பொது செய்தி

தமிழ்நாடு

தமிழக பொருளாதார வளர்ச்சி அபாரமாம்

Updated : அக் 03, 2019 | Added : அக் 03, 2019 | கருத்துகள் (23)
Advertisement

சென்னை : 2017-18 ம் நிதியாண்டில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி அபாரமாக உள்ளதாக தமிழக அரசின் புள்ளி விபர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு அங்கீகரித்த தமிழக அரசின் அறிக்கையில், 2017-18 ம் நிதியாண்டில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 8.09 சதவீதமாக உள்ளது. 2016 நவம்பர் மாதம் கொண்டு வரப்பட்ட ஜிஎஸ்டி.,யால் 2016-17 ம் நிதியாண்டில் மோசமடைந்திருந்த பொருளாதார வளர்ச்சி, 2017-18 ம் நிதியாண்டில் அபார வளர்ச்சியை பெற்றுள்ளது.
விவசாயம் இரட்டை இலக்கத்தில் 15.1 சதவீதம் வளர்ச்சியை பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து தொழில்துறை 7.75 சதவீதம் மற்றும் சேவை துறைகள் 6.55 சதவீதம் வளர்ச்சியை பெற்றுள்ளன.
2016-17 ம் நிதியாண்டில் வறட்சி மற்றும் ஜிஎஸ்டி.,யால் 4.3 சதவீதம் மட்டுமே வளர்ச்சியை பெற்றது. அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல்நல குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, திடீரென மரணமடைந்ததால் ஏற்பட்ட அரசியல் நிலையற்ற தன்மையும் 2016-17 ம் ஆண்டில் தமிழக பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டதற்கு முக்கிய காரணம்.
2017-18 ம் ஆண்டில் பண மதிப்பிழப்பால் ஏற்பட்ட பாதிப்பு குறைந்ததாலும், முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட்டதாலும், பொருளாதாரம் அபரிமித வளர்ச்சியை கண்டது. தமிழகத்தின் தொழில்துறை உற்பத்தியும் 9 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக அதிகரித்தது. தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதமும் அதிகரித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
04-அக்-201908:01:56 IST Report Abuse
ஆப்பு இந்தியப் பொருளாதாரமே ஏகத்துக்கு ஒசந்திருக்கு. இதுல தமிழகம் வளர்ச்சி யில் வியப்பென்ன? முதல்வர் சிறப்பாக முதலீடுகளை கொண்டுவருகிறார். என்ன, மக்களுக்கு பெரிய ஆதாயமில்லை... கார்ப்பரேட்கள் தான் சூப்பரா பொழைப்பாங்க.
Rate this:
Share this comment
Cancel
siriyaar - avinashi,இந்தியா
04-அக்-201905:08:30 IST Report Abuse
siriyaar many feel no development then why more north indians.keep arriving and become equal job holders in most companies. private companies expanding more and more development is happening but that development helps north workers instead of tamils since tamils in protesting jobs , conversion jobs and in Tasmac shops. Tamilnadu is growing but not tamils this is just because of DMK, DMK s rouge society.
Rate this:
Share this comment
Cancel
Nepolian S -  ( Posted via: Dinamalar Android App )
04-அக்-201904:36:55 IST Report Abuse
Nepolian S அள்ளி விடுங்கோ காசா பணமா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X