந்த முருகப்பா குழுமம் இந்திய சட்ட திட்டங்கள் மற்றும் வியாபார நிபந்தனைகளுக்கு உட்பட்டு வர்த்தக நிறுவனம் போன்றவை தான் தமிழர்கள் முன்மாதிரியாக கொள்ள வேண்டியது.பதவியை துஷ்பிரயோகம் செய்து திருடி கொள்ளை அடித்து உலகம் முழுவதும் சொத்து சேர்க்கை செய்யும் திருட்டு குடும்பத்தை விலக்கி வைக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Vaanjinathan - Bangalore,இந்தியா
04-அக்-201910:14:58 IST Report Abuse
Vaanjinathan பேலியோ டயட், Keto டயட் போல, இப்பொழுது திஹார் டயட் என புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, 20 நாட்களில் பத்து கிலோ எடை குறையும் என்பதால் மக்கள் அனைவரும் இந்த உணவு முறையை பின்பற்றுங்கள்...
Rate this:
Share this comment
Cancel
04-அக்-201910:03:56 IST Report Abuse
மதுவந்தி எடை குறைவிற்கு ஜாமீன் தள்ளுபடி ஆகும் கவலை பணத்தால் சரி செய்ய முடியாத இட மாற்றம் இந்த வயதில் மகன் வேறு பிரச்சனைகளில்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X