பொது செய்தி

தமிழ்நாடு

திருவாரூரில் நடந்த வாகன சோதனை: 5 கிலோ தங்க நகைகள் பறிமுதல்

Added : அக் 04, 2019
Advertisement

திருவாரூர்: திருவாரூரில், நேற்று இரவு நடந்த வாகன சோதனையில், இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை சோதனை செய்ததில், அவர்களிடம் இருந்து, 5கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருவாரூர், மடப்புரம் பாலம் அருகில்,நேற்று இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை சோதனை செய்ததில், அவர்கள் கொண்டு வந்த, அட்டைபெட்டியில், 5 கிலோ தங்கம் இருந்தது தெரியவந்தது. இருவரில், ஒருவர் தப்பி ஓடிவிட்டார். மற்ற ஒருவரை திருவாரூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரித்ததில், திருவாரூர் மடப்புரத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பது தெரியவந்தது. தப்பி ஓடியவர், திருவாரூர் பேபிடாக்கீஸ் ரோட்டை சேர்ந்த சுரேஷ் என்பதும் தெரியவந்துள்ளது. இருவரும், திருச்சி லலிதா ஜுவல்லர்ஸ் நகைகடையில் கொள்ளை அடித்த கும்பலை சேர்ந்தவர்களா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். மேலும், தப்பி ஓடிய சுரே?ஷ போலீசார் தேடி வருகின்றனர். இருவருடனும், வேறு யாரேனும் தொடர்பு வைத்துள்ளனரா என்றும் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X