அரசியல் செய்தி

தமிழ்நாடு

சி.பி.ஐ., விசாரணை கேட்கிறார் ஸ்டாலின்

Updated : அக் 05, 2019 | Added : அக் 04, 2019 | கருத்துகள் (13)
Advertisement
D.M.K,M.K.Stalin,Stalin,தி.மு.க,ஸ்டாலின்

திருவாரூர்: ''நீட் தேர்வு ஆள்மாறாட்டம் குறித்து, சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும்,''என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறினார்.

திருவாரூரில், நேற்று அவர் அளித்த பேட்டி: மறைந்த, தி.மு.க., தலைவர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை குறிக்கும் வகையில், திருவாரூர் அருகே காட்டூரில், கலைஞர் அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது.


வேடிக்கை:

கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தன்று, அருங்காட்சியகத்தை திறக்க ஏற்பாடு செய்து வருகிறோம். 'நீட்' தேர்வு ஆள் மாறாட்டத்தில், 50 பேர் வரை ஈடுபட்டுள்ளனர்.நீட்தேர்வு கூடாது என்பது தான், தி,மு.க., வின் நிலைப்பாடு. நீட் தேர்வு ஆள்மாறாட்டம், அதிகாரிகளின் துணையோடு நடந்துள்ளது. இதை, அரசு வேடிக்கை பார்க்கிறது.

இதில், தமிழக தரகர்கள் மட்டும் இன்றி, வெளிமாநில தரகர்களும் ஈடுபட்டுள்ளனர். இதற்கு, சி.பி.சி.ஐ.டி., விசாரணை போதாது. சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும். தமிழக அரசு மருத்துவமனைகளில், 25 சதவீதம் காலி பணியிடங்கள் உள்ளன.


டெங்கு:

டாக்டர்கள் பணியிடங்கள் நிரப்பப் படாததால், டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. திருவாரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் உள்ள மருத்துவ உபகரணங்கள், புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்படுவதாக தகவல்கள் வருகின்றன; அதை கைவிட வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhagat Singh Dasan - Chennai,இந்தியா
04-அக்-201916:34:06 IST Report Abuse
Bhagat Singh Dasan அப்ப தானே திமுக காரனை கைது செய்தால் மத்திய அரசு பழிவாங்குகிறதுனு குதிக்க முடியும்
Rate this:
Share this comment
Cancel
Girija - Chennai,இந்தியா
04-அக்-201915:19:19 IST Report Abuse
Girija கமல் திமுக கட்சிகளுக்கு கோடிகள் கொடுத்தாததையும் விசாரிக்கணும்னு சொல்கிறார்.
Rate this:
Share this comment
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
04-அக்-201914:31:23 IST Report Abuse
Thiagarajan Kodandaraman அப்படியே அண்ணா நகர் ரமேஷ் சாதிக் பாச்ச பத்திரிக்கை ஊழியர் மரணம் தா கி கொலை சிதம்பரம் மாணவர் உதயகுமார் மரணம் அனிதா மரணம் கோவை மார்ட்டின் லாட்டரி ஊழியர் மரணம் எல்லாத்துக்கும் கேக்கலாமே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X