பொது செய்தி

இந்தியா

கர்தார்பூர் சாலை திறப்பு விழா; பாக்., செல்கிறார் மன்மோகன்

Updated : அக் 05, 2019 | Added : அக் 04, 2019 | கருத்துகள் (22)
Share
Advertisement
கர்தார்பூர்,சாலை,திறப்பு விழா,பாக்., செல்கிறார், மன்மோகன்

புதுடில்லி: பாகிஸ்தானில் உள்ள, கர்தார்பூர் பெருவழிச்சாலை திறப்பு விழாவில் கலந்து கொள்ள, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புக் கொண்டுள்ளதாக, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்தார்.


அழைப்பு:

பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் மாவட்டத்தில், சீக்கியர்களின் புனித தலமான, தேரா பாபா நானக் கோவில் உள்ளது. சீக்கியர்களின் மத குருவான குருநானக் வாழ்ந்த இடமான, குருத்வாரா தர்பார் சாஹிப், அண்டை நாடான பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூரில் உள்ளது. இந்த இரு கோவில்களையும் இணைக்கும் கர்தார்பூர் பெருவழி சாலை அமைக்கும் திட்டத்தை, இந்தியா - பாக்., இணைந்து தொடங்கின.

இந்த சாலை பணிகள் முடிவடைந்த நிலையில், குருநானக்கின் 550வது பிறந்த நாளான நவம்பர் 12ல், இந்த பெருவழி சாலை திறக்கப்படவுள்ளது. இந்த திறப்பு விழாவில் கலந்து கொள்ள, முன்னாள் பிரதமரும், காங்., மூத்த தலைவருமான மன்மோகன் சிங்குக்கு, பாக்., வெளியுறவுத்துறை அழைப்பு விடுத்தது.


வேண்டுகோள்:

'பிரதமராக பத்து ஆண்டுகள் பதவி வகித்தபோது கூட, பாக்., செல்லாத நான், இந்த விழாவுக்கு செல்ல மாட்டேன்' என மன்மோகன் தெரிவித்தார். இந்நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், நேற்று சந்தித்து பேசினார்.

அப்போது, கர்தார்பூர் சாலை திறப்பு விழாவுக்காக, பஞ்சாபில் இருந்து துவங்கும் ஊர்வலம் மற்றும், பாக்.,கில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டும் என, வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து, திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்கு, பாக்., வர, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புக் கொண்டதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.


ஜனாதிபதி, பிரதமர் அழைப்பை ஏற்றனர்!

கர்தார்பூர் பெருவழி சாலை திறப்பு விழாவையொட்டி, பஞ்சாபின் குருதாஸ்பூர் மாவட்டத்தில், நவம்பர் 9ல் துவங்கும் ஊர்வலத்தில் கலந்து கொள்ள, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆகியோருக்கு, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், நேரில் அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு, நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளதாக, அமரீந்தர் சிங் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
05-அக்-201911:25:50 IST Report Abuse
Malick Raja கடந்தகால சர்வாதிகாரிகளில் யாரும் நிலைத்ததில்லை ..சர்வாதிகாரிகள் போன்றவர்களும் இருந்ததில்லை .. சர்வாதிகாரிகளாக ஆக நினைத்தவர்களுக்கும் அழிவைத்தவிர ஒன்றுமில்லாமல் போனார்கள் .. மக்கள் சக்திக்கு இணையாக ஆளுமைகள் இருந்ததும் இல்லை இருக்கப்போவதுமில்லை .. சர்வாதிகாரிபோல மக்களால் ஆக்கப்படுவதுபோல உணருமுன்னே அதே மக்களால் அந்த சர்வாதிகாரி தூக்கி எறிந்ததையும் உலகம் கண்டதே .. ஆக யாகாவாராயினும் நாகாக்க சோகாப்பர் சொல்லிழுக்கு பட்டு ... என்பதை உணர்த்தப்படும்முன் உணர்வதே நல்லது ..மக்களுக்காக வாழ்ந்த யாரும் வீழ்ந்ததில்லை ..மாறாக சுபிட்சம் மக்களிடையே நிலைத்தது ..
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
05-அக்-201910:50:35 IST Report Abuse
Malick Raja கடந்தகால சர்வாதிகாரிகளில் யாரும் நிலைத்ததில்லை ..சார்வாதிகாரிகள் போன்றவர்களும் இருந்ததில்லை .. சர்வாதிகாரிகளாக ஆக நினைத்தவர்களுக்கும் அழிவைத்தவிர ஒன்றுமில்லாமல் போனார்கள் .. மக்கள் சக்திக்கு இணையாக ஆளுமைகள் இருந்ததும் இல்லை இருக்கப்போவதுமில்லை .. சர்வாதிகாரிபோல மக்களால் ஆக்கப்படுவதுபோல உணருமுன்னே அதே மக்களால் அந்த சர்வாதிகாரி தூக்கி எரிந்ததையும் உலகம் கண்டதே .. எனவே குறைக்கும் நாய்கள் கடிப்பதில்லை ..கடிக்கும் நாய்கள் வாழ்ந்ததும் இல்லை .. ஆக யாகாவாராயினும் நாகாக்க சோகாப்பர் சொல்லிழுக்கு பட்டு ... என்பதை கூலிப்படைகள் உணர்த்தப்படும்முன் உணர்வதே நல்லது
Rate this:
Cancel
oce - kadappa,இந்தியா
04-அக்-201915:50:08 IST Report Abuse
oce காங்கிரஸ்காரன் இந்தியாவை முஸ்லீம் நாடாக மாற்ற விருப்ப முள்ளவன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X