ஆந்திராவில் பூரண மதுவிலக்கு: ஜெகன் பிளான்

Updated : அக் 03, 2019 | Added : அக் 03, 2019 | கருத்துகள் (14)
Advertisement

அமராவதி : ஆந்திராவில், தனியார் நடத்தி வந்த மதுக்கடைகளை, மாநில அரசு ஏற்று நடத்த துவங்கியுள்ள நிலையில் ஓராண்டுக்குள் மாநிலத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த ஜெகன் மோகன் திட்டமிட்டுள்ளார்.






ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, மாநிலத்தில், மதுவிலக்கை முழுமையாக அமல்படுத்தும் நோக்கில், நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன் முதல்படியாக, ஆந்திராவில் இருந்த, 4,380 மதுக்கடைகள், 3,448 கடைகளாக குறைக்கப்பட்டன. மதுக்கடைகளை நடத்தி வந்த தனியார்களின் ஒப்பந்த காலம் முடிவடைந்த நிலையில், அக்.,1 முதல், அனைத்து மதுக்கடைகளும் மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

ஆந்திர துணை முதல்வர் நாராயணசாமி கூறியதாவது: ஆந்திர முதல்வராக ஜெகன் பதவியேற்ற பின், அனுமதி இல்லாமல் இயங்கிய 43 ஆயிரம் மதுக்கடைகள் மூடப்பட்டது. அக்., 1 முதல் தனியார் வசம் இருந்த மதுக்கடைகள் அனைத்தும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. முதலில், 10 மணி முதல் இரவு 9 மணி வரை மதுக்கடைகள் செயல்படும். பின்னர், காலை 11 மணி முதல் 7 மணி வரை என மதுக்கடைகள் செயல்படும் நேரம் குறைக்கப்படும். 3,500 மேலாளர்கள் 8,000 விற்பனையாளர்கள் பணிக்கு எடுக்கப்படுவார்கள். இரவில் சட்டவிரோதமாக மதுவிற்பனையை தடுக்க இரவு காவலாளிகள் நியமிக்கப்படுவார்கள்.





மதுபான பயன்பாட்டை படிப்படியாக குறைத்து, ஓராண்டுக்குள் அனைத்து மதுபான கடைகளும் மூடப்படும். தேர்தல் பிரசாரத்தின் போது, ஜெகன் அளித்த வாக்குறுதியின் படி, மது இல்லாத மாநிலமாக ஆந்திராவை மாற்றுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ganapathysubramanian Gopinathan - Bangalore,இந்தியா
04-அக்-201910:51:36 IST Report Abuse
Ganapathysubramanian Gopinathan நடக்குமாயின் நாட்டுக்கே வழி காட்டி... வாழ்க ஜெகன்
Rate this:
Share this comment
Cancel
j.shanmugavel - trichy,இந்தியா
04-அக்-201910:47:57 IST Report Abuse
j.shanmugavel சூப்பர் தலைவா எல்லா மாநிலம் முதல்வரும் இந்த முடிவு எடுத்தால் நல்ல இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
ashak - jubail,சவுதி அரேபியா
04-அக்-201910:24:25 IST Report Abuse
ashak ஆண்மகனை பாராட்டலாம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X