பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - சேலம்

Added : அக் 04, 2019
Share
Advertisement

சேதமடைந்த குடிநீர் தொட்டி: தலைவாசல், தெற்கு மணிவிழுந்தான், கிழக்கு வீதியிலுள்ள, குடிநீர் தொட்டி கட்டப்பட்டு, 30 ஆண்டுக்கு மேலான நிலையில், சுற்றுப்புற சுவர்களில், ஆங்காங்கே வெடிப்பு ஏற்பட்டுள்ளது. தினமும் காலை, தொட்டியில் நீரேற்றப்படும் நிலையில், விரிசல் வழியாக, தண்ணீர் கசிந்து வீணாகி வருகிறது. பல ஆண்டாக, தொட்டியை பராமரிக்காததால், அசுத்தமாக தண்ணீர் வருகிறது. செடிகள் வளர தொடங்கியுள்ளதால், கட்டடம் பலவீனமடையும் அபாயம் உள்ளதால், சீரமைக்க வேண்டும்.
'பார்' ஆக மாறியது போலீஸ் கட்டடம்: சேலம், உருக்காலை, மூன்றாவது நுழைவாயில் அருகே, பழைய இரும்பாலை போலீஸ் ஸ்டேஷன் செயல்பட்டது. இரு ஆண்டுக்கு முன், சர்க்கார் கொல்லப்பட்டிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. பழைய போலீஸ் ஸ்டேஷன் கட்டடம் பூட்டப்பட்டு, பயன்பாடின்றி உள்ளது. அதன் பின்புற கதவை, சிலர் உடைத்துவிட்டனர். இரவில், மர்ம நபர்கள், மது அருந்த பயன்படுத்துகின்றனர். இதனால், அந்த கட்டடத்தை இதர பயன்பாட்டுக்கு கொண்டுவர, நடவடிக்கை எடுப்பது அவசியம்.

விபத்தை தடுக்க பயன்படாத தடுப்பு: தலைவாசல் பஸ் ஸ்டாண்ட் பிரிவு சாலை சந்திப்பில், சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் வாகன ஓட்டிகள், விபத்தில் சிக்கினர். இதை தடுக்க, நெடுஞ்சாலை குறுக்கே, இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. அதில், இடைவெளியின்றி உள்ளதால், வாகனங்கள் வருவது, சாலையை கடப்பவருக்கு தெரிவதில்லை. இதனால், மீண்டும் விபத்து தொடர்வதால், இரும்பு தடுப்புக்குள் பார்த்தால், வாகனங்கள் தெரிய, இடைவெளி ஏற்படுத்த வேண்டும்.

மூடாத பள்ளம்; விபத்து அபாயம்: சங்ககிரி, தீரன்சின்னமலை சாலை வழியாக, தினமும், ஏராளமான வாகனங்கள் சென்று வந்தன. சாலை நடுவே, காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வீணானது. இதனால், குடிநீர் வாரிய அதிகாரிகள் பள்ளம் தோண்டி சீரமைப்பு பணியை முடித்தனர். ஆனால், ஒரு வாரமாகியும், பள்ளத்தை மூடாததால், வாகன ஓட்டிகள், ஒரு கி.மீ., தூரம் சுற்றி, பழைய இடைப்பாடி சாலையில் செல்கின்றனர். இரவில் வரும் வாகன ஓட்டிகள், தவறி விழுவதால், பள்ளத்தை மூட வேண்டும்.

சாலையில் ஓடும் சாக்கடை கால்வாய்: ஓமலூர், காமலாபுரம் பிரிவு அருகே, 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அங்கு, சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால், இரு வாரமாக பெய்த மழைநீர், தெருவில் தேங்கி நிற்கிறது. மேலும், பல வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவு நீரும் வழிந்தோடுகிறது. தற்போது காய்ச்சல் பரவி வரும் நிலையில், இப்படி அதிகாரிகளும் அலட்சியமாக உள்ளதால், மக்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. அதனால், உரிய நடவடிக்கை எடுப்பதோடு, கால்வாய் கட்ட வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X